வெயிலோடு மல்லுக்கட்டி
அம்மா வீட்ல இருந்த
காலத்ல வெய்லோடு
மல்லுக்கட்னதே
கெடயாது..
அம்மா திட்றதும் சரி
வெயில் மேல அடிக்கறதும்
சரி சூடு சொறனகெடயாது.
ஒறைக்கவே ஒறைக்காது.
இப்ப மாதிரி ஜூஸ் ஐஸ்கிரீம்
ம்ல்லாம் கெடயாது.
வாசல்ல போற கலர் கலரா
குச்சி ஐஸ்தான், பால் ஐஸ்
சேமியா, ஜவ்வரிசி போட்ட
ஐஸ்.அதுவும்வீட்டு
கொல்லையில் புளிய மரம்
இருக்கும் அப்பா மரத்தில் ஏறி உலுக்குவார்.அதை
பொரிக்கிகொடுத்தால்
லஞ்சமாக ஐஸ் வாங்கி தருவார்.
அதுவும் என்னைக்காவது தான்.
தாகம் எடுத்தால் அலுக்க அலுக்க பானை தண்ணீர் தான்.
பழையது தொட்டுக்க
உப்பு நார்த்தங்கா.
அதில் இருக்கும்
சாத்தூத்தம்.
ஊர்க்காரர்கள்
மெயின் ரோடில்
பானையில்
நீர் மோர் கலக்கி வைத்திருப்பார்கள்
அந்ந சுட்டெரிக்கும் வெயிலில் வாங்கிக் குடித்து விட்டு
வருவோம்.
இப்ப மாதிரி இவ்வளவு வகையான பழங்கள் பார்த்ததே
கிடையாது.
குறைந்த செலவில்
பனநுங்கு
வாங்கி சாப்பிடுவதுண்டு.
வெள்ளரிப்பழம்
நிறைய வாங்கி சாப்பிடுவோம்.
உடலைக் குளிர்ச்சி
செய்ய எண்ணெய் குளியல்.
வாரா வாரம் வெந்தயம்
தலைக்கு தேய்த்துக் குளித்தல்.
செம்பருத்தி இலை
அரைச்சு குளித்தல்
அழுக தேங்காய்
அரைத்து தலையில் தேய்த்து குளித்தல்.
சாதம் வடிச்ச முதல்நாள் கஞ்சியை புளிக்க வைத்து
தயிர் சீயக்காய் போட்டு தலைக் குளியில்.
கூடம் தாவாரம் மித்தம்
திண்ணைன்னுபெரிய வீடு.மித்தத்லயும்
திண்ணைலயும் தண்ணிய
ஊத்தி விட்டு கட்டாந்தறைல
படுத்துகாத்து வாங்கிய தூக்கம்
வேண்டுமென்றால்
கைவிசிறி காத்துதான்.
கரண்ட்
கிடையாது அப்படியே
இருந்தாலும்
Fanலோவோல்ட்டேஜில்
மெல்லமா சுத்தும்.
Physical activities
நிறைய
விளையாட்டுகள்
அதிகம் அதனால் விளையாடி
விட்டு வந்த களைப்பில்
தூக்கம் தானாக வரும்
இரண்டு முறை குளிக்க
கூட தோணாது.
வாயிலிருந்து ஸ்ஸ்ஸப்பா
வெயில் தாங்க முடியல ன்னு
புலம்பல் வரவே வராது.
தண்ணீர் கஷ்டமோ
தட்டுபாடோ கிடையவே
கிடையாது.
அமராவதி ,திருமூர்த்தி அணை தண்ணீர்
எப்பவும் கிடைக்கும்.
இப்ப வீட்ல திரும்பின எடல்லாம்Fan
ஏ.சி,கூலர்
இன்வெர்ட்டர் எல்லாம்
இருந்தும் வெயில்
தாக்கு பிடிக்க முடியவில்லை.
எப்படித்தான் அந்த
வாழ்க்கை ஆனந்தமாக வாழ்ந்தோமோ
என்று நினைத்து பார்த்தால்
ஆச்சரியமாக இருக்கிறது.
சொர்க்கமே என்றாலும்
அது நம்மூர போல வருமா.
வெயிலோடு விளையாடி ......
Comments
Post a Comment