Posts

Showing posts from April, 2022
 கேள்வி : புதிதாக ஒரு வீடு கட்டும்முன், எந்தெந்த காரணிகளை வைத்து அதற்கான பட்ஜெட்டை ஓரளவுக்கு சிறப்பான முறையில் போட முடியும்? என் பதில் :  புதிதாக வீடு கட்டும் போது கீழ்க்கண்ட காரணிகளை வைத்து ஓரளவிற்கு சிறப்பான பட்ஜெட் போட இயலும். கட்டுமானத்துறையில் இருப்பதால் எனக்குத் தெரிந்த சில உத்திகளைக் கூறுகிறேன். வீட்டு மனையின் அளவு வீட்டில் எத்தனை பேர் குடியிருக்கப் போகிறீர்கள் உங்கள் கையிருப்பு வங்கிக்கடன் எதிர்பார்க்கும் தொகை வங்கிக்கடனை திரும்ப செலுத்தும் வழி கட்டுமானப் பொருட்களின் அப்போதைய மார்க்கெட் விலை. வீடு கட்ட இரு வழியான முறைகள் பின்பற்றுகின்றனர். மொத்த ஒப்பந்தம் ஆட்கூலி ஒப்பந்தம் மொத்த ஒப்பந்தத்தில் அனைத்து வேலைகள் மற்றும் பொருட்கள் ஒப்பந்ததாரைச் சார்ந்தது. அதாவது சராசரியாக ஒரு சதுர அடி ₹1600 முதல் பெறப்படுகிறது. சில நிபந்தனைகளுடன் ஆட்கூலி ஒப்பந்தத்தில் வேலைகள் அனைத்தும் ஒப்பந்ததாரரைச் சார்ந்தது. பொருட்கள் உரிமையாளரைச் சார்ந்தது. அதாவது ஒரு சதுர அடிக்கு இவ்வளவு தொகை என நிர்ணயித்து ஒப்பந்தம் போடுதல். ஆட்கூலி மட்டும் (ஊருக்கு ஊர் மாறுபடும் )எனில் ₹450 வரை ஒரு சதுர அடிக்கு பெறப்...
  வெயிலோடு மல்லுக்கட்டி அம்மா வீட்ல இருந்த காலத்ல வெய்லோடு மல்லுக்கட்னதே கெடயாது.. அம்மா திட்றதும் சரி வெயில் மேல அடிக்கறதும் சரி சூடு சொறன‌கெடயாது. ஒறைக்கவே ஒறைக்காது. இப்ப மாதிரி ஜூஸ் ஐஸ்கிரீம் ம்ல்லாம் கெடயாது. வாசல்ல போற கலர் கலரா குச்சி ஐஸ்தான், பால் ஐஸ் சேமியா, ஜவ்வரிசி போட்ட ஐஸ்.அதுவும்வீட்டு கொல்லையில் புளிய மரம் இருக்கும் அப்பா மரத்தில் ஏறி உலுக்குவார்.அதை பொரிக்கிகொடுத்தால் லஞ்சமாக ஐஸ் வாங்கி தருவார். அதுவும் என்னைக்காவது தான். தாகம் எடுத்தால் அலுக்க அலுக்க பானை தண்ணீர் தான். பழையது தொட்டுக்க உப்பு நார்த்தங்கா. அதில் இருக்கும் சாத்தூத்தம். ஊர்க்காரர்கள் மெயின் ரோடில் பானையில் நீர் மோர் கலக்கி வைத்திருப்பார்கள் அந்ந சுட்டெரிக்கும் வெயிலில் வாங்கிக் குடித்து விட்டு வருவோம். இப்ப மாதிரி இவ்வளவு வகையான பழங்கள் பார்த்ததே கிடையாது. குறைந்த செலவில் பனநுங்கு வாங்கி சாப்பிடுவதுண்டு. வெள்ளரிப்பழம் நிறைய வாங்கி சாப்பிடுவோம். உடலைக் குளிர்ச்சி செய்ய எண்ணெய் குளியல். வாரா வாரம் வெந்தயம் தலைக்கு தேய்த்துக் குளித்தல். செம்பருத்தி இலை அரைச்சு குளித்தல் அழுக தேங்காய் அரைத்து தலையில் தேய்த...
