ஸ்வஸ்தீகா…. பாங்காக் (வணக்கம் பாங்காக்) (10.5.2023 to 13.05.2023 ) தாய்லாந்தின் வரலாறு
தம்பி ஆனந்த் வெளிநாட்டு பயணம் ..✈️..உடுமலைப்பேட்டை -டு பாங்காக் 🛬✈️
கருத்தரங்கம் ..சுற்றுலா இரண்டும் கலந்த பயணம் அருமையான பயணக்கட்டுரை .📗🖋️🥰💦⛈️✈️🛫🛬
என்னதான் வீட்டுக்கடன் நிதி நிறுவனத்துக்காக வியாபாரம் வியபாரம் மாதாந்திர ..வருட டார்கெட் ..டார்கெட் ..என்று ஓடினாலும் ...சற்று மனதுக்கு ஓய்வு கண்டிப்பாக தேவை ...இதை கருத்தில் கொண்டு நிறுவனம் வழங்கும் இது போன்ற பயணங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு மிக இன்றியமையாது ..
ஸ்வஸ்தீகா…. பாங்காக் (வணக்கம் பாங்காக்)
(10.5.2023 to 13.05.2023 ) தாய்லாந்தின் வரலாறு
தாய்லாந்தின் வரலாறு என்பது, தலைநிலத் தென்கிழக்காசியாவில் உள்ளதும் முன்னர் "சியாம்" என அழைக்கப்பட்டதுமான இன்றைய தாய்லாந்து நாட்டின் வரலாறு ஆகும். இந்நாட்டுக்குத் "தாய்லாந்து" எனப் பெயர் வரக் காரணமான "தாய்" இனத்தவர் முன்னர் தென்மேற்குச் சீனாவைத் தாயகமாகக் கொண்டிருந்தனர்.
தாய்லாந்துக்கும் தமிழ்நாட்டும் நீண்ட கால அரசிய, வணிக, பண்பாடு தொடர்புகள் உண்டு. பழங்காலத்தில் தாய்லாந்து சில காலங்களுக்கு தமிழ்வழி அரசர்களின் ஆட்சியில் இருந்தாகவும் கூறப்படுகிறது. இங்கு கிடைக்கும் கல்வெட்டுக்கள் சில தமிழில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சாவோ பிரயா ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள தாய்லாந்தின் தலைநகரம் பாங்காக். தாய்லாந்தின் மொழியில், குருங் தேப் மஹா ந கொன் என வழங்கப்படுகிறது. குருங் தேப் என்ற தாய்ச் சொல்லின் பொருள், "தேவதைகளின் நகரம்" என்பதாகும்.
தமிழர்கள் எங்கு சென்றாலும், பண்பாட்டையும் கொண்டு சென்றார்கள் என்பதற்கான அடையாளமாக தாய்லாந்தின் திருவெம்பாவை - திருப்பாவை விழா காட்சியளிக்கிறது. சிதம்பரம் கோவிலின் சோழ மன்னர் முடிசூடலை பின்பற்றும் தாய்லாந்து மன்னர்கள், அதே சிதம்பரம் கோவில் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் மார்கழி திருவெம்பாவை நிகழ்ச்சியையும் கொண்டாடுவது வியப்பளிக்கும் ஒற்றுமை ஆகும்.
தாய் மக்களின் பரபரப்பான சாலை வாழ்க்கையும், பண்பாட்டுச் சுவடுகளும், பன்னாட்டு வனிக வளர்ச்சியும், பாலியல் தொழிலாளிகளின் வாழ்கையும் இந்நகரை பகலில் பரபரப்பாகவும், இரவில் ஒளிரக்கூடியதாகவும் வைத்திருக்கின்றன. எனினும், இவற்றிலிருந்து வேறுபட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் அரண்மனை, வாட் அருண், வாட் ஃபோ போன்ற புத்தமதக் கோவில்கள் கடற்கரை, சாவோ ப்ரயா நதி வனப்பகுதிகள் போன்றவை அழகையும் ஆண்மிக அமைதியையும் நமக்கு அளிக்கின்றன.
