Posts

Showing posts from September, 2023
  கேள்வி :  காலம் கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்கள் என்ன ?   சங்கமேஸ்வரி அக்காவின் பதில் :   காலம் மாறி விட்டது . மக்களின் மனநிலை மாறிவிட்டது . 25 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒரு பெண்ணிற்கு சம்மதமா என்பது ஒப்புக்கு கேட்கும் ஒரு வழக்கமாகவே இருந்தது . இன்றைக்கு அப்படியா அதுவும் இந்த கால பெண் குழந்தை களுக்கு எப்படிபட்ட மாப்பிள்ளை வேணும்னு ஒரு பெண் குழந்தையின் அம்மாவா ன என்னாலேயே கண்டுபிடிக்க முடியல . ஊரு ல இருக்க அத்தனை வாலிப பெண்களுடனும் நெருங்கி பழகுகிற எனக்கே புரியவில்லை . ஏன்னா ஒரே மாதிரி இல்லை .   இந்த கலைடாஸ்கோப் ல உடைந்த வளையல் துண்டுகளை போட்டால் மாறி கொண்டே இருக்குமே டிசைன் அப்படி இருக்கு . சரி இவங்களை விடுங்க அவங்க அப்பா அம்மா என்ன சொல்றாங்க . இரண்டு அளவுகோல் ஒன்று அரசாங்க வேலை அப்படி இல்லனா 2. வசதியா இருக்கணும் . ஜாதி ஜாதகம் லாம் அவசியம் .20 வயசுல பொண்ணுக்கு வர 30 வரன்களையும் தள்ளி விட்டு 27, 28 வயதான பெண்களை நான் ...

கூக்கால்- குமணன் கல் - இரண்டு ஆண்டு திட்டமிட்டு ஒரே நாளில் நடைமுறைப்படுத்திய கொடைக்கானல் பயணம்.

 கூக்கால்- குமணன் கல் - இரண்டு ஆண்டு திட்டமிட்டு ஒரே நாளில் நடைமுறைப்படுத்திய கொடைக்கானல் பயணம். 17.09.2023 தந்தை பெரியார் பிறந்த நாளில் காலையில் டெய்லர் மூர்த்தி வீடு திருமணத்திற்காக காலையில் ஆறு மணிக்கு எழுந்து வீட்டுக்காரம்மாவையும் எழுப்பிவிட்டு  ஐந்து மணி முதல் கிளப்பி, கிளம்பி 6.45 க்கு குரல்குட்டை பயணமாகும்போது மதி சார் அழைப்பு, சார் வீடு எங்க சார் இருக்குது, சரிதான், ராஜசுந்தரம் புதுமனை புகுவிழா நேற்று இரவு வராமல் இப்பொழுதுதான் காலையில் வந்துள்ளார். நேற்று மாலை கூப்பிடாதது என் தவறுதான். சரி ,  குரல்குட்டை திருமணத்திற்குப் போய்விட்டு மீண்டும் சி.என்.ஆர் மண்டபம் சென்று சாப்பிடுவதற்கு முன்பு வீட்டிற்கு வந்து மாத்திரை போட்டுக்கொண்டு  மாமனாருடன் பாலன் வண்டி ஓட்ட  சி.என்.ஆர் மண்டபம் சென்று சாப்பிட்டேன்.  சாப்பிடுவதற்குக் கூட்டம் இல்லாவிட்டாலும் அந்த பந்தியில் இடம் இல்லாமல் அடுத்த பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டு மண்டபத்திற்குள் வந்து  உட்கார்ந்து 10,15 நிமிடம் கழித்து  மாத்திரை சாப்பிட்ட பிறகு இன்று என்ன பணி என யோசனை செய்து கொண்டிருந்த போது சரிதா...

ஷ்யாமின் முகம் மலர்ந்த சத்தம்..,!!! ....

Image
  ஷ்யாமின் முகம் மலர்ந்த சத்தம்..,!!! .... 19.09.2008.. ஷ்யாமின் பிறந்த தினம் முதலே உற்சாகம் தொற்றி கொண்டது ...பிறந்த உடன் பிஞ்சு கரங்களை பிடித்து பார்க்கும் பொழுது பட்டாம்பூச்சியின் மெல்லிய இதழ்கள் போன்று மிருதுவாக இருக்கும் ..இரண்டு கைகளில் மெல்லிய வெல்வெட்டு துண்டுடன் மார்போடு அனைத்துக்கொண்டு ஒரு கையினால் ஷ்யாமின் தலையை கீழே சாயாமல் சிமிட்டும் கண்கோளடு பார்ப்பது ஒருமுறை தான் ..வாழக்கையில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் பறந்துவிடும் . குழந்தைகளிடம் அளவுக்கதிகமான அன்புகொண்ட தகப்பனின் சற்று நீண்ட வெளியூர் பணிசெய்வது மிகவும் கொடுமையானதே.....அன்பு மகனின் பாசம் மனதில் நினைத்துக்கொண்டு சிறுவயது விளையாட்டுகளை நினைக்கும்போது கண்கள் குளமாக்கி கொண்டே இருக்கும் ... நான் வீட்டில் இருந்தால் நான் தான் அவன் உலகம் ...மாலைநேரம் வந்தால் எப்படியும் வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டுருப்பான் ..இரண்டு சக்கர வாகனத்தில் கொஞ்ச தூரம் பட்டாம்பூச்சி சிறகுகள் விரித்து பயணம் செய்துவருவோம் ..வடவள்ளி ..சுற்றி இருக்கும் பைமெட்டல் பேரிங் வழியாக வடவள்ளி பேரூந்துநிலையம் வழியாக கஸ்தூரிநாயக்கன் பாளையம் சென்று வான ப்ரஸதா மற்...