கேள்வி : நிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்..?

 கேள்வி : நிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்..?

என் பதில் :..📚📚✍️✍️✍️👍👍🏡🏡🏡🏡🏡
நிலம் வாங்குவதற்குமுன் அதைப்பற்றி முழு விவரங் கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங் கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக
மக்களுக்கு நிலம் வாங்கும்போதும், விற்கும்போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ்நாடு அரசின் எந்தெந்த துறைகளின்கீழ் வருகிற து என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை.
நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்ப து மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப் படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.
புல எண் (Survey Number) :
ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk ), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக் கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.
நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பரா மரிக்கப்படுகின்றன.
1. பதிவுத்துறை
2. வருவாய்த்துறை
1. பதிவுத்துறை :
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office) அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் நீங்கள் வாங்கவிருக்கும் நிலம், விற்பவரின் அனுபவத்தில் இருக்கும் போது அந்த நிலதின் உரிமை யாளர் யார்? எத்தனை பேர் மற்றும் அந்த நிலம் அட மானத்தில் உள்ளதா? அல்லது அந்த நிலத்தின் மீது வழக்கு எதாவது நடந்து வுருகிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கு பத்திர பதிவு அலுவலகத்தில் வில்ல ங்க சான்று (EC-Encumbrance Certificate) கேட்டு மனு செய்து அதில் வில்லங்கங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்
2. வருவாய்த்துறை :
இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க் கண்ட பதிவேட்டில் இருக்கும்.
பட்டா (Patta)
சிட்டா (Chitta)
அடங்கல் (Adangal)
அ’ பதிவேடு (‘A’ Register)
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)
பட்டா (Patta) :
நிலத்தின் உரிமை, நமக்குத்தான் இருக்கிறது என்பதற் கான ஆதாரம் பட்டாவாகும். பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை, யாருக்கு என்பதை முடிவு செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-
1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
2. பட்டா எண்
3. உரிமையாளர் பெயர்
4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Sub division)
5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை
சிட்டா (Chitta) :
ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட் டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன் பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.
அடங்கல் (Adangal) :
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணு க்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவர ங்கள் இதில் இருக்கும்.
அ’ பதிவேடு (‘A’ Register) :
இப்பதிவேட்டில் . . .
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை,போன்ற விவரங்க ள் இருக்கும்.
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :
நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிற து .
கிரையப் பத்திரம் (Sale Deed) :
சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்த க் கிரயப் பத்திரத்தைச் சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration office) பதிவு செய்ய வேண்டும். கிரை யப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள் இருக்கும்.
1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3. எவ்வளவு அளவு
4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
5. சொத்து விவரம்
சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட் டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும்.
கிரையப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவா ளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவர ங்கள் இருக்கும்.
1. பதிவு எண் மற்றும் வருடம்
2.சொத்து எழுதிக்கொடுப்பவரின்புகைப்படம், கைரே கை, கையெழுத்து, முகவரி
3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
4.புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம், சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
7. மொத்தம் எத்தனை பக்கங்கள்
8. மொத்தம் எத்தனை தாள்கள்
9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.
ஆவணங்கள்:
01.07.06 முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்ப வர் மற்றும் வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டு ம்முறை அரசால்நடைமுறைப்படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து விற்பவ ரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங் கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப் படம் இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால்போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.
இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொ ரு தாளின் பின்புறமும் இந்தக்கிரயப்பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவா ளர் கையொப்பம் இருக்கும்.
நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந் து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அத னால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யும்போது பதிவி ன் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக் கப்பட்டிருக்கும்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமா க கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரா ர்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.
பதிவு செய்யும் முறை:
நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட் ட புல எண்களில் அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறு த்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ண யம் செய்யும். அதற்கு பெயர் Guide line value .
நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதி வாளர்அலுவலகத்தில் தாக்கல்செய்யவேண்டும்.முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியா த நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.
இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதி ப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்ப திவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலு வலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.
பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்ய ப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமா கவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.
முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப்செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒருபுறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார் பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய் வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.
சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரி ன் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைக ளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப் பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவ ரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின் புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முக வரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்பட ங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.
பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண் டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத் தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீ தைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவ து சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.
பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத் திரைதாள் வாங்க வேண்டும். அரசாங்கத்தால் நிர்ண யிக்கப்பட்ட Guide line value அதிகமாக இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப் பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத் தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செ ய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடு வார்.மாவட்டஆட்சியர் அலுவலகத்தில்(Collectoroffice ) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வை யிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.
Guide line value சரியாக இருக்கிறது என்று அவர் முடி வு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகை யில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர் ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதி ப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பண மாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம் பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத் திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத் தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்.
சில முக்கிய குறிப்புகள்:-
1.முதலில் நீங்கள் வாங்கவேண்டிய சொத்தில் ஏதாவ து வில்லங்கம் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள் ளவேண்டும். இதற்கு, நீங்கள் வாங்கஇருக்கும் இடத்தி ற்கான பத்திரத்தின் ஒரு நகலை எடுத்து சம்மந்தப்பட் ட சர் பதிவாளர் அலுவலகத்தில் அதற்கான கட்டணத் தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
2. மிக முக்கியமான விஷயம்: முன்பணம் (அட்வான் ஸ்) மிகக்குறைந்த அதாவது 5000 முதல் 10000 வரை மட்டுமே முன்பணமாக கொடுக்க வேண்டும். ஒரு வே லை அதிகமாக முன்பணம் செலுத்த வேண்டி வந்தால் செக் அல்லது டிடி கொடுப்பத்டு சால சிறந்தது. உடன் விற்பனை உடன்படிக்கையையும் பெற்றுகொள்வது முக்கியம்.
3 .சொத்தை பதிவு செய்யும் பொழுது மட்டுமே முழு தொகையையும் கொடுக்க வேண்டும். அதுவும் செக் அல்லது டிடி கொடுப்பது உசிதம்.
4 .பதிவு செய்யும் முதல் நாள் கூட வில்லங்கம் எடுத்து பார்ப்பது நல்லது.
5 .சொத்தை வாங்கி பிறகு பட்டா மாற்றிக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. பட்டா உங்கள் பெயரில் இரு ந்தால் வேறு யாரும் சொந்தம் கொண்டாடவோ வேறு பிரச்சனைகளோ வருவதற்கு வாப்பு கிடையாது.
நன்றி ...
சிவக்குமார் VK



நிதி ஆலோசகர் -தேசியமாக்கப்பட்ட வங்கிகள் ,தனியார் நிதி நிறுவனங்கள் -வீட்டுக்கடன் .
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)

Contact.:9944066681

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