கேள்வி : புதிதாக ஒரு வீடு கட்டும்முன், எந்தெந்த காரணிகளை வைத்து அதற்கான பட்ஜெட்டை ஓரளவுக்கு சிறப்பான முறையில் போட முடியும்?
என் பதில் :
புதிதாக வீடு கட்டும் போது கீழ்க்கண்ட காரணிகளை வைத்து ஓரளவிற்கு சிறப்பான பட்ஜெட் போட இயலும்.
கட்டுமானத்துறையில் இருப்பதால் எனக்குத் தெரிந்த சில உத்திகளைக் கூறுகிறேன்.
வீட்டு மனையின் அளவு
வீட்டில் எத்தனை பேர் குடியிருக்கப் போகிறீர்கள்
உங்கள் கையிருப்பு
வங்கிக்கடன் எதிர்பார்க்கும் தொகை
வங்கிக்கடனை திரும்ப செலுத்தும் வழி
கட்டுமானப் பொருட்களின் அப்போதைய மார்க்கெட் விலை.
வீடு கட்ட இரு வழியான முறைகள் பின்பற்றுகின்றனர்.
மொத்த ஒப்பந்தம்
ஆட்கூலி ஒப்பந்தம்
மொத்த ஒப்பந்தத்தில் அனைத்து வேலைகள் மற்றும் பொருட்கள் ஒப்பந்ததாரைச் சார்ந்தது. அதாவது சராசரியாக ஒரு சதுர அடி ₹1600 முதல் பெறப்படுகிறது. சில நிபந்தனைகளுடன்
ஆட்கூலி ஒப்பந்தத்தில் வேலைகள் அனைத்தும் ஒப்பந்ததாரரைச் சார்ந்தது. பொருட்கள் உரிமையாளரைச் சார்ந்தது. அதாவது ஒரு சதுர அடிக்கு இவ்வளவு தொகை என நிர்ணயித்து ஒப்பந்தம் போடுதல். ஆட்கூலி மட்டும் (ஊருக்கு ஊர் மாறுபடும் )எனில் ₹450 வரை ஒரு சதுர அடிக்கு பெறப்படுகிறது.
இரு முறைகளிலும் கொட்டேசன் பெற்று அதற்கேற்ப திட்டமிட்டால் ஓரளவு சிறப்பான பட்ஜெட் போட இயலும்.
வினவியமைக்கு நன்றி ,வேறு ஏதேனும் விபரங்கள் மற்றும் உதவிகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
சிவக்குமார் VK
வீட்டுக்கடன் நிதி ஆலோசகர்
Comments
Post a Comment