Posts

Showing posts from July, 2024

கன்னி நாய்கள்......Siva Siddhu R * இந்து தமிழ் திசை இதழில் 2017 ஆண்டு வெளியான என் கட்டுரை படம் : 2015 ல் ( நானும் - தங்கமணியும் )

Image
  கன்னி நாய்கள் காற்றைக் கிழித்துச் செல்லும் அதிவேக ஒட்டம், இந்த நாய் இ னத்தைப் முதல்முறையாகப் பார்ப்பவர்களுக்கு பெரும் வியப்பைத் தரும் - இதுதான் கன்னி என வழங்கப்படும் நம் நாட்டு நாய் இனத்தின் தனித்தன்மை. நல்ல கூரான நீண்ட முகம், சிறிய தலை, நன்கு கீழிறங்கிய மார்பு, மெலிந்த-நீளமான உடல், மிகக்குறைந்த ரோமம், நீண்ட மெல்லிய வால் ஆகியவற்றுடன்தான் கன்னி நானுடைய தோற்றம் அமைந்திருக்கும். மேற்கூறிய தோற்றத்துடன் வேட்டை நாய் கருப்பு நிறத்தில் வந்தால் கன்னி என்றும் அதே தோற்றத்துடன் வேறு நிறத்தில் இருந்தால் அது ‘சிப்பிப்பாறை’ என்றும் முன்பு கூறப்பட்டுவந்தது. பின்னர், இரண்டு நிறம் கொண்டவையும் ஒரே வகைதான், நிறம் மட்டுமே மாறுபடுகிறது என்று கருதப்பட்டது. ஆனால் இந்த ரெண்டு பெயர் மட்டும் அல்லாது இவற்றுக்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டுவந்தன: உதாரணமாக பொடித்தல நாய், ஊசிமுஞ்சிநாய், கூழைவால் நாய், குவளைவாய் நாய், மொசக்கடி நாய், குருமலை நாய், குருந்தன்மொழி நாய், தோல்நாய்... விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை ஊரைச் சார்ந்த சாம்பல் நிற நாய்கள் மூலமாகத்தான் இந்த நாய்களுக்கு சிப்பிப்பாறை என்ற பெயர் முதலில் வந்த...

வாங்க.. நடக்கலாம்..!

தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில், அதாவது மைதானம், பூங்கா, நடைதளம் உள்ள பகுதிகளில் அல்லது வீட்டு மொட்டைமாடிகளில் நடை பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருப்போம். சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று நடை பயிற்சி செய்யும்போது முதலில் இடது பக்கமாக சென்று வலது பக்கமாக சுற்றி வரும்படியோ அல்லது வலது பக்கமாக சென்று இடது பக்கமாக வலம் வரும்படியோ நடந்துக்கொண்டிருப்போம். அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு அல்லது அந்தந்த இடத்தின் சூழலுக்கேற்றவாறு நடந்துக்கொண்டிருப்போம். நீங்கள் நீண்ட தூரம் அல்லது நீண்ட நேரம் நடப்பவர்களாக இருந்தால்..நடக்கும்போது எந்த பக்கமாக நடக்க ஆரம்பிக்கிறீர்களோ.. அதே பக்கமாக திரும்பி நடந்து வரும்படி வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு.. ஒரு மணி நேரம் நடப்பவராக இருந்தால் அரை மணி நேரம் இடது பக்கமாக சென்று வலது பக்கமாக சுற்றி வந்து விட்டு.. அடுத்த அரைமணி நேரம் வலது பக்கமாக சென்று இடது பக்கமாக வலம் வரும்படி உங்கள் நடைப்பயிற்சியை அமைத்துக்கொள்ளலாம். உங்கள் மூளையின் செயல்திறன் சரிசமாக செயல்படுகிறது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நடக்க ஆரம்பிக்கும...

கேள்வி : நிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்..?

Image
  கேள்வி : நிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்..? என் பதில் :.. நிலம் வாங்குவதற்குமுன் அதைப்பற்றி முழு விவரங் கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங் கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும்போதும், விற்கும்போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ்நாடு அரசின் எந்தெந்த துறைகளின்கீழ் வருகிற து என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்ப து மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப் படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம். புல எண் (Survey Number) : ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk ), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக் கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று...

கேள்வி : வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் உங்களை திட்டும் போது எப்படி உணர்வீர்கள்?

Image
கேள்வி : வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் உங்களை திட்டும் போது எப்படி உணர்வீர்கள்? என் பதில் : நான் இருப்பது வீட்டு கடன் ..விற்பனைத்துறை .நிதி ஆலோசனை துறை யில் இருப்பதால் பொறுமை ..சகிப்புத்தன்மை ...மிக ..மிக முக்கியம் . ஒருவர் அலுவலக வாழ்க்கையில் இவை அகந்தையை மற்றும் சுயகௌரவத்தை சோதிக்கும் நிகழ்வுகள். இதை நான் சிலமுறை சமாளித்து இருக்கிறேன். சில சந்தர்ப்பங்களில் உயர் அதிகாரிகள் மேலிடத்திலிருந்து வரும் அவசரத்தை கீழே உள்ளவர்கள் மேல் காண்பிப்பர். அப்போது அமைதியாக வேலையை செய்ய வேண்டும். எதிர் வார்த்தை பேசுவது நம் அமைதியை கெடுத்து விடும், வேலை இன்னும் தாமதமாகிவிடும். வேலையை குறித்த நேரத்தில் செய்து கொடுத்து அதை மேலதிகாரிக்கு அனுப்பிய பிறகு, அவர்கள் இரத்த அழுத்தம் இறங்கி அவர்களே வந்து நன்றி சொல்லியது உண்டு. கவனக்குறைவு என்பது சில நேரங்களில் யாராலும் நேரலாம். அப்போது திட்டினால் அதை ஆண்டவன் பிரசாதமாக ஏற்று தொங்கிய முகத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். சில அதிகாரிகள் பிறர் முன்னிலையில் வேறு ஒருவர் தவறுக்காக சாடிவிடுவர். இங்கு அகந்தையும் சுயகௌரவமும் தலைவிரித்து ஆட ஆரம்பித்து விடும். இது ...