கேள்வி : கோடி கணக்கில் விற்கும் வில்லா / ஃபிளாட்களை சாதாரண மனிதர்கள் எப்படி வாங்குகிறார்கள் ? அந்த கடனை அடைக்கும் யுக்தி என்ன ? என் பதில் : விலை உயர்ந்த வில்லா அல்லது ஆடம்பர அப்பார்ட்மெண்ட்கள் சாதாரண மனிதர்களுக்காக இல்லை . நடுத்தர வர்க்கத்தினர் அதை நினைத்துக் கூட பார்க்க முடியாது . இப்போது அது போன்ற இடங்களை வாங்குபவர்கள் உயர்ந்த சம்பளத்தில் இருக்கும் வேலை பார்க்கும் இளம் தம்பதிகள் தான் . அவர்களுடைய ஆகாசக் கோட்டை கட்டும் மனப்பான்மை தான் அதற்கு ஒத்து வரும் . அந்த இடங்களை வாங்க அவர்கள் படும் வங்கிக்கடன் , மாத தவணையை கட்ட படும் பாடு , மன அழுத்தம் , அதன் விளைவுகள் எல்லாம் வேறு கதை . சிறுகக் கட்டி பெருக வாழ்க என்பதில் உள்ள நிம்மதி அதில் இருக்காது . நன்றி .. சிவக்குமார் VK வீட்டுக்கடன் நிதி ஆலோசகர் Sivakumar.V.K Home Loan Consultant (Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) Coimbatore,Pollach...
Posts
Showing posts from July, 2022
- Get link
- X
- Other Apps
அரசியல் உரையாடலைப் வளரிளம் பருவத்தில் தொடங்குவோம் ! . “ நாம் பொதுவாக மேல்மட்ட அளவுல சட்டமன்றம் , நாடாளுமன்றத்தில் எம் . எல் . ஏ ., எம் . பி . சதவீதக் கணக்கை எடுத்துப் பெண்கள் சதம் குறைவுன்னு பேசறோம் கண்ணு .” “ அப்ப எங்க எதையும் சேர்த்துப் பேசணும் ? மாற்றம் எங்கிருந்து வரணும்னு சொல்றீங்க அப்பா ?” “ நம் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறைச்சாலையில் இருக்கும்போது , வீட்டிலிருந்த தன் 13 வயது மகள் இந்திரா பிரியதர்சினிக்கு உலகத்துல இருக்கற நாடுகளின் வரலாற்றைக் கடிதமாக எழுதி அனுப்பி வைச்சாரு . 13 வயது இந்திராவும் அதைப் படிச்சிட்டு பதில் கடிதம் எழுதுவாங்க . இந்திராவின் அப்பாவும் நம் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு அப்போ எழுதிய ‘ உலக வரலாறு குறித்த பார்வை ’ என்ற தலைப்பில் இன்றும் புத்தகமாகக் கிடைக்குது . அவர் அதைச் சிறைச்சாலையில் எந்தப் புத்தகத்தையும் பார்வையிடாமல் தன் நினைவிலிருந்த தகவல்களைக் கொண்டே எழுதியிருப்பது வியக்கத்தக்கதாக இருக்கு . நான் ஏன் சொல்றனா குடும்பத்தில் அரசியல...