உடுமலையில் இசைக்கலைஞர்களின் பயிற்சி பட்டறை ....
இன்றைய வேகமான வாழ்க்கை சூழலில் அழிந்து வரும் இசைக்கருவிகள் பற்றி வளரும் தலைமுறைக்கான குழந்தை செல்வங்களுக்கு பயிற்சி ...
நான் இசைக்கருவிகளின் ஆராய்ச்சியாளர், இசைக்கலைஞர், சமூக சேவகர், ஒலி பொறியாளர், ஆசிரியர், கலைஞர் மற்றும் ஆத்மார்த்தமான இசைப் பயணி.
நமது பழங்கால இசை மற்றும் இசைக்கருவிகளைத் தேடி, நமது தற்போதைய தலைமுறையினருக்காக மறுவடிவமைப்பு செய்ய பழங்குடியினர் வசிக்கும் இடங்கள் அனைத்திற்கும் பயணித்து வருகிறேன். மறைக்கப்பட்ட கலைஞரைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நமது பாரம்பரியத்தை உலகம் முழுவதும் பரப்பவும் உள்ளடக்கம் மற்றும் வீடியோக்களை உருவாக்கத் தொடங்கினேன். நான் ஒரு இசைக்கருவி வடிவமைப்பாளராகவும் இருக்கிறேன்.
இந்த மேடையில் எனது அறிவைப் பகிர்ந்து கொள்கிறேன்
ஈரோடு சவுண்ட் மணி அவர்களின் பல்வேறு பழங்கால இசைக்கருவிகள் பற்றி இன்றைய குழந்தைச்செல்வங்களுக்கு வாசித்து காட்டியும் அதன் வரலாற்று தகவல்களையும் அளித்து அதன் சிறப்புகளையும் அழகாக வாசித்து காட்டியது அருமை ..இதில் உடுமலை கொடிங்கியம் உறுமி இசைக்கலைஞர்கள் கோபாலகிருஷ்ணன் ப்ரதர்ஸ் .உறுமி இசைபற்றியும் அதன் வரலாறு மற்றும் அதன் சிறப்பு பற்றியும் இன்றைய குழந்தை செல்வங்களுக்கு தகவல் அளித்தது மிக சிறப்பு ..
நன்றிகளும் ...பாராட்டுகளும் ...
Comments
Post a Comment