Posts

Showing posts from August, 2024

பெரும் சம்பளம் இருந்தும் மக்கள் ஏன் ஐடியில் இருந்து வேலையை விட்டு வெளியேறுகிறார்கள்?

  பெரும் சம்பளம் இருந்தும் மக்கள் ஏன் ஐடியில் இருந்து வேலையை விட்டு வெளியேறுகிறார்கள்? கேள்வி கேட்டவர் "தலைமை நிர்வாக அதிகாரி (CEO), தலைமை நிதி அதிகாரி (CFO), தலைமை மனிதவள மேம்பாட்டுத்துறை (Chief HRD)' போன்றவர்களை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்கிறார் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இவர்கள் தான் இப்போதெல்லாம் ஒரு கம்பெனியில் இருந்து இன்னொரு கம்பெனிக்கு பல கோடி ரூபாய் சம்பளத்திற்கு மாறுகிறார்கள். மற்றபடி Software Engineer, Tech Lead, PM, SPM, Consultant போன்றவர்கள் எவரும் அப்படி அதிகச் சம்பளத்தைத் தூக்கி போட்டு விட்டு பணியை விட்டு வெளியேறுவது கிடையாது. 40 மற்றும் 50 வயதிலும் AI கோர்ஸ் அது இது என்று பலரும் தங்கள் திறமையை மேம்படுத்திக் கொண்டிருப்பது எதற்காக? வேலையைத் தூக்கி போட்டுவிட்டு போவதற்கா? இருக்கின்ற வேலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான். பொருளாதார வசதி இருப்பவர்கள் வேண்டுமானால் ஒரு கட்டத்திற்கு மேல், IT பணியை உதறிவிட்டு அவர்களுக்குப் பிடித்தமான துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் முயற்சி செய்வார்களே தவிர, மீதம் இருக்கும் 90% சதவிகிதம் பேர் '...

மச்சு வீடோ 🏡🏡 குச்சு வீடோ🏡🏡🏡

Image
  மச்சு வீடோ குச்சு வீடோ சொந்த வீடு கட்டிக் குடியேறும் நபர்களுக்குச் சமூகத்தில் ஒரு மரியாதை கிடைக்கத்தான் செய்கிறது. அதனால் தான் விவசாயக் கூலிகள் முதல் வேலை பார்ப்பவர்கள் வரை வீட்டுக்கடனைப் பெற வங்கிகளை எதிர்பார்க்கிறார்கள். சிலநேரங்களில் வீட்டுக் கடன்கள் அவர்களைக் கனவிலும் கூடத் தொல்லை செய்கிறது. ஆகையால் நீண்ட கால வீட்டுக் கடன்களைப் பெறும்போது, தவணை முறைகளையும் கவனமாகத் திட்டமிட்டு கையாள வேண்டும் ஆகப் பெரும்பாலானோர் ஒரு கனவு வீட்டைக் கட்டி முடக்கவோ, வாங்கிப் போடுவதற்காகவோ வங்கிக் கடன்களை வாங்குகிறார்கள். இன்னொரு சாஸ்வதமான அசையாச் சொத்துக்களால் வருமான வரிச்சட்டம் 80 மற்றும் 24 ஆம் பிரிவுகளின் கீழ் வட்டி செலுத்துவதில் இருந்து இன்னபிற சலுகைகளைப் பெறலாம் என்ற எண்ணமும் வீட்டுக் கடன்களை வாங்கத் தூண்டுகிறது. அதேநேரம் இதில் சங்கடங்கள் இருப்பதையும் கவனிக்க வேண்டும். 30 ஆண்டுகள் வரை நீடிக்கும் ஒரு நீண்டகாலக் கடன்கள் உங்கள் நிம்மதிக்கு வேட்டு வைப்பதாக அமையும். இதனைக் கடந்து செல்ல உங்கள் தவணைகளைச் சரியாக நிர்வகி க தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு உதவும் எங்களால் ஆன சில குறிப்புகளை உங்களுக்...

புதுமனை புகுவிழா ...

