கேள்வி : நீங்கள் செய்த மிகப்பெரிய பணம் சார்ந்த தவறுகள் என்னென்ன?
பதில் :
நண்பர் கதிர்வேல் அவர்களின் அனுபவம் ...
ஆம் மிகப்பெரிய தவறை செய்து இருக்கிறேன்.
அப்போது சொந்தமா DTP சென்டர் வைத்து, இரண்டு ஆட்களை வேலைக்கு போட்டு நன்றாக நடத்திக் கொண்டு இருந்த நேரம்….
ரியல் எஸ்டேட் வானாளவிய உயரத்தில் வளர்ந்து, தெருவுக்கு இரண்டு புரோக்கர்கள் சுற்றி வந்த நேரம்,
நில புரோக்கர்-னு சொல்றது கேவலமா இருந்தை மாற்றி, நான் ரியல் எஸ்டேட் பண்றேனு பெருமையா சொல்லிகிட்டாங்க.
என்னோட படித்த நண்பன் வந்தான்.
"என்னடா கலை, இன்னும் இப்படியே எவ்ளோ காலத்துக்கு இருக்கப்போற, நான் ஒரு ரியல் எஸ்டேட் டீம்ல இருக்கேன்…வந்து சேர்ந்துகோ…நீ கொடுக்கற பணத்துக்கு ஏற்ப லாபம் கொடுப்பாங்கனு சொன்னான்.
சரி, நாமலும் எவ்ளோ நாள்தான் சராசரியா இருக்கறது, நம்மால பென்ஸ் கார் வாங்க முடியலானாலும், மாருதியாவது வாங்கிடனும்டானு அவனோட சேர முடிவு பண்ணேன்.
அவங்க டீம்ல மொத்தம் 4 பேர். என்னோட சேர்த்து 5 பேர். நான் 3 லட்சம் போட்டேன். எங்கள விட பெரியவரா இருக்கறவர் டீம் லீடர் 30 லட்சம், மற்றவர்கள் எல்லாம் சேர்த்து 50 லட்சம் முதலீடா போட்டோம்.
எங்க திட்டம் என்னவென்றால், ஒரு இடத்தில் 100 ஏக்கர் சுற்றி வளைப்பது, ரோட்டுக்கு ஓரமாக இருப்பவர்களுக்கு ஒரு ரேட் பேசி அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்ட் போட்டுக்கொள்வது, அதற்கு பின்னால் இருப்பவர்க்கு ரேட் பேசி டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு அவர்கள் நிலத்தையும் வளைத்து, பெரிய கம்பெனிக்கு வியாபாரம் செய்து லாபம் பார்ப்பது.
சென்னை பெங்களூர் சாலையில் காஞ்சிபுரம் அருகே நிலத்தை பார்த்தோம். ரோட்டோரமா இருப்பவர்க்கு 20 லட்சம் கொடுத்து அக்ரிமெண்ட் போட்டோம். 25 லட்சம் பரவலாக டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி கொண்டோம். மீதி 5 லட்சத்தில் ஒரு ஆபிஸ் வாடகைக்கு எடுத்தோம் போக்குவரத்து மற்ற செலவீனங்களுக்கு வைத்துக் கொண்டோம்.
மொத்தம் 35 வீட்டுகார்கள் மேல் நில சொந்தகாரரா வந்தனர். அவ்வளவு பேருக்கும், இடத்திற்கு ஏற்ப தொகை கொடுத்து எங்களுக்கே நிலத்தை தர வேண்டும் என உறுதிமொழி வாங்கி கொண்டோம்.
நிலப்பத்திரங்களை ஜெராக்ஸ் எடுத்து எங்கள் வியாபாரத்தை ஆரம்பித்து விட்டோம்.
இப்போ எங்களிடம் 100 ஏக்கர் இருக்கிறது. (உண்மையா ஒரு சென்ட் கூட இல்லை😏😏).
பல சோர்ஸ் மூலமா பரவி, எங்களிடம் 100 ஏக்கரா இருப்பதாக நினைத்து பலர் எங்கள தொடர்பு கொண்டார்கள்.
ஒருவர் மூலம் சென்னை வந்து, பெரிய பிசினஸ் ஆளிடம் வியாபாரம் பேச அமர்ந்திருந்தோம். அந்த பெரிய ஆளும் வந்தார்.
# எவ்ளோ நிலம் இருக்குபா உங்க கிட்ட?
100 ஏக்கர்ங்க…
# அப்படியா டாக்குமெண்ட்ஸ் கொடுங்க..
(எங்க ஜெராக்ஸ் பத்திரத்தை கொடுத்தோம்).
# என்னங்க ஜெராக்ஸ் கொடுக்கறிங்க. ஒரிஜினல் தாங்க..
ஒரிஜினல் பத்திரமா… அது நிலத்துகாரங்க கிட்ட தாங்க இருக்கு.
# அப்பனா உங்ககிட்ட இந்த ஜெராக்ஸ்தான் இருக்கா?
ஆமாங்க…
# எவ்ளோ நிலத்துக்குதான் அக்ரிமெண்ட் போட்டு இருக்கிங்க?
2 ஏக்கர் போட்டு இருக்கோம்-ங்க.
