சந்திப்பு ....08-04-2022 மதுரை விஜயநகர பேரரசு பயணம்
சந்திப்பு தம்பி முனைவர் சாமிநாதன் (பொருளாதாரம் )
உடுமலையில் இருந்து செல்லும்பொழுது எங்கு செல்கிறேனோ ..அந்த ஊரின் பெயரை பதிவிடுவது வழக்கம் .மதுரை பணி நிமித்தமாக சென்றபொழுது தம்பியிடம் இருந்து எனக்கு செய்தி அனுப்பி இருந்தார் ..வந்தவுடன் அழையுங்கள் என்று . என்னுடைய பணி நிமித்தமாக சந்தித்துவிட்டு வெளியில் வந்தவுடன் ..தம்பியிடம் அழைப்பு எங்கு இருக்கிறீர்கள் என்று .காலை உணவு 11 மணிக்கு முடித்துவிட்டு ..தம்பியும் அவரின் மதுரை ஸ்மார்ட் சிட்டி தகவலுக்கு வெளியில் சென்றுவிட்டு அவரின் பணியும் முடித்துவிட்டு என்னுடன் எனது பணிக்கு இணைத்துக்கொண்டார் ..
தம்பியும் மதுரையில் பணி நிமித்தமாக எனக்கு வேண்டியதை மதியம் வரை உடன் இருந்து முடித்து கொடுத்தார் .பணி நிமித்தமாக செல்லும் வழியில் மதுரை மார்க்கெட் பகுதியில் இருக்கும் கலைச்சிற்பங்கள் இருக்க கூடிய மணி மண்டபம் இருக்கும் இடத்தை சுற்றி காண்பித்தார் ..மதுரை பலமுறை சென்றபொழுது இந்த மணிமண்டபம் கடைகள் சூழ்ந்து தெரியாதவாறு இருந்தது .இன்று உள்ளே சென்று மதுரை திருமலைநாயக்கர் சிற்பங்கள் ..ஆழி சிற்பங்கள் என்று கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.தம்பியும் வருங்காலத்தில் வரலாற்று ஆய்வாளராக வருவார் என்று எதிர்பார்க்கிறேன் ..
தம்பியும் பள்ளிப்படிப்பு ..சோழவந்தானிலும் ..கல்லூரி படிப்பு மதுர கல்லூரியில் B A இளநிலை ,முதுநிலை பட்டப்படிப்பு ம் படித்துள்ளார் .முது முதுநிலை (Dr ) படிப்பு முடியும் தருவாயில் உள்ளார் ..அவரின் முதுநிலை ஆய்வு (பொருளாதாரம் ) மதுரை பகுதியில் விளையும் மாம்பழம் கனிகள் சார்ந்தது ..அதனை சுருக்கமாக என்னிடம் செய்திகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. அவரின் தாத்தா ,தந்தை ..அண்ணண் குடும்ப உறுப்பினர்களையும் அவரிடம் கேட்டு தெரிந்துகொண்டேன் . நமது கம்பளத்து முன்னோர்கள் சமுதாய வரலாறுகளையும் என்னிடம் பகிர்ந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி ..நம் உடுமலை பகுதி சொந்தங்களையும் ,உடுமலையின் வரலாற்று செய்திகளையும் பகிர்ந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி ..நிறைவாக உடுமலையில் தென்கொங்கின் தொன்மங்கள் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தருமாறு அழைப்பிதழயும் கொடுத்தது மிக்க மகிழ்ச்சி .
மதுரை விஜயநகர பேரரசு பயணம் அற்புதமாக அமைந்தது .
தம்பி சாமிநாதன் வாழ்க்கையில் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
Comments
Post a Comment