அக்டோபர் 2, காந்தி பிறந்த நாள் காமராஜர் இறந்த நாள். இந்த நினைவுகளோடு ஒரு உறவுகளையும், தொல்லியல் எச்சங்களையும் பார்த்து வர நிறைவன ஒரு பயணம்.

 அக்டோபர் 2, காந்தி பிறந்த நாள் காமராஜர் இறந்த நாள். இந்த நினைவுகளோடு ஒரு உறவுகளையும், தொல்லியல் எச்சங்களையும் பார்த்து வர நிறைவன ஒரு பயணம். 

உடுமலையிருந்து பெரம்பலூருக்கு ஒரு பயணம். இந்த முறை நால்வர், திருப்பூர் பாலு மற்றும் முனிசுடன் சிவாவும் நானும். 

வுழக்கம்போல் இந்தப்பயணமும் அக்டோர் 1 ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டிருந்தோம். மீண்டும் திருப்பூர் பாலு அவர்களின் பயண மாற்றத்தால் மறுபடியும் அக்டோ.2 ஆம் தேதி உடுமலையிலிருந்து பயணம் மேற்கொண்டோம். இதில் நடைபெற்ற, நடந்த நிகழ்வுகளின் சுவாரஸ்யத் தொகுப்புகள்.

வழக்கம்போல் இந்தப் பயணக்கட்டுரையும் சிவாவுக்கே சமர்ப்பணம்.

கடந்த ஏப்ரல் ஒரு பண்பாட்டுப்பயணம் நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு தஞ்சை சென்று அங்கு இரவில் தங்கிவிட்டு மறுநாள்  தஞ்சையிலிருந்து வரும்போது இயல்பாக  பெரம்பலூர் ஆறுமுகம் அய்யா அவர்களுக்கு தொலைபேசி செய்து இதுபோன்று திருச்சி நேற்று வந்துவிட்டு இன்று தஞ்சை வந்துவிட்டு  ஊருக்குச் சென்றுகொண்டிருக்கின்றோம். உங்களைப் பார்க்க வரலாமா என்று கேட்டமைக்கு ஓ . . தாராளமாக வாருங்கள். வீட்டில்தான் இருக்கிறேன்.  கண்டிப்பாக வந்து செல்லுங்கள் என்று சொன்னது  ஏதோ மனதிற்குள் சொல்லமுடியாத ஒரு ஈர்ப்பை உருவாக்கியது என்றால் மிகையில்லை.  அப்பொழுது மேம்பாலத்தில் சென்று கொண்டே பேசியது.  மீண்டும் வந்து கொண்டே பேசிய போது சுமார் 50 கி.மீ தாண்டி திருச்சி வந்து விட்டோம் என்றது மிகவும் சங்கடத்தையும் வேதனையும் உருவாக்கியது. ஆனால் அய்யா அதனைப் பெரியதாக எடுத்துக்கொள்ள வில்லை. சரி போய் வாருங்கள் . .. இன்னொரு முறை சந்திப்போம் என்று கடந்து சென்று விட்டார். ஆனால் அன்று நின்ற மனதோட்டம் இன்றுதான் கடந்து சென்றது. 

வழக்கமாக ஞாயிறு களப்பணிகளில்  முனீசும் கடந்த இரண்டு மாதகாலமாக வந்து கொண்டிருக்கிறார். இவர் முதுகலைப்பட்டம் படிக்கும்போது கடைக்கு வந்தவர். கோழிப்பண்ணை வேலைக்கு போகும் இவரை முனைவர் பட்டம் படிக்கச்சொன்னதும், சி.பி.கோபால் இவரை முனைவர் பட்டம் படிக்க உதவி செய்யாமல் அவருடைய சாதிக்காரப் பையன் நாகராஜை படிக்க வைக்க நினைத்தும் இவரே பாரதியார் பல்கலைக்கழகம் சென்று படிக்கும் போது தொகையில்லாமல் சிரமப்பட்ட போது அப்போது ஏ.டி.பி. மேலாளராக அய்யா ஆறுமுகம் இருந்தார்.  இவர் ஏதேச்சையாக ஒருநாள் தளி ரோட்டில் நடந்து வந்தபோது அப்போது கடையின் முன் பெரியார் படம் போட்டிருந்தேன். அதைப் பார்த்து உள்ளே வந்து ஒரு போலீஸ் அதிகாரி போல் விசாரித்தார் நானும் பயப்படாமல் நான் பெரியாரிஸ்ட் என்று சொன்னதும், தோளில் தட்டிக்கொடுத்த அப்போது அருகிருந்த தேநீர்க்கடைக்கு அழைத்துச்சென்று தேநீர் பலகாரம் சாப்பிடச்சொன்னார். நான் நீங்கள் யார், எங்கிருந்து வந்தீர்கள் ஏன் இவ்வாறு எனக்கேட்ட போது நான் ஏ.டி.பி. பேங்க் மேனேஜர் உங்க கடையின் பெயர்ப்பலகையில் பெரியார் படம் போட்டிருந்தீங்க, எவ்வளவு துணிச்சலா இந்தப் படம் போட்டிருக்கீங்க, நீங்க உண்மையில் நல்லவர்தான். அதற்காகத்தான், என்று உறவுடன் வந்தவர்.  சிவராம் காபிக்கு மேல் உள்ள அறைக்கு அடிக்கடி வரச்சொல்லுவார் அவரிடம் இருக்கும் பெரியாரிய புத்தகங்களை எனக்குக் கொடுப்பார். நானும் சிந்தனையாளர், தலித் முரசு என வரும் புத்தங்களை அவருக்குக் கொடுத்தேன். நெருக்கம் அதிகமானது. வங்கிக்கு அழைத்து நகல் எடுக்கும் பணியைத் தரச்சொன்னார். ஏற்கனவே வேறாளுக எடுத்திட்டிருக்காங்கன்னு சொன்னதும், சரி நீங்க ரெண்டு பில் கொடுங்க என கடையின் பில்லில் 500, 1000 எனப்பூர்த்தி செய்து கொடுக்க அடுத்த நிமிடம் பணம் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

