கேள்வி : நகைக்கடனை அடைக்கும் சிறந்த உத்தி என்ன?
வீட்டுக்கடன் (top-up loan) வாங்கி நகைக் கடனை அடைக்கலாமா?
நகைக்கடனில்
பொதுவாக வட்டி விகிதம் குறைவு. ஏனென்றால், அது அடமானம் சார்ந்த கடன்.
இப்போது, நகைக்கடனை அடைப்பதற்கு நீங்கள் மேலூட்ட வீட்டுக்கடனைப்(top up housing loan) பயன்படுத்தலாமா
என்று கேட்கிறீர்கள்.
அவ்வாறு பயன்படுத்துவதில்
பல சிக்கல்கள் உள்ளன.
* உங்களது மேலூட்ட வீட்டுக் கடன் வீட்டினை மேம்படுத்த, மராமத்து வேலைகள் செய்வதற்காக, வீட்டினை விரிவாக்குவதற்காக வழங்கப்படுகிறது. தணிக்கையில்(audit) உங்களது பணம் வீட்டிற்காக செலவாகவில்லை என்றால், அதன் காரணமான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க வேண்டும்.
*கடனை அடைப்பதற்கு
இன்னொரு கடன் வாங்குவதென்பது ஆரோக்கியமான விஷயமல்ல. நீங்கள் ஒரு படு குழியிலிருந்து மற்றொரு படு குழிக்கு தாவுகிறீர்கள். அவ்வளவே.
புதிய கடனுக்கு, அதற்கான பரிசீலனைத் தொகைகள்(processing charges) செலுத்த வேண்டும். பணம் வீணாகும்.
* மேலூட்ட வீட்டுக் கடனுக்கு வரிச்சலுகைகள் கிடையாது.
* மேலூட்ட வீட்டுக் கடனுக்குப் பொதுவாக வட்டி விகிதம் அதிகம்.
· எனவே, தங்க நகைக்கடனை சீக்கரமாக கட்ட முயற்சி செய்யுங்கள். அதற்கு உங்களுக்கு அதிகப் பணம் தேவைப்படுகிறது. அதனை இரண்டு வழிகளில் அடைய முயலுங்கள்.
· அதிகமாக சம்பாதிக்கப் பாருங்கள் -
வீட்டிலுள்ள தேவையற்ற பொருட்களை விற்பது, பகுதி நேர வேலைக்குச் செல்வது , முடிந்தால் மனைவியும் வேலைக்குச் செல்வது போன்ற பல வழிகளில் அதிகமாக பணம் திரட்டப் பாருங்கள்
·
· சிக்கனமாக வாழ்ந்து, சம்பாதித்த பணத்தில் அதிகமாக
சேமிக்கப் பாருங்கள் - நிதி திட்டமிடல் செய்து, பணத்தை சேமியுங்கள்.
·
·
பணத்தை சேமித்து, விரைவாக நகைக்கடனை அடையுங்கள். நன்றி வாழ்த்துக்கள்
·
Comments
Post a Comment