ஆசியாவிலேயே மிகப் பெரியளவிலான விற்பனை வளாகங்களும், நகர கட்டமைப்புகளும், வானளாவிய கட்டிடங்களும் வியக்கவைக்கின்றன. உலகின் பல முன்னனி நிறுவனங்களின் கிளைகள் இங்கு இருப்பதால் பாங்காக் ஆசியாவின் மிக முக்கிய வர்த்தக மையமாக உள்ளது.
மேலும், ப்ரத்தினம் மார்க்கெட், சக்குசக் மார்கெட் மற்றும் சைனா டவுன், மிதவைக் கடைகள் ( Floating Market) போன்றவை உலகின் பல நாடுகளின் கலாச்சரத்தை நம் கண்முன் விரிக்கின்றன.
அமைதியான புன்னகையுடன் கூடிய ஆங்கிலம் அறியாத தாய் மக்கள் பெரும்பாலும் மரியாதையுடனே நடந்துகொள்கிறார்கள். பொதுவாக சுற்றுலாத்தளங்களில் நடக்கும் அனைத்துவித ஏமாற்றுத்தனங்களையும் இங்கும் காணமுடிகிறது. தாய் உணவில் பல வகைகள் இருந்தாலும் தேங்காய் பனிக்கூழும்(Coconut ice cream), மாம்பழ பிசின் சாதமும் (Mango Sticky Rice) விரும்பி உண்ணப்படும் உணவாக(சைவ உணவில்) உள்ளன.
தாய் பாரம்பரிய நடனங்களில் இராமாயணக் காட்சிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. பாங்காக் விமான நிலையத்தில் உள்ள பாற்கடல் கடையும் காட்சி கொள்ளை அழகு. எல்லா நாடுகளிலும் போல, தாய்லாந்தின் பாரம்பரிய உடை மிக அழகானதே. பாரம்பரியமான தாய் மசாஜ் சிறப்பாகப் பலனளிப்பதே என்றாலும் விசாரித்து வுதியெங்கும் இருக்கும் வியாபாரப் போலிகளிடம் சிக்கிக்கொள்ளாமல் செய்துகொள்வது நல்லது.
பாங்காங்க் என்றால் உல்லாசம் என்பதையே முதன்மையாக சுற்றுலா நிறுவனங்கள் முன்னிருத்தினாலும் இயற்கை, ஆன்மிகம், புத்தர் கோவில்கள், அழகு, கலை, பாரம்பரிய நவீன கட்டடங்கள், நீர்வழிப் போக்குவரத்து, உணவு மற்றும் உடைகள் வீதி மற்றும் உயர்தர உணவகங்கள், மிருகக்காட்சி, கடலுலகம் எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டதே பாங்காக்.
புத்தர் சிலை அழகிற்காக வைக்கப்படக்கூடாது என்பதை கடைப்பிடிக்கிறார்கள்.
குறிப்பு – 15 வருடங்களுக்கு முன்னர் இளம் வயதில் வங்கியில் பணியாற்றி கொண்டிருக்கும்பொழுது ..இதே போன்ற என் பயண நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்ததற்கு நன்றிகள் தம்பி .
தம்பி ஆனந்த் கடந்த 10 வருடங்களாக வீட்டுக்கடன் நிதி வழங்கும் அதிகாரியாக வளர்ந்து கொண்டும் ...வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நிதிசேவை வழங்கி வருவது என் சிஷ்ய பிள்ளையாய் வளர்ந்து வருவது எனக்கு மகிழ்ச்சியும் கூட .வாழ்த்துக்கள் தம்பி ...🥰💦⛈️
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
வீட்டுக்கடன் நிதி ஆலோசகர் -9944066681..🥰📗🖋️🏠🏡🏘️




Comments
Post a Comment