அப்போது காசி ஆனந்தனின் நறுக்குகள் அறிமுகக்கூட்டம்  குமரன் அரங்கில் சேகர் உடனிருந்தார். உடுமலை, கோபி, பல்லடம், கோவை என நான்கு இடங்களில் ஏற்பாடு பொள்ளாச்சியில் உமாபதி தடுத்துவிட்டார். நான்கு நாட்கள் திட்டமிட்டு கூட்டம் நடத்தினோம். அப்போது இவரிடம் சொல்லும்போது கவலைப்படாதீங்க நா ஆயிரம் ரூபா தருகிறேன் என்று சொல்லி கொடுக்கவும் செய்தார். அப்போது அது பெரிய தொகை. மொத்த  செலவு 7500 பொங்கல் நிறைய சேதம் ஆனது. அந்தக்கூட்டத்தில் காசி ஆனந்தனிடம் யார் முதலில் புத்தகம் வாங்குவது எனநிறைய பேரைக் கேட்டும் யாரும் மேடைக்கு வர சம்மதிக்கவில்லை. அய்யாவிடம் கேட்ட போது நான் வர்றேங்க . .. என்று மேடைக்கு வந்து காசி ஆனந்தனிடம் புத்தகம் பெற்ற அன்புள்ளங்கொண்ட கொள்கை ஆளுமை.

அவரைச்சந்திக்க பெரம்பலூர் செல்வது என உறுதி செய்யப்பட்டது.  ஞாயிறு 1 ஆம் திட்டமிட்டு பிற்பாடு பாலு வராததால்  2 ஆம் தேதி போலாம் என முடிவெடுத்து திங்கள் காலை 6 முதல் 6.15 க்கு காந்திராம்ஸ் வாங்க என முனிசிடம் சொல்ல ஏற்பாடுகள் நடந்தது.  சனி இரவே அய்யா இரண்டு முறை அழைத்தார். அய்யா இது போன்று திங்கள் வருகிறோம் என்று சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் அப்படியா ...(கொஞ்சம் இடைவெளிவிட்டு) சரிங்க வாங்க. எனப் பெருந்தன்மையோடு சொன்னார்.  கடந்த முறை கொடைக்கானல் செல்லும் போது நான் தூங்கிவிட்டேன். அதனால் முன்னெச்சரிக்கையாக  அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து உட்கார்ந்து கொண்டேன். மீண்டும் தூங்காமல் வீட்டிற்குள்ளேயே நடந்து கொண்டிருந்தேன். 5.15 க்கு குளித்து 5.30 க்கு தயராகிவிட்டேன். ஆனால் சிவா 6.20 க்குத்தான் வந்தார். 

திங்கள் காலை 5.30 என்று 6.40 க்குகிளம்ப அதிகாலை 4.30 மணிக்கு திருப்பூர் பாலு அழைக்க நானும், முனிசை எழுப்பிவிட, சிவாவோ தொலைபேசி எடுக்கல. சுரி, 5.30 முதல் தயாராக இருக்க  6.20 க்கு சிவா வர, வண்டி கழுவி கிளம்ப 6.49, 7.04 காந்திராம்ஸில் முனிசை அழைத்துக்கொண்டு  தாராபுரம் சாலையில்  சென்று பெட்ரோல் 2000 த்திற்கு  போட, ஆயிரம் ரூபாய் சிவா பங்களிப்பில்  போடப்பட்டது.  வண்டி ஏர் செக் பண்ணனுமே, அவர் இல்லெ எனச்சொல்ல, சரி என்று கிளம்ப, அடுத்தது பார்ப்போம். (அவ்வளவுதான்)  தாராபுரம் சாலை, தாந்தோணி, துங்காவி, காரத்தொழுவு அடுத்து  வேகத்தடையைப் பார்க்காமல்  வண்டி ஓட்ட  முனிசுக்கு தலையில் சரியான அடி வரும் வரைக்கும் இதைச்சொல்லிக் கொண்டிருந்தார்.

