கணக்கு வருடம் ஆரம்பிக்கும் நாள் .....2022-2023.... ஆண்டின் முழு வருட கணக்கு முடிவு நாளாக நிர்ணயித்தது யார்? ஓர் ஆண்டு தொடங்கும் நாள் முதல் இறுதி நாள் வரை நாம் செலவழிக்கும், வரவு வைக்கும் பணம் ஏராளம். அதேபோல, வங்கிகளில் அன்றாடம் பணப்புழக்கம் இருந்துகொண்டே இருப்பது நிதர்சனம். வங்கி என்பது மக்களுக்காக செயல்படும் ஒரு அமைப்பு என்றாலும், அதன் பட்ஜெட் கணக்கு சரி பார்த்து ஒரு ஆண்டுக்கான வரவு செலவுகளை கணக்கிட்டு, நடந்து முடிந்த வருடத்துக்கான மொத்த கணக்கினை மார்ச் 31-ம் தேதி முடித்து ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டுக்கான கணக்கினை புதிதாக ஆரம்பிக்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஓர் ஆண்டின் முதல் மாதம் ஜனவரி எனும்போது டிசம்பர் 31-ம் நாள் கணக்கினை முடித்து, ஜனவரி 1-ம் நாளில் இருந்துதானே புதுக் கணக்கை ஆரம்பிக்க வேண்டும்? இந்த சந்தேகத்துக்கு விடை தேடியபோது சில சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைத்தன. பிரிட்டிஷ் அரசு நம் நாட்டில் நுழையும் முன்பு, முகலாய அரசர்கள் இந்தியாவை ஆண்டு வந்தனர். அந்த முகலாய அரசர்களின் பூர்வீகம் உஸ்பகிஸ்தான், சமர்காண்ட் போன்ற பகுதிகளைச் சார்ந்தது. அவர்கள் அங்கிருந்து இந்தியா வ...
Posts
Showing posts from March, 2022
- Get link
- X
- Other Apps
105 வயதைக் கடந்த ஆண்டம்மா இயற்கை எய்தினார். ஜிலோப்பநாயக்கன்பாளையத்தில் வசித்து வந்த ஆண்டம்மா கடந்த பத்தாண்டு காலத்திற்கும் மேலாக உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் தொடர்ந்து செய்திகளுக்குத் தரவாக இருந்தவர். இந்தப் பகுதியில் மிகவும் வயது முதிர்ந்த மூத்த பெண்மணியாகவும் இருந்தவர். கடைசி இரண்டு மாதம் வரை அவரே தன் கையால் சமையல் செய்து சாப்பிட்டு வந்தவர், இது நாள் வரைக்கும் ஆங்கில மருத்துவம் எனும் அலோபதி மருத்துவம் எடுத்துக்கொள்ளாதவர். நேற்று வயது மூப்பின் காரணமாக மாலை 7 மணியளவில் இயற்கை எய்தினார். அவருக்கு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வோம். உடுமலை வரலாறு 30.03.2022
- Get link
- X
- Other Apps
கதைசொல்லி ..பொள்ளாச்சி .. இன்று கதை சொல்லி ஆளுமை பவா செல்லதுரை அவர்களின் சந்திப்பு .பொள்ளாச்சி ..ஆச்சிபட்டியில் நடந்தது ..அருமையான மூன்று எழுத்தாளர்கள் மாதவன் நம்பியார்(இந்திய ஆட்சி பணி ) ,நாகராஜன் (பத்திரிகையாளர் ) ,திருச்செந்தாழை (எழுத்தாளர் )எழுதிய கதைகளை சொல்லிய விதம் அருமை ..இன்றைய ஞாயிறு அருமை .. என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
- Get link
- X
- Other Apps