கேள்வி : நீங்கள் சுற்றுலா சென்ற இடங்களில் அங்கேயே வாழவேண்டும் என நினைத்த இடம் எது? என் பதில் :  1989-ல் வெளிவந்து சக்கை போடுபோட்ட "இதயத்தை திருடாதே" மணிரத்தினம், இளையராஜா, P.C.ஸ்ரீராமின் கூட்டணியின் சிறந்த திரைப்படம். விடுமுறையில் சித்தி வீட்டில் வீடியோ கேசட்டில் பார்த்ததாக நினைவு. மரணத்தை எதிர்பார்த்திருக்கும் ஹீரோ நாகர்ஜுனா, தன் கவலையை மறக்க ஊட்டிக்கு செல்கிறார். ஹீரோயின் கிரிஜா, அவருக்கும் இதயத்தில் ஒரு பிரச்சனை இருக்கின்றது. இருவரின் சந்திப்பும் அவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கின்றது என்பது தான் கதை. இசைஞானியின் பின்னணி இசையும், பாடல்களும் அற்புதம்!!! P.C.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, கேட்கவா வேண்டும், அதுவும் ஊட்டியை காண்பித்து இருக்கும் அழகே தனி. மேகம், பனிமூட்டம்.... இப்படத்தை பார்த்திருப்பீர்கள். மருந்துக்கு கூட நம்பமுடியாத, அப்பட்டமான புளுகு மூட்டை காதல் கதை, லூசு ஹீரோயின். பரவாயில்லை ஊட்டிக்காக மீண்டும் ஒருமுறை பாருங்கள். எங்களுக்கு புரிகிறதோ இல்லையோ K.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் இயக்கிய திரைப்படத்திற்கு மட்டுமே அப்பா அழைத்துச் செல்வார். "நாயகன்...
 இன்றய பயணம் ... இன்று பொன்னலம்மன் சோலை ...மாசித்துரை  குடும்பவிழா .. உடுமலைப்பேட்டை ..கரட்டுமடம் ..SS மஹால் .. இன்று நானும் செந்தில்ராம் மாப்பிள்ளையும் அருமை சொந்தங்களை சந்தித்து பேசியது மகிழ்ச்சி  மண்டபம் வந்தவுடன் அருமை கார்த்தி SR  தன் ஆன்மீக பயணத்தை முடித்துக்கொண்டு எங்களுடன் இணைந்துகொண்டார் .சில நிமிடங்களில் பயணம் பற்றி எங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். இன்றய சந்திப்பில் போடிநாயக்கனூர் அரண்மனை விமல் தம்பியை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ..தம்பியுடன் என் அறிமுகத்தை தெரிவித்துக்கொண்டேன் ..தம்பியுடன் பேசும்பொழுது ..அம்மையநாயக்கனூர் கம்பள மக்களின் தலைவர்  VS    ராஜா அவர்கள் ,ஒய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ணராஜா அவர்களின் சொந்தம் என்று தெரிந்துகொண்டேன் . காளாஞ்சி பொறியாளர்  உதயகுமார் தம்பியை இன்று முதன்முதலில் சந்தித்து பேசியது .தம்பியும் தான் பணிபுரியும் கணினி துறை சார்ந்த பணியை பற்றி சில தகவல்களை தெரிந்துகொண்டேன் ...இரண்டு பேரையும் எனக்கு அறிமுகப்படுத்திவைத்த கொடிங்கி யம்  கெமிஸ்ட்ரி செந்தில்குமார் மாப்பிளைக்கு நன்றிகள் . ...
Image
  அப்பாவின் அருமை ...மலரும் நினைவுகளுடன் (23.04.2018) வேலுச்சாமி என்கிற கிருஷ்ணசாமி தன் சிறு வயதிலே நடந்தே சென்று பள்ளிப் படிப்பை முடித்து பின்பு ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து மேலும் படிப்பை தொடர்ந்து நல்ல வேலையில் தன்னை உயர்த்திக்கொண்டு....தன் வாழ்நாளில் முதல் சன்மானத்தை அவர் அப்பாவிடம் கொடுத்த போது "வேண்டாம் உனக்கே செலவு இருக்கும் உனக்கு வேண்டியதை வாங்கி கொள் என்பாராம்" பின்பு தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்து தர..... அப்பா செலவு செய்ய தொடங்குகிறார்.... கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தனக்கு தேவையான பொருளை வாங்கி வைக்கிறார். தனக்கு ஒரு மகளோ/மகனோ பிறந்த பிறகு ஒளி வீசத்தொடங்கியதாக ஓர் உணர்வு... மகிழ்ச்சியோடு அப்பா பிள்ளையின் மீது அலாதியான பாசம் வைக்க தொடங்கிறார். அவர்கள் படிப்பதற்கு செலவு செய்கிறார் பின்பு பார்த்து பார்த்து தன் குழந்தைகளுக்கு செய்யும் அப்பா தனக்காக ஒரு செலவையும் செய்வதில்லை..ஏனோ!!! வளர்ந்தவுடன் மேற்படிப்புக்கு செலவு செய்யும் அப்பா.. (வெளிக்காட்டாத கஷ்டம் தன்னுள் பூட்டி வைத்துக்கொள்ளும் ரகசியம்) மகனோ /மகளோ வேலைக்கு செல்வது /கல்யாணம் செய்து வைப்பது என மீண்டும் செலவு செய்யும்...