காரத்தொழுவு அடுத்து தளவாய்ப்பட்டிணம் கணேசை அழைத்து  இந்த ஆண்டு திருவள்ளுவர் நாளுக்கு அழைப்பிதழ், சிலை கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்க அவரோ நாளை (இன்று 03.10.) வருவதாகச் சொல்லி அடுத்து தொடர்ந்த பயணம். தளவாய்பட்டிணம், தாராபுரம் சிக்னலில் பாலு நின்றிருக்க அழைத்துக்கொண்டு செல்ல, மணி 8.15. அங்கேயே சாப்பிடலாம் என்ற முடிவில்  கடைவீதி சென்று பாலாஜி பவனில் சிற்றுண்டி.  இட்லி பொங்கல், இட்லி ரோஸ்ட், அரை காபி முனிஸ் காசு கொடுக்க மீண்டும் பயணம் தாராபுரத்தில்  தொடர்ந்தது. இதற்கு முன்பு தாராபுரத்தில் அமராவதி வாய்க்கால் தாண்டும்போது சசி அழைத்துப் பேச  வாகனம் சென்றுவிட்டது. மீண்டும் ஏற்கனவே வந்த  விராட்சி மங்கலம் கிளார்க் மாரிமுத்து வீடு வழியாக சிவாவுக்கு வழி மறந்திடுச்சி மீண்டும் திருப்பி வந்தார். முறையாக சசி கலா இந்த 28,29,30, உடுமலை வருவதாகச் சொல்லி இருந்தார். வரவில்லை. அதற்காகத்தான் பேசினோம். மீண்டும்  10,11 சொல்லியிருக்கிறார் பார்ப்போம். இதன்பிறகே ஊரின் பெயர்களும் எழுதப்பட்டது. ரெட்டார வலசு, ராமப்பட்டிணம் (இங்கும் ராமப்பையன் வந்துள்ளான்) அக்கறைப்பாளையம், இங்கிருந்துதான் வெள்ளகோவில் திரும்பவேண்டும். கொளத்துப்பாளையம், கணபதிபாளையம், மூலனூர், (இங்கிருந்து அரவக்குறிச்சி போனால் பைபாசில் வழி) அண்ணா  நகர், தாழக்கரை, நாச்சியாவலசு, கன்னிவாடி, (இங்கிருந்தும் அரவக்குறிச்சி பைபாஸ் போகலாம்) சின்னதாராபுரம் (இது சுத்து)வெங்கிட்டாபுரம், சூடாமணி,வளையனூர், இளவனூர், காசிபாளையம் (இந்த ஊர்களைக் கடக்கும் போதும் அரசியல் சார்ந்தும், ஊர் சார்ந்துமான பேச்சுக்களே தொடர்ந்தது.) கள்ளக்குறிச்சி பிரிவு, கொளத்தூர், ஐந்து ரோடு, பவித்ரம், தண்ணீர்ப்பந்தல், இதுவே சின்னதாராபுரத்திலிருந்து கரூர் பைபாஸ் அடையும் சாலை, (இது சுத்து வழி) தாராபுரத்தில் உணவு முடித்து முனிஸ் சிவாவிடம் வாகனத்தை இடையில் நிறுத்தச்சொல்ல அது சின்னதாராபுரமே வந்து நின்றது. 

சரி, கரூர் போக சின்னத்தாராபுரம் வழியாகச்சென்றால் வழி எளிமையாக இருக்கும் ஏற்கனவே  மருதம் டெக்ஸ்டைல்ஸ் ஜெயப்பிரகாஷ் மகன் திருமணத்திற்கு போனபோது போன வழி, ஆனால்  அதை விட அரவக்குறிச்சி வழியாகச் சென்றால்  வழியும் சிறப்பாக உள்ளது.  ஆனால் போகும்போது சின்னதாராபுரம் கரூர் நகரத்திற்குள் சென்று மீண்டும் பைபாஸ் செல்வதற்குக் காலத்தாழ்வு ஆகிவிட்டது. போகும்போது செட்டிநாடு சிமெண்ட் பேக்டரி, எம்.ஏ.எம்.ராமசாமி கதைகளையும் அண்ணாமலை யுனைவர்சிட்டி முனீஸ் சொல்லிக்கொண்டே வந்தார். வழியில் திருக்காம்பிலியுர், மேட்டுமகாதானபுரம், கருப்பத்தூர், திம்மாச்சிபுரம், பள்ளிநத்தம், என ஊர்ப்பெயர்களையும் பார்த்துக் கடந்து சென்றோம். வாழவந்தி இது ஒட்டன்சத்திரம் முதல் வாழவந்தி நாடு என கொங்கு 24 நாடுகளில் உள்ளதென நினைவு.  இவர்களால் உயர்கல்வித்துறை பாழானதெனவும் கூறினார். புலியூரில் தொடர்வண்டி நிலையம் இங்குதான் சிமெண்ட் பேக்டரிக்குள் தொடர்வண்டி சென்று சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வெளியே வருமெனவும் பேசிக்கொண்டோம். அருகே மாயனூர் கோயில் இங்குதான் எப்பொழுதும் கிடா வெட்டிக்கொண்டே இருப்பார்கள் எனவும் எப்பொழுது போனாலும் இங்கு கிடாவிருந்து நடைபெறும் என பாலு கூறினார். 

