வரலாறு சொல்லும் பழங்கால கோவில்; அழகு மிளிரும் சிலைகளின் ஆச்சரியம் !
வரலாறு சொல்லும் பழங்கால கோவில்; அழகு மிளிரும் சிலைகளின் ஆச்சரியம் ! உடுமலை அருகே, பழங்கால வரலாற்றையும், தொன்மை வழிபாட்டையும், தாங்கி நிற்கும், கோவிலை தொல்லியல் துறை வழிகாட்டுதலுடன், புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர். உடுமலை அருகே கொங்கலக்குறிச்சியில் பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. அரிய வகை மரங்களை, சுற்றுச்சுவராக கொண்டு, வளாகத்தில், கிணற்றுடன் காணப்படும் இக்கோவில், பல்வேறு வரலாற்று தகவல்களை இன்றும் இளைய தலைமுறையினருக்கு வெளிப்படுத்தி வருகிறது. இதன் பழமையை வெளிப்படுத்த, கருவறை நேராக உள்ள நுழைவாயிலில், பெரிய கற்கள் நடப்பட்டு, அதன் வழியாக பக்தர்கள் உள்ளே வருவது போன்ற பல்வேறு கட்டமைப்புகளை கூறலாம்.சிலிர்க்க வைக்கும் சிலைகள்கோவிலில் உள்ள செல்லாண்டியம்மன் சிலை தொன்மை வாய்ந்ததாகும். அஷ்ட துர்க்கை எனப்படும் வடிவமைப்பில், கருவறையில் அம்மன் சிலை உள்ளது. முன்கோபுரத்தின் மேற்பகுதி முழுவதும் பெரிய கற்களை அடுக்கி, சுண்ணாம்பு காரையால், பூசப்பட்டுள்ளது. கோபுரமும், இத்தகைய கட்டுமான பொருட்களை கொண்டே கட்டப்பட்டுள்ளது. இதனால், கோவிலுக்குள் எப்போதும், ஒரே...