  திண்டுக்கல்: ஆட்டம் பாட்டத்தில் மகிழ்ந்த பெருமாள்; வலுகட்டாயமாக மலையேற்றிய பக்தர்கள் மு.கார்த்திக்   ஊர்வலத்தில் பெருமாள்   பெருமாள் மக்களோடு மக்களாகத் திருவிழாவில் ஆட்டம் பாட்டத்தில் மகிழ்ந்ததால் மலையேறத் தயக்கம் காட்டுவதாகவும், அதனால் பெருமாளை வலுகட்டயாமாக பக்தர்கள் மலையேற்றுவதாகவும் கூறப்படும் நிகழ்வுடன் திருவிழா முடிந்தது.   திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கோ.காமாட்சிபுரத்தில் பழைமையான சென்றாய பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. விழாவில் ஊரின் அருகே உள்ள பெருமாள் மலையில் இருந்து வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இரண்டாவது நாள் தேவராட்டம், காவடியாட்டம் என ஆட்டம் பாட்டத்துடன் பெருமாள் வீதி உலா அழைத்துச் செல்லப்பட்டார். மூன்றாவது நாள் ராஜகம்பள சேவை விளையாட்டுகள் நடந்தன.   பெருமாள் இதையடுத்து நடந்த மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பெருமாள் ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று விடைபெற்றுகொள்வதாகக்கூறி மலையை நோக்கிப் புறப்பட்டார். ஆனால் பெருமாள் மக்களோடு மக்களா...
 திரு .சீனிவாசன் Msc, மாமா அவர்களிடம் இன்று பேசியது மிக்க மகிழ்ச்சி  புள்ளியியல் ஆய்வாளர் (ஓய்வு ) M வீர சின்னம்மாள் புரம்  மரிகுண்டு  தேனி மாவட்டம் ... வைஷ்ணவம் மிக துடிப்போடு வாழும் கிராமங்களில் கம்பள கிராமங்கள் முக்கியமானவை. எங்கு பார்த்தாலும் திரு நாமமும்.. கோவிந்தா கோசமும்.. மாமா அவர்களின் வைஷணவ பாடல்களையும் ஆவணப்படுத்தி வைக்கவேண்டும் .. சென்றாய பெருமாள் கோவிலில் பாடியது இன்று உலகம் முழுக்க முக நூலிலும் ..வாட்ஸப்பிலும் ..யூடூப்பிலும் ...தொழில்நுட்பம் மூலம் பயணிப்பது மிக்க மகிழ்ச்சி .. எனக்கு அறிமுகப்படுத்திய அன்பழகன் சாமிக்கண்ணு அண்ணாருக்கு நன்றிகள் . என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
 கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் கோவில்  வத்தலகுண்டு வரலாறு  ஸ்ரீசென்றாய பெருமாள்.... திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது கோட்டைப்பட்டி. இங்குள்ள மலையின் மீது கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீசென்றாய பெருமாள். சுமார் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீசென்றாய பெருமாள் திருக்கோயில் குறித்து ஒரு கதை உண்டு. முற்காலத்தில், இந்தப் பகுதி அடர்ந்த வனமாகத் திகழ்ந்ததாம். சென்னம நாயக்கர் என்பவர், தினமும் இங்கு ஆடு- மாடுகள் மேய்க்க வருவது வழக்கம். ஒரு நாள், அவரது பசுக்களில் ஒன்று காணாமல் போனது. காடு முழுவதும் தேடியலைந்த சென்னம நாயக்கர், இறுதியாக அருகில் இருந்த மலையில் ஏறி அதன் உச்சியை அடைந்தார். அங்கு... இதுவரை கன்று ஈனாத இவரது பசு பால் சொரிய, பெருமாளே அந்தப் பாலை அருந்திக் கொண்டிருந்தார்! பரவசம் அடைந்த சென்னம நாயக்கர், பெருமாளை வணங்கி நின்றார். அப்போது, ''இனி, இந்த மலையில்தான் வாசம் செய்யப் போகிறேன். என்னைப் பரிபாலிக்கும் உன்னை மட்டுமின்றி, உன் சந்ததியினரையும் நான் வாழ வைப்பேன்'' என்று அருள் புரிந்தார் பெருமாள். இதைக் கேட்ட சென்னம நாயக...