இங்கு மாயனூர் மதகில்தான் மணல் எடுக்கப்படுகிறதெனவும், இரண்டு இரண்டு கம்பெனிகள் மட்டுமே செயல்படுவதாகவும் மணல்  கட்டுப்பாடாக வழங்கப்படுகிறதெனவும் கூறினார். கரூரில் காலைவேளையாக இருந்ததால் போக்குவரத்து அவ்வளவாக இல்லாமல்  சென்றுவிட்டோம். சிவாவின் டிரைவிங் வழக்கம்போல் மெதுவாக போய்க்கொண்டிருக்கிறது. அடுத்து வந்த ஊர்கள் புலியூர் , பொன்னு சங்கம்பட்டி, பெத்துப்பட்டி, தம்மம்பட்டி, (இது புத்தசமயம் பரவியிருந்ததூன ஊர்) இப்போது கல்வி தொடர்பாகவும், கல்வித் தந்தைகள் தொடர்பான பேச்சுகள் ஓடிக்கொண்டிருக்கிறது. பாலுவும் முனிசும்  தொடர்ந்து சோர்வில்லாமல்  ஆன்மீகவும் தொடர்பாகவும், சமூகம் தொடர்பாகவும் பேச்சுகள் ஓடிக்கொண்டிருந்தது.  மணி.11.30 கரூரிலிருந்து வந்து பைபாஸ் வழியாக வண்டி சென்றுகொண்டிருக்கிறது. இமையம் கல்லூரி சாலையின் இடது புறத்தில் பெரிய கல்வி நிறுவனம். அடுத்து கோத்தையம்பட்டி, மாத்திரபுரி, ஆத்திமரம், நாகலாபுரம், அடைக்காம்பட்டி, எலந்தம்பட்டி வரும்போது நக்கசேலம் பெயர்ப்பலகை வந்தது.  இதை முனிஸ் நக்கிசேலமென நக்கலாக பேசினார். மட்டப்பாறை, மங்கூன் வந்து கொண்டிருக்கும் போது  பாலு தம்பி இ;ந்த வழி சுத்து எனவும், சேலம் வழியாக வந்தால் மிகவும் பக்கம் எனவும் கூறுகிறார். (மனதில் சிரித்துக்கொண்டேன்)  அடுத்து அம்மாபாளையம், இந்த வழியில் ஒருடோல்கேட் இருப்பதாக பாலு கூறினார். அடப்பாவி டோல்கேட் இல்லாமலிருக்கும் என நினைத்தால். . . நான் ஏமாந்துவிட்டேன்.  மணப்பாறை அருகில் ஒரே டோல்கேட் பாதை நல்லாவும் இருக்கும். சரி என்ன செய்ய,

டோல் கேட் அடுத்து போகும்போது சாலையோரத்தில் நின்றிருந்த பழ வியாபாரிகள் வேகமாக விற்பனைக்கென வந்து பழங்களைத் தரவர நானே  பெரம்பலூர் செல்ல பாதை கேக்க அவரும்  சோர்வில்லாமல் முசிறி, குளித்தலை, பெரம்பலூர் என்று சொல்ல பழம் வாங்காமல் அவரை ஏமாற்றியது மனம் வந்தது. சரி முசிறி, குளித்தலையா, குளித்தலை, முசிறியா என்ற குழப்பம் நீடித்துக்கொண்டே வந்தது. முதன்மைச்சாலையிலிருந்து மீண்டுமொரு  வலது பக்கத்தில் முதன்மைச்சாலை அங்கிருந்து தொடங்குகிறது. ஏற்கனவே இது காவிரிப்படுகைதான்.  முனிசும், டெல்டாவுக்குள்ளே வந்துட்டோம் என்றார். பாலு இல்லை இது  காவிரிபாசனப்பகுதி என்க,  ஆமாம், காவிரிபாசனப் பகுதியில்தான் டெல்டா இருப்பதாவும்,  காவிரி குறித்தும்  கர்நாடக அரசாங்கம், காவிரி சிக்கல் குறித்தும் பேச்சு நீண்டு கொண்டே போனது.

தொடக்கத்தில் விநாயகர் சதுர்த்தியன்று கொடைக்கானல் போனோம் அப்பொழுது பண்பலையில் முழுமையாக விநாயகர் பாடல்களைக் கேட்டுக்கொண்டே போனோம். இன்று காந்தி ஜெயந்தி,காமராசர் நினைவுநாள்  இது குறித்தும் பேசிக்கொண்டே போனார்கள். சாலை இருமருங்கிலும் அடர்ந்த பசுஞ்சோலையாக இருந்தது. தண்ணீர்ப்பரப்பின் அவசியம், தண்ணீர் இருப்பதன்  புறப்பார்வையும் தண்ணீரின் மேலாண்மை குறித்து வெளியே தெரிகிறது.

முசிறி 4 கி.மீ.  அதற்கடுத்து குளித்தலை 20 கி.மீ. அப்படியே போனால் பெரம்பலூர் 50 கி.மீ, என்று பழக்காரன் சொன்னது, பெரம்பலூர் 57  கி.மீ. மணி 11 க்கு மேலாகிவிட்டது. முசிறியில் வாத்து, ஆடு வளர்ப்பு குறித்தும்  கிளுவை வேலியில் ஆடுகள் மேய்வதால்  நன்றாகக் கெளுத்தியாக இருக்கும் என முனிஸ் சொல்ல தேநீருக்காக வண்டி நிறுத்தலாம் எனச்சொல்ல, தாராபுரம் மாதிரி சின்னதாராபுரத்தில நிறுத்தாதீங்க என சிவாவிடம் சொல்ல,உடனடியாக வாகனம் ரோட்டோரத்தில் நின்றது.  அங்கே  உளுந்த வடை, சிறியதாக, பருப்பு வடை ஒன்று வரடீ, டீ வரக்காபி என விதவிதமாக சொல்லி கடைக்காரருக்கு சற்று குழப்பம். சரி என்ன செய்ய, அவரவர் விருப்பம். ஆட்டுக் கதையோடு மோனரப்பட்டி ஆட்டைப் பிடித்த கதையினையும் சிவா சொல்லிவிட்டார். 