  புதுமனை புகுவிழா ... சொந்த வீடு கட்ட வேண்டும் என எல்லோருக்கும் கனவு இருக்கும். ஆனால் அப்படிக் கட்ட முடிவுசெய்த பிறகு சில விஷயங்களில் நாம் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அவசர, அவசரமாக இடத்தைத் தேர்வுசெய்துவிட்டால் பின்னால் சிரமப்படுவது நாமாகத்தான் இருப்போம். அதனால் ஆயுள் முழுக்க இருக்கப்போகும் இடத்தை நிதானத்துடன் தேர்வுசெய்ய வேண்டும். இடம் தேர்வு செய்தல் முதலில் எந்த ஊரில் எங்கு மனை வாங்குவது என்பது குறித்துத் தெளிவாக முடிவு செய்யுங்கள். அந்த மனைக்குச் செல்லும் வழி முக்கியமான பேருந்துகள் அதிகம் செல்லும் சாலையுடன் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியம். மனைக்குச் செல்லும் சாலை குறைந்தது இருபத்து மூன்று அடி அகலம் இருக்க வேண்டும். மனை வாங்கும் ஏரியா வளர்ச்சி பெறக் கூடியதாக (development) இருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாகவும், வீடுகட்ட உபயோகிக்கக் கூடியதாகவும் இருத்தல் அவசியம். மனைக்கு அரசு ஒப்புதல் கிடைத்திருக்க வேண்டும். மனை வாங்குமிடம், மனைவி மற்றும் குழந்தைகள் மனதுக்குப் பிடித்திருக்க வேண்டும். அக்கம் பக்க மனைகளில் ஒரு சில வீடுகளாவது உள்ளதா, அப்படியானால் எத்தனை ஆ...

கல்வி வழிகாட்டி *பயனுள்ள தகவல்:*

Image
 கல்வி வழிகாட்டி *பயனுள்ள தகவல்:* மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கல்வி வழிகாட்டுதலில் மிக்க முக்கியத்துவம் வாய்ந்தவராக, டாக்டர் கார்த்திகேயன் வெங்கிடுசாமி, PhD (பெரியக்கோட்டை, உடுமலை) அவர்கள் விளங்குகிறார். கடந்த 7 ஆண்டுகளாக National Institute of Technology (NIT) - Central Government- Department of Electrical Engineering துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மொத்தமாக 11 ஆண்டுகளாக NIT அமைப்பில் பணிபுரிந்து வந்த அவர், கோயம்புத்தூரின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதால், அவருக்கு மொத்தம் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் உள்ளது.  *அனுபவம் மற்றும் பார்வைகள்:* தன்னுடைய அனுபவம் மற்றும் பல அம்சங்களில் பெற்ற மதிப்பீடுகள் மூலம், டாக்டர் கார்த்திகேயன் வெங்கிடுசாமி அவர்கள் JEE போன்ற போட்டித் தேர்வுகளை நோக்கி செல்லும் மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்கி வருகிறார். தற்போதைய மாணவர்கள், பழைய மாணவர்கள், NIT, IIT, IIIT கல்லூரிகளின் பேராசிரியர்கள், வேலை வாய்ப்பு நிலவரங்கள், முந்தைய ஆண்டுகளின் தரவரிசை விவரங்கள் போன்றவற்றின் அடிப்ப...

