டேபிள் மேனர்ஸ்...
டேபிள் மேனர்ஸ்... இன்று நாம் பார்க்க போகும் சப்ஜெக்ட் டேபிள் மேனர்ஸ். இது மிகவும் முக்கியமான ஒன்றூ. சாதாரண ரெஸ்டாரன்டுக்கு போனாலும் நம் டேபிள் மேனர்ஸை கண்டிப்பாக பின்பற்றினால் மிகவும் நல்லது. முதலில் நம்மை டேபிளுக்கு அழைத்து சென்று அமர வைத்த உடன் நாம் டேபிளில் கானும் விஷயம் நேப்கின், ஃபோர்க், ஸ்பூன், கத்தி. முதலில் நாப்கினை மடியில் போட்டு கொள்ளவும். சிறியவர்களுக்கு கழுத்தில் சொருகிவிட்டு ஹாங்கிங் நாப்கின் போல் கட்டவும். டேபிளில் இருக்கு கத்தி,ஃபோர்க், ஸ்பூன் இடம் மாற்றாதீர்கள். முதலில் புஃபே சாப்பாடு பற்றி பார்ப்போம். முதலில் டேபிளில் ஒரு குவார்ட்டர் பிளேட் இருக்கும் இது பிரட், நான் போன்றவை வைக்கவேண்டும். முனியான்டி விலாஸ் மாதிரி எலும்பு, மீன் முள்ளை அதில் வைக்க வேண்டாம். இது மிக முக்கியம். நிறைய ஹோட்டல்களில் சாப்பிட்ட பிளேட்டை ரீஃபில் மற்றும் அடுத்த சர்விங்குக்கு அனுமதிக்க மாட்டார்கள். அதனால் சாப்பிட்ட பிளேட்டை டேபிளில் வைத்து ஸ்பூன் ஃபோர்க் கத்தி மட்டும் டேபிளில் எடுத்து தனியே வைத்து செல்லவும். புது பிளேட்டை எடுத்து திரும்பவும் லைனில் வரவு. கொஞ்சம் சாம்பார் மட்டும் தானே என்று லைனில்...