105 வயதைக் கடந்த ஆண்டம்மா இயற்கை எய்தினார்.
ஜிலோப்பநாயக்கன்பாளையத்தில் வசித்து வந்த ஆண்டம்மா கடந்த பத்தாண்டு காலத்திற்கும் மேலாக உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் தொடர்ந்து செய்திகளுக்குத் தரவாக இருந்தவர். இந்தப் பகுதியில் மிகவும் வயது முதிர்ந்த மூத்த பெண்மணியாகவும் இருந்தவர்.
கடைசி இரண்டு மாதம் வரை அவரே தன் கையால் சமையல் செய்து சாப்பிட்டு வந்தவர், இது நாள் வரைக்கும் ஆங்கில மருத்துவம் எனும் அலோபதி மருத்துவம் எடுத்துக்கொள்ளாதவர்.
நேற்று வயது மூப்பின் காரணமாக மாலை 7 மணியளவில் இயற்கை எய்தினார்.
அவருக்கு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வோம்.
அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வோம்.
உடுமலை வரலாறு 30.03.2022
Comments
Post a Comment