தேவராட்ட கலைஞர் பழனிசாமி

Image
  தேவராட்டம் (பாரம்பரிய கிராமிய கலைகள்) தேவராட்ட கலைஞர் பழனிசாமி மண்ணில் புதைந்த பல்வேறு வரலாறுகள், பேச்சளவில் மட்டுமாவது உயிரோடு இருக்க, கிராமப்புற பாடல்கள் முக்கிய பங்களிப்பு அளித்து வருகின்றன; அவ்வாறு, சுதந்திரத்துக்கு எதிராக போராடி, இறந்த பாளையக்காரர்களின் மறக்கப்பட்ட வரலாறுகளை தனது பாட்டுகளால், உயிர்ப்புடன் வைத்திருக்கிறார் ஜல்லிபட்டியை சேர்ந்த புலவர் பழனிச்சாமி. நாட்டின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த பல ஆட்சியாளர்களின் வரலாறு, இளைய தலைமுறைகளுக்கு தெரியாமல் மறைந்து வருகிறது. இத்தகைய போராட்டங்கள் குறித்த நாட்டுப்புற பாடல்கள், ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது, அந்தந்த பகுதியின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறப்பு பெற்றிருந்த கோவில்கள் மற்றும் மக்களின் பழக்கவழக்கங்களை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. தங்கள் முன்னோர்கள் மற்றும் வழிகாட்டிகள் மூலம் இத்தகைய பாடல்களை மனப்பாடம் செய்து, கோவில் திருவிழாக்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகளின் போது பாடுவது நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாகும். அவ்வாறு, உடுமலை அருகே, தளியை தலைமையிடமாகக்கொண்டு சுற்றுப்பகுதியை ஆட்சி செய்த பாளையக...

தன்னை பார்த்து பணிபுரியும் அதிகாரிகளுக்கு நாம் எப்படி இருக்கவேண்டும் ....

Image
 தன்னை பார்த்து   பணிபுரியும் அதிகாரிகளுக்கு நாம் எப்படி இருக்கவேண்டும் .... ஒரு மேலாளர் மட்டும் எல்லா வேலைகளையும் செய்ய முடியாது. பணிச்சுமையை பகிர்வதன் மூலம் ஒரு மேலாளரின் திறனை பிரதிநிதித்துவம் அதிகரிக்கிறது. பிரதிநிதித்துவம் இல்லாமல் அமைப்பின் அமைப்பு பயனற்றதாகிவிடும். பிரதிநிதித்துவம் இல்லாமல் நிறுவன மேலாண்மை சாத்தியமற்றது. பிரதிநிதித்துவம் என்பது கீழ் பணிபுரிபவர்களுடன் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதோடு, தேவையான அதிகாரத்தை வழங்குவதன் மூலம் தொடங்குகிறது, இதனால் அவரது துணை அதிகாரிகள் திறம்பட வேலையைச் செய்ய முடியும். மேலாளர், கீழ் பணிபுரிபவருக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கான பொறுப்புக்கூறலை விதிக்கிறார், மேலும் இந்த முழு செயல்முறையும் பிரதிநிதித்துவம் என்று அழைக்கப்படுகிறது. நல்ல பிரதிநிதித்துவம் என்பது பொறுப்பு, அதிகாரம் மற்றும் பொறுப்புணர்வை சமநிலைப்படுத்துவதாகும். பிரதிநிதித்துவத்தின் தகுதிகள்    பணிச்சுமையைக் குறைக்கிறது:  ஒரு மேலாளர் அதிகாரத்தை வழங்குவதன் மூலம் தனது பணிச்சுமையைக் குறைக்கலாம். எல்லா வேலைகளையும் அவரால் கையாள முடியாது என்பதால், அவருக்குக் கீழ் ப...
  காலம் கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்கள் என்ன? தற்போதைய நடைமுறையில் பெண்ணை விட மணமகன் அதிகமாக படித்திருக்க வேண்டும் என்பது முதல் அடியாக வைக்கப்படுகிறது. படித்து முடித்ததும் பெண் வேலைக்கு சென்று விட்டால் நல்லது தான். ஆனால் அந்த இடத்தில் ஒப்பீடு என்பது ஆரம்பம் ஆகிறது. பெண் BE முடித்து இருந்தால் பையன் ME முடித்திருக்க வேண்டும். பெண் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினால் பையன் அதைவிட 20000 ரூபாயாவது அதிகமாக வாங்கவேண்டும். பெண் வேலை பார்க்கும் இடத்திற்கு பையன் மாறி வரவேண்டும். திருமணத்திற்கு பின்னர் பெண் வேலையை விடமாட்டாள் என்றெல்லாம் பெண்ணைப்பெற்றவர்களின் எதிர்பார்ப்புகளும்,நிபந்தனைகளும் கூடிக்கொண்டு செல்கின்றன. நல்லவிதமாக குணமாக,ஒழுக்கமாக இருக்கும் பையன் கூட ஏதேனும் ஒரு காரணத்தால் இரண்டு அல்லது மூன்று கம்பெனிகள் மாறி சீனியாரிட்டி இழந்து 80,000 வாங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் கூட அவனை நிராகரித்த பெண்களை எனக்கு தெரியும். பெண்களின் படிப்பு முடிந்து வேலைக்கு வந்ததுமே பெண்களின் பெற்றோருக்கும் சம்பாதிக்கும் போது சிறிது ஆணவம் வந்துவிடுகிறது என்பதில் யாராலும...

