வணிக வரித்துறை அதிகாரி பொள்ளாச்சி எம் .சாமிகுணம் -கெடிமேடு
வணிக வரித்துறை அதிகாரி பொள்ளாச்சி எம் .சாமிகுணம் -கெடிமேடு
வணிக வரித்துறையின் அரசு அதிகாரி மதிப்புமிகு எம்.சாமிகுணம் அவர்கள் கோவையில் பணியாற்றி வருகிறார் .நமது சமுதாயத்தில் எந்த ஒரு கல்வி ,வேலைவாய்ப்பு விழா என்றால் முதன்மையாக கலந்துகொண்டு வளரும் இளைய சமுதாய சொந்தங்களுக்கு வழிகாட்டியாக கள செயல்பாட்டாளர் .
பொது தளத்தில் கருத்தாளர்களாகவும், கல்வியாளராகவும் ,அரசு ஊழியர் சங்கத்தில் மாநில அளவில் தலைமை பொறுப்பில் இருந்து செயலாற்றுபவர்
பொதுத்தளத்தில் அலுவலக பணியில் மிகவும் நேர்மையாளராக இருந்து செயல்படுவார் இவரை பற்றி தெரிந்தவர்கள் கூற கேள்விப்பட்டிருக்கிறேன் .நான் அரசு அலுவலகலுங்களுக்கு பணி சம்பந்தமாக செல்லும் இடங்களில் எல்லாம் இவரின் செயல்பாடுகளை மிக பெருமையுடன் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன் .தான் துறை சார்ந்த எந்த ஒரு பணிக்கு இவரிடம் சென்றால் விரைந்து முடித்து தருபவர் .
நமது இளைய சொந்தங்களுக்கு கல்வி ,வேலைவாய்ப்பு பற்றி விழிப்புணர்வு கூட்டங்கள் நடந்தால் அங்கு சென்று தன்னால் ஆனா அனைத்து உதவிகளையும் செய்து தருபவர் ...


Comments
Post a Comment