  சந்திப்பு ....08-04-2022 மதுரை  விஜயநகர பேரரசு பயணம் சந்திப்பு தம்பி முனைவர் சாமிநாதன்  (பொருளாதாரம் ) உடுமலையில் இருந்து செல்லும்பொழுது  எங்கு செல்கிறேனோ ..அந்த ஊரின் பெயரை பதிவிடுவது வழக்கம் .மதுரை பணி நிமித்தமாக சென்றபொழுது தம்பியிடம் இருந்து எனக்கு செய்தி அனுப்பி இருந்தார் ..வந்தவுடன் அழையுங்கள் என்று . என்னுடைய பணி நிமித்தமாக சந்தித்துவிட்டு வெளியில் வந்தவுடன் ..தம்பியிடம் அழைப்பு எங்கு இருக்கிறீர்கள் என்று .காலை உணவு 11 மணிக்கு முடித்துவிட்டு ..தம்பியும்  அவரின் மதுரை ஸ்மார்ட் சிட்டி தகவலுக்கு வெளியில் சென்றுவிட்டு அவரின் பணியும் முடித்துவிட்டு என்னுடன் எனது பணிக்கு இணைத்துக்கொண்டார் .. தம்பியும்  மதுரையில் பணி நிமித்தமாக எனக்கு வேண்டியதை மதியம் வரை உடன் இருந்து முடித்து கொடுத்தார் .பணி நிமித்தமாக செல்லும் வழியில் மதுரை மார்க்கெட் பகுதியில் இருக்கும் கலைச்சிற்பங்கள் இருக்க கூடிய மணி மண்டபம் இருக்கும் இடத்தை சுற்றி காண்பித்தார் ..மதுரை பலமுறை சென்றபொழுது இந்த மணிமண்டபம் கடைகள் சூழ்ந்து தெரியாதவாறு இருந்தது .இன்று உள்ளே சென்று மதுரை திருமலைநாயக்கர் சி...
 இன்று இனிய சந்திப்பு உடுமலை கட்டுமான பொறியாளர் சங்கம் புதிய பொறுப்பு பதவிகளுக்கு இன்றைய நிகழ்ச்சியில்  தமிழ்நாடு பாண்டிச்சேரி அந்தமான் நிகோபார் ..தலைவர் கே .ஜெகநாதன் அவர்களை சந்தித்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன் .. உடுமலையின் பற்றி நன்கு தெரிந்தவைத்து இருக்கிறேன் ..உங்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஊர் ..இந்த ஊரை பற்றி வரலாறு நூல் வெளியிட்டு இருக்கிறீர்கள் ..தொன்மை வாய்ந்த ஊர் ..சிறப்புகளை கூறியது மிக்க மகிழ்ச்சி ...ஜெகநாதன் அவர்களின் ஊர் தேனீ என்றவுடன் ..நமது நீதி அரசர் வடவீரநாயக்கன்பட்டி தங்கராஜ் அய்யா அவர்கள் எனது உறவினர் என்று கூறி என்னை அறிமுக படித்திக்கொண்டேன் ..மிக்க மகிழ்ச்சி ..கம்பளத்து நாயக்கர் ..கூட்டுக்குடும்பம் பெருமை வாய்ந்தது  எங்கள் நண்பர்களுடன் தெரிவித்து அய்யா நீதி அரசரை நன்கு தெரியும் ..மாப்பிளை அரண்மனை சுப்பு  அவர்களையும் நன்கு தெரியும் என்று கூடுதல் செய்தி சொல்லி மகிழ்ந்தார் ...ஜெகன்நாதன் அவர்களின் மனைவி ..அரசு வழக்கறிஞர் தேனியில் பணிபுரிந்து வருகிறார் என்னிடம் தெரிவித்தார் ...வரும் 16 ம் தேதி தென்கொங்கின் தொன்மங்கள் நூல் வெளியீட்டு நிக...
