இந்த 2022 ல் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயற்பாடுகள்
இந்த 2022 ல் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயற்பாடுகள் சனவரி 4 ஆம் தேதி கோயிற் கலை ஆய்வாளர் முனைவர் சசிகலா உடுமலை ஜிவிஜி கல்லூரி வரலாற்றுத் துறையில் உரை போளரப்பட்டி மந்திரக்கல் , கடத்தூர் கொங்க விடங்கீஸ்வரர் கோயில் , மருதீசர் கோயில் ஆய்வுப்பணிகள் உடன் முனைவர் விஜயலட்சுமி , வி . கே . சிவகுமார் சுனவரி 5 பேரூர் திருப்பெருந்திரு மருதாசல அடிகளார் அவர்களுக்கு உடுமலை வரலாறு மற்றும் தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிப்பு சனவரி 8 நஞ்சேகவுண்டன்புதூர் உச்சிமாகாளியம்மன் கும்மி ஆட்டக்குழுவினர் பிப்ரவரி நிகழ்வுக்காக படப்பிடிப்பு நடத்தப்பட்டது . சனவரி 10 ஆம்நாள் கோவை மாவட்ட அருங்காட்சியக மண்டல அலுவலர் திரு . நந்தகுமார் போளரப்பட்டி மந்திரக்கல் ஆய்வுக்கு உடனிருந்து ஒத்துழைப்பு கொடுத்தல் சனவரி 15 ஆம் நாள் திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருவள்ளுவர் திருநாள் நிகழ்வு சனவரி 21 ஆம் நாள் உடுமலை வரலாற்று நூலை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பொள்ளாச...