நொய்யல் இன்று .....
சமரசமில்லா எழுத்துப்போராளி கா.சு. வேலாயுதன்
நீண்ட நெடிய எழுத்துக்குச் சொந்தமானவர், பத்திரிகை உலகில் தனக்கெனத் தனி இடம் பதித்தவர். நொய்யலை ஏற்கனவே படித்தவர்களுக்கு இது பழைய செய்தியாக இருந்தாலும், பழைய மொந்தையில் புதிய கள்ளாகக் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர். 25 கட்டுரைகளை வடித்துள்ளார்.
நொய்யலின் வரலாற்றுச் சான்றுகளை முன்னிறுத்தும்போது தொல்லியல் ஆய்வாளர் பூங்குன்றன் அவர்களையும் , அரசியல் ஆதாரங்களை முன்னிறுத்தும் போது புரட்சி நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் அரங்கநாயகம் அவர்களையும், முன்னிறுத்துகிறார். இவ்வாறு நொய்யலின் தொடக்க காலம் இன்றைய காலத்திற்கேற்றவாறு பல்வேறு வரலாற்றுச்சான்றுகளையும், இலக்கியச்சான்றுகளையும், முன்னிறுத்து எழுதியிருக்கிறார் என்பதைக்காட்டிலும் நொய்யலின் மீதானதன் காதலை வெளிப்படுத்தி உள்ளார்.
சமூக அர்ப்பணிப்புள்ள ஒரு சாமானிய எழுத்தாளனுக்குள்ள அத்தனை உணர்வுகளையும் ஆங்காங்கே சொல்லிச் செல்கின்றார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவை குடியிருப்புகள் அல்ல . . நீர் நிலைகளே என்பதையும், இயற்கையான காட்டாற்று வெள்ளம் வந்தால் என்னென்ன நடக்கும், என்னென்ன எவ்வாறெல்லாம் கடந்த காலங்களில் நடந்துள்ளது என்பதை கண்முன்னே பார்த்த முதன்மைச்சான்றாளர்களின் முகவரியோடு பதிவு செய்திருக்கிறரர்.
நொய்யலின் தோற்றுவாயில் தொடங்கி தன்னைத்தானே தகவமைக்கும் எனும் தலைப்புகளோடு ஒவ்வொரு நிலத்தையும், ஒவ்வொரு பகுதியினையும், குறிப்பிட்டுச் சொல்லும்படியும், வரலாற்று ஆய்வாளர் பார்வையிலும்;, சமூக ஆய்வாளர் பார்வையிலும், இலக்கியவாதியின் பார்வையிலும் எனத் தமக்கே உரித்தான ஒரு பத்திரிகையாளனின் அனைத்து பன்முகப்பார்வையோடும் நொய்யலைப் பதிவு செய்திருக்கிறார் என்று சொல்வதைக் காட்டிலும், நொய்யலை காப்பாற்ற வேண்டுமென தம் வேண்டுகையை வைத்துள்ளார் என்றே நாம் உணர்ந்து கொள்வோம்.
நொய்யலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள் உருவாகும். இதில் 180 க்கும் மேற்பட்ட நொய்யலைப் படிக்கும் போது மனசு கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. இது எழுத்துப்போராளியின் தாக்கமெனவே கொள்ளலாம்.
காட்டாற்று வெள்ளமாய் நொய்யல் ஓடி வரட்டும் . . .. கவிஞர் புவியரசு சாபமிட்டது போல் ' நம் தாயை பக்கவாட்டில் நெருக்கி, நெருக்கி அசைய முடியாமல் ஆக்கிரமிப்பாளர்கள் யாராயினும் அவர்கள் நாசமாய்ப் போகட்டும், சாகும் போது அவர்களுக்கு ஒருவாய்தண்ணீர் கூடக் கிடைக்காமல் போகட்டும்'
-உடுமலை சிவகுமார்.
Comments
Post a Comment