# ஆக 2 ஏக்கர் நிலத்துக்கு அக்ரிமெண்ட் போட்டுட்டு 100 ஏக்கர் நிலத்துக்கு பிசினஸ் பண்ண வந்து இருக்கிங்க இல்லையா..
ஆமாங்க, மத்தவங்க எல்லாம் எங்களுக்கே கொடுக்கறோம்னு சத்தியம் பண்ணி இருக்காங்க, நீங்க முதல்ல ஒரு 15 கோடி கொடுத்தீங்கனா மத்தவங்களுக்கு பணம் கொடுத்து அக்ரிமெண்ட் போட்டுடலாம். பிறகு உடனே ரிஜிஸ்டர் வச்சகலாங்க 😏
( அந்த பெரிய ஆள் டென்சன் ஆகி, ஜெராக்ஸ் பேப்பர் தூக்கி விசிறி அடிச்சான்)
# யோவ் உங்களுக்கெல்லாம் அறிவு இருக்காயா… 2 ஏக்கர்க்கு அக்ரிமெண்ட் போட்டுட்டு 100 ஏக்கர்க்கு பேரம் பேச வந்துட்டீங்க. அக்ரிமெண்ட் போட்ட நிலத்தையே ரிஜிஸ்டர் டைம்ல, நிலம் கொடுக்கமாட்டோம், எக்ஸ்டா பணம் கொடுத்தா தான் ரிஜிஸ்டர் பண்ண வருவோம்னு அவனவன் பிரச்சனை பண்றான். நீங்க எதையும் பண்ணாமா, பிசினஸ் பேச வந்துட்டீங்களா…அதுவும் நான் 15 கோடி கொடுத்த பிறகு நீங்க போய்ட்டு அக்ரிமெண்ட் போட்டுட்டு எங்களுக்கு ரிஜிஸ்டர் பண்ணிட்டு லாபம் எடுத்திட்டு போவிங்க. அதுக்கு நானே நேரடியா பண்ணிட்டு போவேனே….நீங்க எதுக்கு. Useless fellows…
எனக்கு பகீர்னு இருந்துச்சு. என்னடா இது, நமக்கு ஒன்னுமே தெரியாம நண்பன் சொன்னானே இறங்கிட்டுமே, அவன் 5 லட்சம் போட்டது இல்லாம நம்மள வேற கோர்த்து விட்டுட்டானேனு கலக்கமா போச்சு.
அந்த ஆள் திட்டிட்டு போனதும் திரும்ப ஊருக்கு வந்துட்டோம். பிறகு தான் அனைவரையும் ஆராய ஆரம்பித்தேன் அனைவரும் ரியல் எஸ்டேட் வியாபாரத்துல அரைகுறை. அவங்க தோரணைய பார்த்து ஏமாந்துட்டேன். அதிகபட்சம் 6 மாசத்துல வியாபாரம் முடிஞ்சுடும் என்னோட பங்கா 1 கோடி கிடைக்கும்னு சொன்னாங்க.
வியாபாரத்தை பத்தி பேசும்போது மிக எளிதா கைமாத்தி விட்டா போதும். நமக்கு கோடிகள்ல லாபம் கிடைக்கும்னு சொன்னாங்க.
இந்த முட்டாள் தனமான வியாபாரத்திற்காக 3 வருட காலம் அலைந்தேன். என் தொழில் போச்சு. கடன் வாங்கி கொடுத்த பணத்திற்கு வட்டி ஏறவே, எல்லாத்தையும் விக்க வேண்டியதா போச்சு.
3 வருடகாலம் படாத அவஸ்தை பட்டேன். இப்படி ஒரு வியாபாரம் செய்யவே முடியாத நிலமை வந்த பிறகு, கொடுத்த பணத்தையாவது கேக்கலாம்னு நிலத்துக்காரங்க கிட்ட போய் கேட்டோம்.
நீங்க வியாபாரம் பண்ணுவீங்கனு சொல்லி, அம்பானியே வந்து கேட்டபோதும் நாங்க கொடுக்காம உங்களுக்காக வச்சி இருந்தோம். இப்ப வியாபாரம் பண்ணலனு அட்வான்ஸ்ச திருப்பி கேக்கறீங்க…மரியாதையா பேசனபடி பணத்தை கொடுத்துட்டு நீங்க ரிஜிஸ்டர் பண்ணிக்குங்கனு இல்ல நடக்கறதே வேறனு ஊரே திரண்டு சண்டைக்கு வந்துடிச்சு. விட்டா போதும்னு ஓடி வந்தோம்.
இதுதான் நான் ரியல் எஸ்டேட் பண்ண போறேனு இறங்கி கண்டமான கதை.
ஒரு தொழிலில் இறங்குமுன் நடைமுறை சாத்தியங்களை பார்க்காமல் இறங்கினால் என்னை போலதான் இழந்து நிற்கனும்.
…….. ஒரு கட்டத்தில் அந்த வியாபாரமே பண்ண முடியாதுனு தலை முழ்கிட்டு"… வீட்ல வந்து சொன்னபோது….
"ஏன்யா, கார் வாங்கி தரேன், கம்மல் வாங்கி தரேனு 3 வருசமா கதையா சொல்லிட்டு , 3 லட்சத்த அம்போன்னு விட்டுட்டு வீட்டுக்கு வேற வரையா நீ…"
"இந்த டைம் அடி கொஞ்சம் பலமாவே விழுந்துச்சு😏😏"
நன்றி ......
Comments
Post a Comment