தேநீர் குடித்ததும் அடுத்த 5 நிமிடத்தில் தெளுவடித்த வயல், எருமை, ஆடுகளுடன் படம் எடுக்க முனிஸ் வாகனம் நிறுத்தச் சொல்ல, சிவா வாகனத்தை விட்டு இறங்காமல் முனிசும் நானும் மட்டும் இறங்கி படமெடுக்கப் போக மீண்டும் சிவாவும் பாலுவும் வந்து இணைந்து கொண்டனர்.  எருமை வயல்வெளிகளுடன் படம் எடுத்துக் கிளம்ப அடுத்த ஐந்து நிமிடத்தில் பெண்க்ள வயல்களில் நாற்றுநடுவதை படம் எடுக்க வாகனத்தை நிறுத்தச் சொல்ல அவரும் சற்று தள்ளி நிறுத்திவிட்டு இறங்கி வர மறுக்கிறார். முனிசும் நானும் இறங்கி படமெடுத்துக்கொண்டு மீண்டும் கிளம்பினோம். அடுத்து குளித்தலை, வாகனம் சற்று வேகமாகத்தான் சென்றது சிவாவும் ஏதோ கிளம்பிட்டார் போல, 

லொகேசன் போட்டுவிட்டதால்  ஊர்களின் பெயர்கள் பதிவு செய்யவில்லை. முசிறி , குளித்தலைக்குப்பிறகு முதன்மைச்சாலையில் ஒரு போலீஸ் பீட், (செக்கிங் கலக்சன்) அடுத்து அம்மாபாளையம், லாடபுரம், (ஆ.ராசாவின் மாமானார் ஊர்) அயோத்தி பையன் ஆய்வுக்கோ மனைவி ஊர்) ஈச்சம்பட்டி, குறும்பலூர், என அடர்ந்த மலைப்பகுதிகளுக்குள் வாகனம் செல்வதாக இருக்கிறது. இரு மருங்கிலும் நல்ல பசுமையான தோட்டத்து சாளைகள், மக்காச்சோளம், சிறிய வெங்காயம், நீர் நிலைகள் என பசுமை நிறைந்த பகுதியாகக் காட்சி அளிக்கிறது. நன்றாக மழை பெய்துள்ளது. சிவாவுக்கு இதைப்பார்த்ததும் நமக்கு  கேரளா மழை ஏமாத்திடுச்சு,  இதற்கு முன்பு முனிசு மழை குறித்துப் பேசும்பொது அவரது நண்பர் நிலக்கோட்டை வந்திருந்ததாகவும், தமக்கு மழைபொய்த்துவிட்டதால் தென்னம்பிள்ளைகள் காய்வதாகவும் வருத்தப்பட்டதைக் கூறினார். இவருக்கு  செடியெல்லாம் காயுதேன்னுட்டு கவலை. அவருக்கு மரமெல்லாம் காயுதேன்னுட்டு கவலை. நமக்கு ஏதுக்கு இவுக எதுக்கு வருத்தப்பட்றாங்க, இவுக வருத்தப்படறதால மழை வந்திடுமா? எனக்கேள்வியோடு வாகனம் சென்றது.  இரு புறத்திலும் கம்பி வேலிகள் அடர்த்தியாக அமைக்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டு இருந்தது. இரண்டு பக்கத்திலும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால்தான் இந்த பாதுகாப்பு ஏற்படும்.

ஆறுமுகம் அய்யா அவர்களைநானும் முனிசும்  2008 – 09 ல் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டு விட்டு அன்று இரவே  உடுமலை திரும்பியது நினைவில் இல்லை. முனிஸ்தான் பிற்பாடு நினைவு படுத்துகிறார். இங்கு பாருங்க. ஆடு, வாத்துகறிகளெல்லாம் இங்க டேஸ்டா என்று சொல்லிக் கொண்டே  ஏதாவதொன்றை பேசுவதால்தான் நேரம் கடக்கும் என்ற எண்ணத்தோடு வாகனத்தோடு நாமளும் சென்று கொண்டிருக்கிறோம். குளித்தலை, ஆம் இங்குதான் கலைஞர் முதன் முதலாக 1952 ல் நின்று வெற்றி பெறுகிறார். விவசாயிகள் சம்பந்தமான  கோரிக்கையை முதன் முதலாகப் பேசுகிறார். குளித்தலை, வரலாற்றுச்சிறப்பு மிக்க ஊர் குளிர் தண்டலையே குளித்தலையானது என்கின்றனர்.

குளித்தலைக்கும் தி.முக.விற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கலைஞருக்கும் உண்டு. இந்த ஆற்றில் வரும்போதுதான்  வெள்ளம் வந்து தப்பித்ததாக நெஞ்சுக்கு நீதியில் பதிவு உண்டு. அதனால் என்னவோ, இங்கு மிகப்பெரிய பாலம் குளித்தலை பாலம் இதனை தந்தை பெரியார் பாலம ; என்று சொல்வதாக பாலு கூறுகிறார்.

