வாங்க.. நடக்கலாம்..!
தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில், அதாவது மைதானம், பூங்கா, நடைதளம் உள்ள பகுதிகளில் அல்லது வீட்டு மொட்டைமாடிகளில் நடை பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருப்போம்.
சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று நடை பயிற்சி செய்யும்போது முதலில் இடது பக்கமாக சென்று வலது பக்கமாக சுற்றி வரும்படியோ அல்லது வலது பக்கமாக சென்று இடது பக்கமாக வலம் வரும்படியோ நடந்துக்கொண்டிருப்போம்.
அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு அல்லது அந்தந்த இடத்தின் சூழலுக்கேற்றவாறு நடந்துக்கொண்டிருப்போம்.
நீங்கள் நீண்ட தூரம் அல்லது நீண்ட நேரம் நடப்பவர்களாக இருந்தால்..நடக்கும்போது எந்த பக்கமாக நடக்க ஆரம்பிக்கிறீர்களோ..
அதே பக்கமாக திரும்பி நடந்து வரும்படி வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு.. ஒரு மணி நேரம் நடப்பவராக இருந்தால் அரை மணி நேரம் இடது பக்கமாக சென்று வலது பக்கமாக சுற்றி வந்து விட்டு..
அடுத்த அரைமணி நேரம் வலது பக்கமாக சென்று இடது பக்கமாக வலம் வரும்படி உங்கள் நடைப்பயிற்சியை அமைத்துக்கொள்ளலாம்.
உங்கள் மூளையின் செயல்திறன் சரிசமாக செயல்படுகிறது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
நடக்க ஆரம்பிக்கும்போது மிதமான வேகத்தில் ஆரம்பித்து.. சில நிமிடங்களுக்கு பிறகு வேகத்தை அதிகரித்துக்கொண்டு.. நடைப்பயிற்சியை முடிப்பதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போது நிதானமான வேகத்தில் நடப்பதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
இதன்மூலம் உங்கள் மூச்சுத்திறனும் சிறந்து மனஅழுத்தமும் குறைந்து சரியான அளவில் இருக்கும்.
வாங்க.. நடக்கலாம்..!
Comments
Post a Comment