பொறியாளன்.... என்ற பொதுப் பெயர் கொண்டவர்கள் நாங்கள் ....
Cocena....(Coimbatore) பொறியாளன்.... என்ற பொதுப் பெயர் கொண்டவர்கள் நாங்கள் .... எத்துணை துறைகள் இருக்கட்டும் அத்துணை துறைகளுக்கும் என்றும் துணை எங்கள் துறை .... அதிக பெண் பிள்ளை கொண்டவர்கள் நாங்கள் ; ஒவ்வொரு கட்டிடமும் எங்களுக்கு பெண் பிள்ளைதான் .... பார்த்து , பார்த்து வளர்த்து கட்டிக்கொடுத்து( கட்டி) முடித்து தொலைவில் இருந்து ரசிக்கும் தருணம் ....!!!! எங்கள் பிறப்பின் பலனை அடைந்த மகிழ்ச்சி ...!! பலரின் வாழ்க்கை லட்சியம்,கனவு சொந்த வீடு ... ஒட்டுமொத்த கனவையும் எங்கள் கைகளில் நம்பிக்கொடுத்துவிட்டுச் செல்வார்கள் . கட்டி முடிப்பதற்குள் இன்னொரு பிறவி எடுப்போம்.... தாய் , சேயை பெற்றெடுப்பது போன்று கட்டிடத்தை கட்டி முடிப்போம்..!!! உயிர் பிறிந்து போகலாம் உடலைவிட்டு புகழ் மறைந்து போகாது இந்த மண்ணை விட்டு ....!!! கடவுள் தூணிலும் இருப்பான் , துரும்பிலும் இருப்பான் ..... நாங்கள் தூணை கொடுத்தோம் ; துரும்பை தூணாகவும் கொடுத்தோம்.....!!! மண்ணை வைத்து மனிதனை படைத்தான் கடவுள் ..!! அதே மண்ணை வைத்து இருப்பிடம் படைத்தான் பொறியாளன்- கடவுளுக்கும். கொத்தனாரும்,சித்தாளும் கூட பொறியாளர் தான் - அனுபவ பொற...