கரைவளியில் ஆடிப்பெருக்கு

Image
  கரைவளியில் ஆடிப்பெருக்கு தென்கொங்கு நாட்டில் ஆன்பொருநை எனும் அமராவதி நதி உழவர்களை மட்டுமல்லாது பொதுமக்களையும் வாழவைத்துள்ளது. மக்களின் வாழ்க்கையை நீரோடும், உழவோடும் இருந்ததை நமது கரைவளி நாடும் நாகரிகமும் நூலினுள் மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் பதிவு செய்துள்ளோம். இன்று ஆடிப்பெருக்கு ஆடி 18 இந்த நாளை முன்னிட்டு சில நிகழ்வுகளை நம் கண் முன் நிறுத்துவோம். கரைவளியில் கல்லாபுரம் முதல் கடத்தூர் வரையிலான அனைத்து சிற்றூர்களிலும் முளைப்பாரி எனும் நவதானியங்களை அமராவதி ஆற்றினில் விட்டு அது எப்படி வளர்கிறது என்பதை விதைப்புத் திருவிழாவாகக் கடந்த காலங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். இன்று அனைத்து உழவர் பெருமக்களும் தத்தம் மாடுகளை வண்டிகளில் பூட்டி திருமூர்த்தி மலை சென்று இரவு தங்கி மறுநாள் காலை வண்டி மாடுகளுக்கு வழிபாடு செய்து பிறகு திரும்புகின்றனர். தாம் சேமித்து வைத்த ஒரு சில விதை நெற்களையும் நீரில் வைத்து வழிபட்டு வருகின்றனர். ஓவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்கள் இருந்தாலும், இந்த ஆடி பெருக்கு எனும் ஆடி 18 ஐ நீர் வழிபாட்டை முன்னிறுத்தியே அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. கடத...

ரத்தின மூர்த்தி

Image
  ரத்தின மூர்த்தி "இது பெரியவரு சுப்பரமணியன் கொடுக்கு" என்று ஒரு மூதாட்டி தன்னுடன் இருந்தவர்களிடம் என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. மணியாட்டிப் பூசாரியும் என்னைப் பார்த்ததும் அந்த வயதிலும் அடையாளம் கண்டுபிடித்து சிரித்துக்கொண்டார். நீண்ட காலத்திற்குப் பிறகு அந்த கிராமத்தின் காட்டுக்குள் இருந்த கோவிலுக்குச் சென்றேன். கோவில் இன்னும் பழமை மாறாமல் அப்படியே இருக்கிறது. மக்களும் அப்படியே இருக்கிறார்கள். அதுதான் சிறப்பு. இந்தக் கிராமத்தில் ஒரே குழுவாக தொட்டிய நாயக்கர் இனம் மட்டுமே இருக்கிறது. வஞ்சகம் பொறாமை சுயநலம் என்பதெல்லாம் தங்களிடத்தில் வராமல் தங்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. சில காலத்திற்கு முன்பு வரை கூட இவர்கள் காலில் செருப்பு அணிய மாட்டார்கள். யாருடைய வீட்டிலும் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். விதிவிலக்காக மண்ணுடையார் வீடுகளில் மட்டும் இவர்கள் தண்ணீர் புழங்குவார்கள். விருந்தோம்பலிலும் அவர்களை அடித்துக்கொள்ள யாராலும் இயலாது. ஆடிப்பதினெட்டான இன்று பொங்கல் வைத்து கிடாய் வெட்டி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்...