பாலத்தில் வாகனம் நிற்க இடம் இல்லை இருந்தாலும் வாகனத்தை நிறுத்தி படம் எடுத்துக்கொண்டோம் . (நாங்கள்ளா யாரு)  ஆங்காங்கே அகண்ட காவிரி, காவிரி பறக்காத காவிரி, ஆடு தாண்டாத காவிரி இன்று நாங்கள் தாண்டிவிட்டோம். ஆம் அடுத்து சேலம், நாமக்கல் பைபாஸ் இங்குதான் வந்து சேர்கிறது. காங்கேயம் நத்தக்காடையூரிலிருந்து வரும் வழி இங்கு வருவதாக பாலு கூறுகிறார். (சரி பார்ப்போம்)

குளித்தலை தாண்டியதும் பேருந்து நிலையத்திற்கருகில் இடது பக்கம் திரும்பி வாகனம் வடகிழக்கில் வாகனம் சென்று கொண்டிருக்கிறது. பெரம்பலூர் 27 கி.மீ. அப்பா, நீண்டதொரு கனவை இன்று நிறைவேற்றப் போகிறோம். ஆம் அவருக்கு எதுவும் வாங்கவில்லை. சரி புத்தகங்கள் இருக்கிறேதே. குழந்தைகள் இருக்கும் வீடு பெரியவர்கள் இருக்கும் வீடு எதுவும் வாங்காமல் கைவீசிக்கொண்டு போவது சரியல்ல. சரி என்ன செய்ய, வாகனம் சென்று கொண்டிருக்கிறது. மீண்டும் அரசியல், சமூகம் சார்ந்த பேச்சுகள், அய்யா அழைத்துவிட்டார்.

குமாரராஜா அய்யா தொலைபேசி சரியாகக் கேட்கவில்லை. மீண்டும் அழைக்க அவர் பிசி. சுரி வாகனம் குளித்தலையிலிருந்து பெரம்பலூர் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மணி 12 க்கும் மேல், எப்படியோ சாப்பாட்டுக்குப் போயிருவோம் முனிஸ் மீண்டும் குறும்பல}ர், பாளையம், செஞ்சேரி, கடந்து செல்ல அப்பாடா வந்துவிட்டது .

தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் ஓரே ஊரில் மூன்ற மருத்துவக் கல்லூரிகள், சின்னக்குழந்தையாக உள்ளவந்தால் அவர்கள்  திருமணம் ஆகி வெளியே வரும் வரை கல்லூரிக்குள்ளிருந்து வெளியே வர வேண்டிய அவசியம் இருக்காதெனப் பேசிக்கொண்டே போக  பெரம்பலூர் பெயர்ப்பலகை மகிழ்ச்சி மனதிற்குள். மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவனை தெரியுதா, ஆறுமுகம் அய்யா கேள்வி. சரி, இடது பக்கம் வந்து பஸ்ஸ்டேண்டிற்குள் காந்தி சிலை, பெரியார் சிலை, காமராஜர் சிலை, இவையெல்லாம் தாண்டி வாங்க, ஆம் இவையெல்லாம் தாண்டிப்போனால்தான் உண்மையான மனிதர்களையும் சமூகத்தையும் காண முடியும் என்று நினைவில் வைத்துக்கொள்வோம்.

அய்யா, க்ரியாஸ் கடை , அமுதா சூப்பர்மார்க்கெட் என்று சொல்ல ஸ்டேட் பேங்க் தெரியுதுங்களா, இல்லீங்கயா, அப்படியே வாங்க என்கிறார் அய்யா,

ஆம் அப்படியேதான் செல்கிறோம். செல்வோம்.

வுந்துவிட்டது ஸ்டேட் பேங்க, மளிகைக்கடை, எஸ்பி.டி மருத்துவமனை பெயர்ப்பதாகை ஆமாங்கய்யா குணகோமதி சாலை, இருக்குதுங்க அய்யா, அதுல வாங்க,   சரிங்க அய்யா,

வுந்துவிட்டோம்,   அய்யாவின் கண்ணெதிரில்  நீண்ட நாட்கள், சுமார்  15 ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு நெகிழ்வான  சந்திப்பு, கண்ணில் நீர் கசிந்துருகிறது. வாங்கய்யா வாங்க, எல்லாரும் வாங்க என அனைவரையும் உபசரித்து பேசிக்கொண்டிருக்கிறார். இயல்பான விசாரித்தல் நிலவரங்கள். தண்ணிர் கொடுத்தார். உள்ளற போங்க,  ரெஸ்ட் ருப் இங்கிருக்கு , ஒரு தந்தையைப் போல், கவனிப்பு.

கருப்புச்சட்டை பாத்தீங்களா, நான் இன்னும் இயக்கத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். திராவிடர் கழகத்தின் நகரத் தலைவர்  அய்யாவின் நேரடி மாணவர், அய்யாவின் அருகில் அமர்ந்து படம் எடுத்துக்கொண்டவர். இதைவிட வேறென்ன சிறப்பு இவருக்கு வேண்டும்.