இரத்த தானம் செய்வதால் நம்மால் ஒரு உயிர் காப்பாற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி புது இரத்தம் சுரப்பதினால் நம் உடலும் மனதும் சுறுசுறுப்படைகிறது. எனவே இரத்த தானம் செய்வோம் உயிர்களைக் காப்போம். MCC blood Donors செந்தில்குமார் புது மண தம்பதிகளுக்கு என் வாழ்த்துமடல் .. நம் அனைவருக்கும் என்ன பந்தம் ? நாம் ஆகிடலாம் இரத்த சொந்தம் .... உறவுகளாய் வாழ்ந்தால் மட்டும் இரத்த சொந்தம் ஆகிடுமா ? இரத்தம் தானம் தந்து வாழ்ந்துவந்தால் நாம் இரத்தசொந்தம் ஆகிடலாம்.... உடல் உறுப்பு தானம் தந்தால் இறந்தபின்னும் வாழ்ந்திடலாம் என்றும் வாழும்போதே மனிதனாய் வாழ்ந்தஇன்பம் இரத்த தானத்தால் தான் சாத்தியமே ..... சாவின் அருகில் சென்று திரும்பியவன் நம்மை தெய்வமாக கும்பிடுவான் ! ஊர்பெயரும் யாதென அறியாதவன் உன்னை உளமார வாழ்த்திடுவான்..... உறைந்து போகும் இரத்தம் கூட உயிரோட்டம் பெற்றிடுமே ! உரியவருக்கு நீயும் தந்தால் அவர் உயிர்தந்து காத்திடுமே..... பதினெண் அகவை தாண்டிவிட்டால் நாற்பத்து ஐந்து மேல் உடல் எடையிருந்தால் இரத்தம் தானமாக தந்திடலாம் அந்த எமனையும் இதனால் வென்றிடலாம் .... உடல்நிலை உன்னில் உன்னதமாயிருந்தால் உடனே இரத்...
- Get link
- X
- Other Apps
காதணி விழா ..நரேன் .மாதேஷ் ..ராஜாவூர் .. இன்று வெனசுபட்டி ஊர் நாயக்கர் குடும்ப விழா .. ஜல்லிபட்டி சொந்தங்கள் ,வென்சப்பட்டி பொறியாளர் சரவணகுமார் தம்பியுடன் ஒரு சந்திப்பு ...மாப்பிள்ளைகள் ராஜேந்திரன் ..ஈஸ்வரன் ..தம்பிகளுடன் இனிய சந்திப்பு ...தளி காந்தி மாமாவுடன் ஒரு நேர்காணல் ..பொருளாதாரம் ..விவசாயம் ..தொழில் துறை சார்ந்த தகவல்கள் ...இன்று நேரம் போதவில்லை ... தொடரும் விழாக்கள் ..நாளை முடிய ... என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
- Get link
- X
- Other Apps
பொறுமை ..சகிப்புத்தன்மை ...பொறுப்பு ... கணவர் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும் ஒரு பதற்றத்தோடேயே இருப்பார்..... எரிச்சலும் கொள்வார்.... ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்!..... ஒருநாள் அவரது மனைவி, .... "நான் நண்பர்களோடு சேர்ந்து சுற்றுலா போகிறேன்" .... என்று கணவரிடம் கூறினார்.... அவரும் அமைதியாக சம்மதித்தார்.... மகன் தனது தந்தையிடம் தயங்கியவாறு, "அப்பா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன்" என்றான்.... அதற்கு அந்த ஆணும், "ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும்.... முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் இருந்து படி" என்றார் அமைதியாக.... மகள் ஓடி வந்து, "அப்பா என் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டேன்" என்றாள் பதற்றத்தோடு.... அதற்கு, "கொண்டு போய் சரி செய்து விடு" என்றார்.... குடும்ப உறுப்பினர்கள் அவரின் அமைதியை கண்டு குழப்பம் கொள்ள ஆரம்பித்தனர். ஏதாவது மருந்துக்களை பாவித்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்கிறாரோ என்று கவலைப்பட தொடங்கின...