 இன்று அழைப்பிதழ் ..உடுமலை கட்டுமான பொறியாளர் சங்கம் சார்பில் நன்றி சார்  கோவையில் இருக்கும் பொழுது மாதம் மூன்று ..நான்கு நிகழ்வுகள் அழைப்பிதழ் வந்துவிடும் ..கட்டுமானத்தின் நிகழ்வுகள் ..புதிய வாடிக்கையாளர்கள் சந்திப்பு .புதிய கட்டுமான தொழில்நுட்பத்தில் இன்றய பயன்பாடுகள் ..நான் சந்திக்கும் வாடிக்கையாளர்களுக்கு பகிர்வதற்கு மிகுந்த பயனுள்ள நிகழ்வாக இருக்கும் . தற்பொழுது உடுமலையிலும்  உடுமலை கட்டுமான பொறியாளர் சங்கம்  செயல்படுவது ..உடுமலை மக்களுக்கும் ..பயனுள்ளதாக இருக்கும் .. நன்றி  சிவக்குமார் VK  Sivakumar.V.K Home Loan Consultant (Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell)  Coimbatore,Pollachi, Udamalpet Mobile --09944066681 Call or sms siva19732001@gmail.com
கிராமத்து அத்தியாயம் .. மக்களின் வாழ்வியல் .. ஆற்று குளியல் .. ஆற்று நீரில் படுத்து உருண்டு உற்சாகமாக குளியல் ! குளித்தால் தலையோடு சேர்த்துதான் குளிக்கவேண்டும். முழு உடலிலும் நீர் படவேண்டும். இல்லையென்றால் குளிக்கவேக்கூடாது. உடலுக்கு மட்டும் குளிப்பதால், ஆரோக்கியத்திற்கு உடலுக்கு கேடு வரும். அது எப்படி ?  நாம் உடலுக்கு மட்டும் குளிக்கும்போது உடலின் வெப்பநிலை மாறுகிறது. அதை சமாளிப்பதற்கு தலையிலுள்ள அனைத்து செல்களும் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். ஏனென்றால் கழுத்துக்குமேலே தொண்டை,தாடை,மூளைப்பகுதி ஆகிய அனைத்தும் உடலிலுள்ள அனைத்து செல்களின் வெப்பநிலையை சமன் செய்ய அதிக வேலை செய்யவேண்டும். எனவே தலைப்பகுதி கடுமையான வெப்பத்திற்கு மாறுகிறது. எனவேதான் முடிகொட்டுதல், டென்சன், கோபம், மனோரீதியான நோய்கள், தூக்கமின்மை, மைக்ரேன், தலைவலி, சைனஸ் போன்ற பல பிரச்சனைகள் மனிதனுக்கு வருகிறது. பொடுகு போன்ற பிரச்னையும் வருகிறது. எனவே குளித்தால் தலையோடு குளிக்கவேண்டும். இல்லையென்றால் குளிக்கக்கூடாது.
கேள்வி :  நாற்பதுகளில் உள்ளவர்களை ஐ.டி துறையில் மற்றும் மார்க்கெட்டிங்  பெரும்பாலும் வேலையை விட்டு நீக்கி இளையவர்களை பணியில் அமர்த்துகிறார்கள் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்? பதில் :  இந்த துறையில் பல ஆண்டுகளாக (26+) பணிபுரிந்த அனுபவத்திலும், அதே 40களில் (46+) வயது வரம்பில் இருப்பதனாலும், இதற்கு விடையளிக்க நான் தகுதியானவன். அனைத்து 40+ வயதானவர்களையும் அலாக்காக தூக்கி எறிவதில்லை. நமக்குத் தனித்தன்மை இருந்தால் நிமிர்ந்து நடை போடலாம். எனக்குத் தெரிந்தவரை இந்த வயது வரம்பிலுள்ள சிலர் தங்கள் வேலைகளை இழப்பதற்கான காரணங்கள், 1. தமது திறமையை வளர்த்துக்கொள்வதில்லை. இந்த துறை கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அதி வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த தொழில்நுட்பங்கள் தற்பொழுது தேவை குறைந்தவையாக மாறிவிட்டன (உதாரணமாக Oracle, PLSQL…). ஏன் Java வில் கூட தற்பொழுது Fullstack தொழில்நுட்பத்திற்குத் தான் மவுசு அதிகம். இவ்வாறான 'பழைய' தொழில்நுட்பங்களை மட்டுமே தெரிந்து வைத்துள்ளவர்கள் காலரை தூக்கிவிட்டு நடக்க முடியாது. எனவே, அவ்வப்பொழுது (2-3 வருடங்களுக்கு ...