கண்ணாடிப்புத்தூர் பாலகுமரேசன் அவர்களுக்கு உடுமலை வரலாறு பரிசளிப்பு🥰📚🖋️🙏📡🎙️🌈🌾🌴🌳
கண்ணாடிப்புத்தூர் பாலகுமரேசன் அவர்களுக்கு உடுமலை வரலாறு பரிசளிப்பு🥰📚🖋️🙏📡🎙️🌈🌾🌴🌳
கரைவழி நாட்டுக்கண்ணாடிப்புத்தூர், மணியகாரர் வரதராஜ் அய்யர் என்பது மறைக்கமுடியாத மறக்க முடியாத பெயராக உள்ளது.
இவருக்கு ஆயிரக்கணக்கில் நிலங்கள் இருந்தது. கண்ணாடிப்புத்தூர் ஒரு காலத்தில் சதுர்வேதி மங்கலமாக, பிரம்மதேயமாக, நெல்தானங்கள் செய்தமைக்காகவும், நந்தாவிளக்கிற்காகவும் ஏராளமான நிலங்கள் கண்ணாடிப்புத்தூரில் இருக்கும் கலியுக வரதராஜ பெருமாள் கோயில், கல்யாண வரதராஜ பெருமாள் கோயில், திருநந்தீஸ்வரர் கோயில், கைலாச நாதர் கோயில் எனப் பழங்கால கோயில்களுக்கு நிலங்கள் கொடுத்த செய்தியினை அந்த நிலங்கள் அனைத்தும் சிவப்பிராமணர்கள் வசம் இருந்ததையும் குறிப்பிட்டார்.
மேலும். இவர் வரதராஜ் அவர்கள் வசித்த வீட்டில் தற்போது இவர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த வீட்டில், தானியங்கள் வைப்பதற்கான நிலவறையும், அந்தக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாதனப்பொருட்கள், இன்னும் அப்படியே இருக்கின்றன.
மேலும். மேட் இன் பிரிட்டன் எனும் நீரிறைக்கும் மோட்டாரும் இன்னமும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கின்றனர். இவரது மகள் திருமதி நர்மதாதேவி முதுகலை வரலாறு படித்தவர்
என்பதாலும், வரலாற்று செய்திகளை மிகவும் உன்னிப்பாகக் கேட்டு உடுமலை வரலாற்று நூலினையும், தென்கொங்கின் தொன்மங்கள் நூலினையும் பெற்றுக்கொண்டார்.
கரை வழிநாட்டுக் கண்ணாடிப்புத்தூர் ஆயிரங் காலத்திற்கு முற்பட்டதையும், இங்கிருக்கும் மக்கள் மிகுந்த சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்த வருவதையும் குறிப்பிட்டுப் பேசினார்.
நீலம்பூரில் இருக்கும் கற்திட்டை குறித்தும், நில உச்சவரம்பில் இந்தப்பகுதியில் அதிகமான நில எடுப்பு நடந்தது குறித்தும் விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார். மேலும் கண்ணாடிப்புத்தூர் மடத்துக்குளத்திற்கும், மற்றகிராமங்களுக்கும் பழங்காலத்தில் தலைமைகிராமமாக இருந்ததையும் மஜ்ரா புதூர் என்று இருந்ததையும் குறிப்பிட்டுப்பேசினார்.
உடுமலை வரலாற்றுப் பணிகளைக் கேட்டறிந்து மிகவும் வாழ்த்திப்பாராட்டி பேசினார்.
இந்த இனிய நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த பணி நிறைவு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. ஜீவானந்தம் அவர்களுக்கும் கண்ணாடிப்புத்தூர் சிகரம் யோகானந்தம் அவர்களுக்கும்
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின்சார்பில் வாழ்ததுகளையும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வோம்.🥰🙏
உடுமலை வரலாறு 15.08.2023📚🖋️🎙️📡🌈🌾🌾🌾🌾🌴🌴🌴🌴🌱🌱💦🌧️

Comments
Post a Comment