- Get link
- X
- Other Apps
கேள்வி : குதிரைகளின் பரிணாமம் & வரலாற்றுச் சிறப்புமிக்க குதிரைகள் பற்றி கூற முடியுமா ? என் பதில் : 📚✍️ கற்காலத்தில் மனிதன் எதிரிகளிடம் இருந்தும், கொடிய மிருகங்களிடம் இருந்தும் தப்பவேண்டி, அதற்கு வாகாக ஒரு மிருகத்தை பழக்க நினைத்தான், அவன் கண்காணித்ததில் மிக வேகமாக ஓடக்கூடியதாகவும் பழக்குவதற்கும் எளிதாகவும் இருந்த மிருகம் குதிரைதான்! அதை பழக்க ஆரம்பித்தது மனித நாகரீகத்தின் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு எனலாம். குதிரையை பழக்க ஆரம்பித்தபிறகுதான் மனிதன் தன் எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்தான், நிறைய புது இடங்களை கண்டுபிடித்தான், வளர்ச்சி பெற்றான். சரி.. முன்னுரை போதும்... இன்றிலிருந்து சுமார் நான்கரை கோடி வருடங்கள் முன்பு, நிறைய கால்களுடன் பூச்சியாக சுற்றிக்கொண்டிருந்த உயிரினம், மெல்ல பரிணமித்து, EOHIPPUS என்கிற உயிரினமாக உருவாகியது. "யோஹிபஸ்" பார்க்க குதிரையிலும் சேராமல், கழுதையிலும் சேராமல் ஒரு மாதிரி மான் போல இருந்தது. அதன்பின் சிலகோடி ஆண்டுகள் எடுத்துக்கொண்டு மெல்லப்பரிணமித்து சிலபல கட்ட வளர்சிகளில் இன்றுள்ள குதிரையின் உருவெடுத்தது. (இப்போது நம்மிடம் உள்ள குதிரைகளின் இனங்கள் ம...
- Get link
- X
- Other Apps
கேள்வி : நீங்கள் செய்த மிகப்பெரிய பணம் சார்ந்த தவறுகள் என்னென்ன? பதில் : நண்பர் கதிர்வேல் அவர்களின் அனுபவம் ... ஆம் மிகப்பெரிய தவறை செய்து இருக்கிறேன். அப்போது சொந்தமா DTP சென்டர் வைத்து, இரண்டு ஆட்களை வேலைக்கு போட்டு நன்றாக நடத்திக் கொண்டு இருந்த நேரம்…. ரியல் எஸ்டேட் வானாளவிய உயரத்தில் வளர்ந்து, தெருவுக்கு இரண்டு புரோக்கர்கள் சுற்றி வந்த நேரம், நில புரோக்கர்-னு சொல்றது கேவலமா இருந்தை மாற்றி, நான் ரியல் எஸ்டேட் பண்றேனு பெருமையா சொல்லிகிட்டாங்க. என்னோட படித்த நண்பன் வந்தான். "என்னடா கலை, இன்னும் இப்படியே எவ்ளோ காலத்துக்கு இருக்கப்போற, நான் ஒரு ரியல் எஸ்டேட் டீம்ல இருக்கேன்…வந்து சேர்ந்துகோ…நீ கொடுக்கற பணத்துக்கு ஏற்ப லாபம் கொடுப்பாங்கனு சொன்னான். சரி, நாமலும் எவ்ளோ நாள்தான் சராசரியா இருக்கறது, நம்மால பென்ஸ் கார் வாங்க முடியலானாலும், மாருதியாவது வாங்கிடனும்டானு அவனோட சேர முடிவு பண்ணேன். அவங்க டீம்ல மொத்தம் 4 பேர். என்னோட சேர்த்து 5 பேர். நான் 3 லட்சம் போட்டேன். எங்கள விட பெரியவரா இருக்கறவர் டீம் லீடர் 30 லட்சம், மற்றவர்கள் எல்லாம் சேர்த்து 50 லட்சம் முதலீடா போட்டோம். எங்க திட...