நான் வெளி நாட்டில் ஒரு மல்ட்டி நேஷனல் கார்ப்பரேட் நிறுவனத்தில் 1994 இல் ப்ரொடக்ஷன் என்ஜினியராக சேர்ந்து படிப்படியாக உயர்ந்து 2015 இல் அதே க்ரூப்பில் நான்கு நிறுவனக்களுக்கு சி.இ.ஓ வாகவும் மேனேஜிங் டைரக்டராகவும் ஆகி, 2019 இல் விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு இந்தியா வந்து செட்டில் ஆகி என் மனதிற்குப் பிடித்து பொழுதுபோக்கு விஷயங்களை செய்து கொண்டே பிஹச்டி யும் படித்துக் கொண்டிருக்கிறேன்.
என்னுடைய 30 வருட கார்ப்பரேட் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்டவை:
1. கடின உழைப்பு உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். அதற்காக உயிரைக் கொடுத்து வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை
2. உங்களைச் சுற்றி நிறைய பேர் குழி பறிப்பார்கள். உங்கள் வேலையை செய்து கொண்டே அவர்களை சமாளிக்கவும் வேண்டும்.
3. வேலையை வேலையாக மட்டுமே பார்க்க வேண்டும். உடல் நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு ஏதேனும் நடந்து விட்டால், அடுத்த நாளே உங்கள் இடத்திற்கு இன்னொருவர் வந்து கம்பெனியைக் காப்பாற்றி விடுவார். ஆனால் உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் ஒருவர்தான் . மறந்து விடக் கூடாது.
4. செல்ஃப் மார்க்கெட்டிங் ரொம்ப ரொம்ப அவசியம். உங்கள் திறமைகளைப் பற்றியும், உங்கள் சாதனைகளைப் பற்றியும் நீங்கள் ஒருவர் மட்டும்தான் ஆணித்தரமாகப் பேச முடியும். கூச்சமோ, தன்னடக்கமோ கார்ப்பரேட் செட்டப்பில் வேலைக்கு ஆகாது.
5. டீம் வொர்க் மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் டீமில் உள்ளவர்களின் சாதனைகளைப் பற்றி வெளீப்படையாகப் பேசி அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வாங்கிக் கொடுக்க வேண்டும். அது ஒரு நல்ல தலைவனுக்கு அழகு மட்டுமல்ல கம்பீரமும் கூட. என் நிறுவனத்தில் என்னால் உயர்ந்தவர்கள் ஏராளம்.
6. கடைசியில்.....விடாமுயற்சி...
நன்றி ...
Comments
Post a Comment