சுமார் 1.30 மணி வரை பேச்சு, 1.45 லிருந்து 2.30 மணி வரை உணவு. அம்மா வரவில்லை  அம்மா வருவதற்கு இரண்டு மணிக்கு மேலாகும் அதற்குள் நாம் சாப்பிடலாம் என்று மேல் மாடி அறைக்கு அழைத்துச்சென்றார். அங்கு செல்லும் போது உடன் வந்த திருக்குறள் அன்பர் படம் எடுக்க விரும்பினார். அவருடன் திருவள்ளுவர் கொடுப்பது போன்று படம் எடுத்துவிட்டு, அமர்ந்த போது பசி வயிற்றைக்கிள்ளியது. சரி வாங்க சாப்பிடலாம் என்று சொன்ன போது, அப்பா, சாப்பாடு கிடைச்சிருச்சு என்ற மகிழ்வில் மேசையில் அமர்ந்தால்  பிரியாணி  என்ன செய்ய, வெறுமனே சோறு மட்டும் வாங்கிக்கொண்டு வெள்ளைச்சோறு சிக்கன் குழம்பு, முட்டை மசால், அனைத்தும் அற்புதம். இதில் முக்கியமாக  சித்தார்த்தின்  ரசம், பால்பாயாசம் அவ்வளவு அற்புதமாக இருந்தது. அய்யா ஆறுமுகம் அவர்களும் அமரச்சொல்லி ஐவரும் சாப்பிட்டோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்ட மகிழ்வு என் அப்பாவுடன் சாப்பிட்டது போன்ற நெகிழ்ச்சி. மெதுவாக, சாப்பிட இறுதியில் எல்.அய்.சி. கார்த்தி வந்தார். இவர்தான் தலைமைச்செயலக சோமுவின் அண்ணார்.  நமக்கு சாதிக் சட்டமன்ற உரைகள் எடுத்துக்கொடுத்தவர். வி.கே.எஸ்.சின் நண்பர். (சரிதான்)  சாதிக் குறித்தும், பொதுவான சமூக குறித்தும் உரையாடல்கள் உணவோடு, அவரும் அமர்ந்து சாப்பிட்டார். சோறு குழம்பு ரசம் சுவையாக இருப்பதாக அவரும் கூறினார். 

சாப்பிட்டு விட்டு உட்கார்ந்ததும் அம்மா 2.45 க்கு வந்தார். அய்யா சரி வாங்க நம்மூரைச் சுத்திப்பார்ப்போம். ஒரு ட்ரிப் போகலாம் என்றார். மனதில்  உற்சாகம்.அய்யா நமது செயல்களை உற்று கவனிப்பதாக அறிந்தேன். அவர் அழைத்த யாரும் உடன் வராததால் நமது வண்டியில் போயிடலாம் என்று அவரை அழைத்துக்கொண்டு உடனடியாக களப்பயணம் மரக்கல், சாத்த}னுருக்கு 3.45 க்கு அங்கு அரை மணி நேரம் தனிப்பதிவு . கல்மரம்  நீண்ட நாட்களாக சென்னை அருங்காட்சியகத்தில் பார்த்த நினைவு. படித்த நினைவு. பெரம்பலூர் வரலாறு புத்தகம் வாங்கியதுமுதலே  அந்தப் பகுதியில் ஒரு மரபு நடை போகவேண்டும் என்ற எண்ணம் மனதிலிருந்தது. அவ்வளவு நிறைய பகுதிகள், வரலாறு தொல்லியல் சார்ந்த சின்னங்கள் ஏராளமாக இருக்கும் பகுதிகள் இருப்பதை அறிவேன். எனவே, கண்டிப்பாக  கல்மரம் மனதிற்குள் இருந்தது. உள்மனத்தின் அறிவை அறிந்து கொண்டவராக ஆறுமுகம் அய்யா செயல்பட்டார். அவ்வளவு மகிழ்வு.  அந்தக் கல்மரத்திற்கு வெளியூர்க்காரர்கள் அவ்வளவு சீக்கிரம் செல்ல இயலாது.  அவ்வளவு நெருக்கடியான பகுதி. இப்போதே இப்படியெனில்  பன்நெடுங்காலத்திற்கு முன்பு எப்படி இருந்திருக்கும். அந்தப் பகுதி பெரிய கடல் பரப்பாக இருந்தமைக்கு இன்னமும் எச்சங்கள் இருக்கின்றது. படம்பிடித்துள்ளோம். இரண்டு கல்மரத்துண்டுகளை நானே எடுத்து வந்தேன். 

ஆறுமுகம் அய்யா கல்மரம் குறித்து பேசச்சொல்லிய போது ஏதோ ஒரு தேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் போன்று  அவ்வளவு சிறப்பாகக் கருத்துக்களை அற்புதமாகவும், அழகாகவும் பதிவு செய்தார். டிக்கட்டையும் அவரே எடுத்தார். கல் மரம், குறித்தும் அந்த சாத்தனூர் பகுதி குறித்தும் விரிவான ஆய்வு தேவை.

 4.30 க்கு பெரியார் பூங்கா கடும் போக்குவரத்து நெரிசல்  5.30 க்கு வேகமாக  பெரம்பலூர் வர மணி 5.55 ஒரு சுவையான தேநீர், இனிப்பு பலகாரங்கள்,  குடித்துவிட்டு கிழே வர அம்மாவிடம் சொல்லி விட்டு வெளியே வர அம்மாவும் வெளியே வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள். ஒரு தாய் தந்தையைப் போல,  ஏதோ ஒன்றை பெற்றுக்கொண்டு ஏதோ ஒன்றை மறந்துவிட்டு வைத்துவிட்ட வந்த உணர்வு என்ன அது,   அய்யாவின் அன்பு, அம்மாவின் பாசம், தம்பியின் சுவையான  பாயசம், சுவையான ரசம், அன்புறவுகளின் அன்பான அனுசரணைகள், கண்ணில் நீர் ததும்புகின்றது. இது போன்ற நல்ல உறவுகளை வாழ்வில் பெற்றிருக்கிறோம் என்ற கர்வத்துடன்.

