Posts

Showing posts from October, 2023
  என் கேள்வி :  கார்ப்பரேட் உலகத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்கள் எவை? பதில் : மதிப்புக்குரிய பாலமுரளி அவர்கள் .. பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணிபுரிந்தவர் அளித்த பதில் . நான் வெளி நாட்டில் ஒரு மல்ட்டி நேஷனல் கார்ப்பரேட் நிறுவனத்தில் 1994 இல் ப்ரொடக்‌ஷன் என்ஜினியராக சேர்ந்து படிப்படியாக உயர்ந்து 2015 இல் அதே க்ரூப்பில் நான்கு நிறுவனக்களுக்கு சி.இ.ஓ வாகவும் மேனேஜிங் டைரக்டராகவும் ஆகி, 2019 இல் விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு இந்தியா வந்து செட்டில் ஆகி என் மனதிற்குப் பிடித்து பொழுதுபோக்கு விஷயங்களை செய்து கொண்டே பிஹச்டி யும் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய 30 வருட கார்ப்பரேட் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்டவை: 1. கடின உழைப்பு உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். அதற்காக உயிரைக் கொடுத்து வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை 2. உங்களைச் சுற்றி நிறைய பேர் குழி பறிப்பார்கள். உங்கள் வேலையை செய்து கொண்டே அவர்களை சமாளிக்கவும் வேண்டும். 3. வேலையை வேலையாக மட்டுமே பார்க்க வேண்டும். உடல் நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு ஏதேனும் நடந்து வி...
 உடுமலைப்பேட்டை பொன்னலம்மன் சோலை .. நாளை மணவிழா காணும் ரங்கநாதன் என்கிற R .ராகுல் -S .லோகநாயகி  புதுமண தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துக்கள் -(27.10.2023) என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்  9944066681
 நொய்யல் இன்று  ..... சமரசமில்லா எழுத்துப்போராளி கா.சு. வேலாயுதன்   நீண்ட நெடிய எழுத்துக்குச் சொந்தமானவர், பத்திரிகை உலகில் தனக்கெனத் தனி இடம் பதித்தவர். நொய்யலை ஏற்கனவே படித்தவர்களுக்கு இது பழைய செய்தியாக இருந்தாலும்,  பழைய மொந்தையில் புதிய கள்ளாகக் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர். 25 கட்டுரைகளை வடித்துள்ளார். நொய்யலின் வரலாற்றுச் சான்றுகளை முன்னிறுத்தும்போது  தொல்லியல் ஆய்வாளர் பூங்குன்றன் அவர்களையும் , அரசியல் ஆதாரங்களை முன்னிறுத்தும் போது  புரட்சி நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும்  அரங்கநாயகம் அவர்களையும், முன்னிறுத்துகிறார். இவ்வாறு நொய்யலின் தொடக்க காலம் இன்றைய காலத்திற்கேற்றவாறு பல்வேறு வரலாற்றுச்சான்றுகளையும், இலக்கியச்சான்றுகளையும், முன்னிறுத்து எழுதியிருக்கிறார் என்பதைக்காட்டிலும் நொய்யலின் மீதானதன் காதலை வெளிப்படுத்தி உள்ளார். சமூக அர்ப்பணிப்புள்ள ஒரு சாமானிய எழுத்தாளனுக்குள்ள அத்தனை உணர்வுகளையும் ஆங்காங்கே சொல்லிச் செல்கின்றார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவை  குடியிருப்புகள் அல்ல . . நீர் நிலைகளே என்பதையும், இயற்கையான  காட்டாற்...
 இனிமையான பொங்கல் .... தைமாதம் முதல் நாள் என்றாலே விவசாயம் என்ற ஒரு மந்திரச்சொல் எல்லோர் மனதில் ஓடும் ...தைமகளை வரவேற்கும் நாளாக அமைவது இயல்பு ..வரும் காலங்களில் விவசாயம் சார்ந்த தொழிலை முன்னெடுதி யே எந்த ஒரு தொழிலும் சார்ந்த தாக வருங்காலத்தில் அமையப்போவது உறுதி ..நம் தலைமுறை விவசாய தொழில்களை மறந்துவரும் சூழலில் ..நம் குழந்தைகள் தற்பொழுது இருக்கும் நிலங்களில் ..தங்களின் பெற்றோர்களுடன் பள்ளி ,கல்லூரிகளில் படிக்கும் ,வேளைக்கு போகும் இளைய தலைமுறையினர் விடுமுறை நாட்கள் ,பொங்கல் பண்டிகை காலங்களில் தானாக முன்வந்து விவசாய நிலங்களில் கால் பதித்து ..பயிர்களுக்கு நீர் இறைத்து ...தலையெடுத்தும் ,கால்நடைகளை எப்படி பராமரிப்பது .என்று களப்பணி செய்தும் ..இந்த பொங்கலை கொண்டாடியது பார்க்கும்பொழுது மனதில் இனம் புரியாது மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது .. ...தங்களால் இயன்ற அளவு விவசாயப்பணிகளை மேற்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது ..என்னதான் நகரத்து வாழ்க்கை வாழந்தாலும் ...எப்பொழுது விடுமுறை விடுவார்கள் என்று இளைய தலைமுறையினர்க்கு விழிப்புணர்வு வந்துள்ளதை அறியும்பொழுது ...மறுபடியும் விவசாய பணிகள் இருக்கும் நடைமுற...
Image
மகிழ்ச்சி .🥰 இன்று என் இனிய மருமகன் ஜெய்வந்த் உடன் ...இன்றைய பிறந்தநாள் விழாவையும் ...ஜெய்வந்த் நிறுவன சொந்தங்களுடன் சரஸ்வதி பூஜை ,ஆயுத பூஜை ..என்று அனைத்து விழாக்களையும் கொண்டாடிய மகிழ்ச்சி ...🥰🍬🎂🍫☔🦋🥰🌈🌾🌱 என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்  9944066681

