பன்னீர் கொய்யா ..உடுமலைப்பேட்டை இன்று ஈகை திருநாளுக்கு மதிப்புமிக்க நண்பர் பா .அக மது அவர்களின் இல்லத்திற்கு சென்றேன் ..மதியம் விருந்து விருந்தோம்பல் முடித்துவிட்டு ,அவரின் இல்லத்தில் இருக்கும் சிறு அழகான தோட்டத்தை சுற்றி காண்பித்தார் ..அருமையான நிழல் தரும் மரங்கள் வெயிலின் தாக்கம் ஒரு சிறு அளவுகூட இல்லை ..அந்தளவுக்கு வீட்டை சுற்றி ..பழமரங்கள் நிழல் தரும் மரங்கள் ,செடிகளாக அழகாக இருந்தது ...அதில் பன்னீர் கொய்யா மற்றும் இன்று தான் மரத்தையும் பழங்களையும் பார்த்து மகிழ்ச்சி .. பன்னீர் கொய்யா சாதாரண கொய்யப் பழத்தைவிட தோல்பகுதி வழவழப்பாக இருக்கும். பழத்தின் உட்பகுதியில் ஒரு விதை மட்டுமே இருக்கும். அதை கீழே அகற்றிவிட்டு, பழத்தை தோலோடு சாப்பிடலாம். அதிக ருசி கொண்டது என்பதால், அணில், சிங்கவால் குரங்கு, மைனா, காகம், மரக்கொத்திப் பறவை உள்ளிட்ட விலங்கு, பறவைகள் இதனை விரும்பி சாப்பிடும் ..நண்பர்கள் ,சொந்தங்கள் யாரும் வந்தாலும் பன்னீர் கொய்யா கொடுத்து மகிழ்வார் ..இன்றைய ஈகை திருநாள் அருமையான திருநாள் .வாழ்த்துக்களும் ..நன்றிகளும் என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -994...