கையெடுத்துக் கும்பிட்டு வரமனமில்லை. வந்துவிட்டோம்.  வந்த வழியில் ஆம், அதே குளித்தலை முசிறி, கரூர் புறவழிச்சாலையில் வந்து ஒரு தேநீர்க்கடையில் கேட்க அவர் நீங்க எங்க போகணும் என்று கேட்க தாராபுரம் எனச்சொல்ல சிறிதா பெரிசா எனக்கேட்க, பெரிசு எனச்சொன்னவுடன்  அரவக்குறிச்சி, மூலனூர், தாராபுரம் , போய்ட்டே இருங்கே,  அவ்வளவுதான், அவர் சொன்னது போல் அதே வழி பைபாசில் அரவக்குறிச்சி, எரோ மார்க் அரவக்குறிச்சி ஏரோ மார்க்கு சுமார் 35 கி.மீ, இதோ வலது பக்கம் திரும்பியாச்சு, பெயர்ப்பலகை, ஆம் ஊர்வந்துவிட்டது. மக்கள் உணவகத்தில்  ஒரு சப்பாத்தி, ஊத்தப்பம், இட்லி தோசை, மீண்டும் முனிஸ் பணம் கொடுக்க மீண்டும் சென்று வழி கேட்டு வந்து  வலது பக்கம் திரும்ப நேராக வர கன்னிவாடி 9 சின்னதாராபுரம் 11 நேரா போங்க, வந்துவிட்டது. மூலனூர், ஆமாம் போனவழிதான் இந்தவழியாப் போயிருந்தால் எவ்வளவு மகிழ்வு.  நன்றி அந்த தேநீர்க்கடைக்காரரக்கு, 

வரும்போது 2024 எதிர்கால பி.ஜே.பி. அரசியலையும், மோடி அரசியலையும் காங்கிரசின் அரசியலையும் பாலு முனிஸ் இருவரும்  பேசிக்கொண்டே வந்தது . ஒரு பெரும் பேச்சாளர்கள் அரசியல்வாதிகள் பேச்சைக் கேட்பது போன்றிருந்தது.  ஆம் . இது சமூக அரசியல் இல்லாத ஒரு அரசியல் பேச்சு. 

இடையில் முசிறியில் தேநீர் குடிக்கும் போது தாராபுரம் மணியன் தொலைபேசி தோழர் வேளாளர் புராணம் கிடைச்சிருக்கு 686 பக்கம் வந்து பெற்றுக்கொள்ளுங்கள். அய்யா, இது போன்று  கருர் வந்துவிட்டோம் இரவு தாராபுரம் வந்து பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்லும் போது இரவு அழைக்கச் சொல்லியிருந்தார். இப்போது அழைத்தால் மணி 7.40 அரவக்குறிச்சி, மூலனூர், தாராபுரம் வர 10.30 ஆகும் என்றார் சொன்னது போல் அவர் இல்லம் முன்பு திருமண மண்டபத்தைக் கடக்கும் போது மணி 10.25 சரியான கணிப்புதான். தாராபுரத்தில் பாலுவை இறக்கிவிட ஊருக்குள் செல்ல, முனிஸ் இதென்ன காரா கட்டை வண்டியா, ஆறுக்குள்ளே ஊருக்குள்ள போறதுக்கு என எதுகை மோனையோடு இரவு நேரத்தில் சரி என்ன செய்ய, ஊருக்குள் வாகனம் சென்று கொண்டிருக்கிறது. ஆம் வசந்தா திரையரங்கு தாண்டி இந்த வழி எங்கே போகுது தோழர் சிவா வழக்கம் போல், போங்க பஸ்ஸ்டேண்டிற்கு உண்மையிலேயா அவரது சந்தேகம். நிறுத்திக் கேட்க ஆமா இப்படி லெப்ட்ல போயி ரைட்ல போங்க இதென்ன சந்துக்குள்ள போகுது சிவா  இவரு டுவீலர் நெனப்பு, இது முனிசின் கணிப்பு. சரி, இதோ, இடது பக்கம் திரும்ப பஸ் ஸ்டேண்ட் வந்துவிட்டது. 

பாலுவுக்கு திருப்பூர் கொண்டு சென்றுவிட எண்ணம். ஏன்ன செய்ய மணி 10.40 திருப்பூர் சென்று வந்தால் மணி 12 க்கும் ஆகிவிடும் மேலும் ஒருவருக்காக எவ்வளவு பெட்ரோல்.  வரும்போது முசிறியில்  2000 த்துக்கு பெட்ரோல் சிவா, பாலு 500 கொடுத்தார்.

உடுமலை காந்திராம்ஸ் 11.15 க்கு வர  வீட்டுக்குள் சென்று  தூங்குப் போகும்போது மணி 11.45. காலை 6.40க்கு தொடங்கி இரவு 11.40க்கு முடிந்தது இனிமையான அன்பான பாசமான  உறவுப்பயணம்.

இந்தப்பயணம் சிவாவுக்கு அர்ப்பணம்.

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