சுந்தர் நகர் ..மனோஜ் மாப்பிள்ளை

Image
சுந்தர் நகர் ..மனோஜ் மாப்பிள்ளை   உடுமலைப்பேட்டை சுந்தர் நகர் ..மனோஜ் மாப்பிள்ளையை  பார்த்து நலம் விசாரித்தேன் ..சிறுவயது பள்ளி செல்லும்போது பார்த்தது ..இன்று பார்த்தபோது அடையாளம் தெரியவில்லை ..என்ன படிக்கறீங்க தம்பி என்று வினவினேன் ..மாமா  படிப்பு முடிந்து கல்லூரியில் பணிபுரிந்துகொண்டிருக்கிறேன் என்றார் ...காம்பளான் சிறுவர்கள் சட்டென தோலுக்கு மேல் வளர்ந்து விடுகிறார்கள் ....மாப்பிள்ளைக்கு  வாழ்த்து சொல்லிவிட்டு விடைபெற்றேன் .. என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்  9944066681

நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!!

Image
நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!!  பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து, டாக்டர் கூறுவதை கேட்டு நம்முடைய பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள். சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது. அந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும். நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர் அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும் அதை நாம் குணப்படுத்த முடியும். இதைத்தான் நம்முடைய சித்தர்கள் சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்த மூன்றும் சிறுநீரில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வைத்து நோயை குணபடுத்தி உள்ளன...

அக்டோபர் 2, காந்தி பிறந்த நாள் காமராஜர் இறந்த நாள். இந்த நினைவுகளோடு ஒரு உறவுகளையும், தொல்லியல் எச்சங்களையும் பார்த்து வர நிறைவன ஒரு பயணம்.

 அக்டோபர் 2, காந்தி பிறந்த நாள் காமராஜர் இறந்த நாள். இந்த நினைவுகளோடு ஒரு உறவுகளையும், தொல்லியல் எச்சங்களையும் பார்த்து வர நிறைவன ஒரு பயணம்.  உடுமலையிருந்து பெரம்பலூருக்கு ஒரு பயணம். இந்த முறை நால்வர், திருப்பூர் பாலு மற்றும் முனிசுடன் சிவாவும் நானும்.  வுழக்கம்போல் இந்தப்பயணமும் அக்டோர் 1 ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டிருந்தோம். மீண்டும் திருப்பூர் பாலு அவர்களின் பயண மாற்றத்தால் மறுபடியும் அக்டோ.2 ஆம் தேதி உடுமலையிலிருந்து பயணம் மேற்கொண்டோம். இதில் நடைபெற்ற, நடந்த நிகழ்வுகளின் சுவாரஸ்யத் தொகுப்புகள். வழக்கம்போல் இந்தப் பயணக்கட்டுரையும் சிவாவுக்கே சமர்ப்பணம். கடந்த ஏப்ரல் ஒரு பண்பாட்டுப்பயணம் நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு தஞ்சை சென்று அங்கு இரவில் தங்கிவிட்டு மறுநாள்  தஞ்சையிலிருந்து வரும்போது இயல்பாக  பெரம்பலூர் ஆறுமுகம் அய்யா அவர்களுக்கு தொலைபேசி செய்து இதுபோன்று திருச்சி நேற்று வந்துவிட்டு இன்று தஞ்சை வந்துவிட்டு  ஊருக்குச் சென்றுகொண்டிருக்கின்றோம். உங்களைப் பார்க்க வரலாமா என்று கேட்டமைக்கு ஓ . . தாராளமாக வாருங்கள். வீட்டில்தான் இருக்கிறேன். ...