முழங்கால் வலிக்கும் தரைதளத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஒரு சிலர் சொல்லுவதை உண்மை என்று நினைத்துக்கொள்ளுகிறோம். எந்த தரை என்றாலும், கால் தரையில் பட்டு தான் ஆகவேண்டும்.
01. முன்பு மொசைக் தரை தான் இருந்தது.
02. பிறகு டைல்ஸ் பதிக்கத்தொடங்கினார்கள்
03. தற்போது டைல்ஸ் அல்லது மார்பிள் அல்லது கிரானைட் பதிக்கிறார்கள்.
டைல்ஸ் - விதவிதமான மாடல்கள் சந்தையில் கிடைக்கின்றன.நமக்கு பிடித்தமான நிறத்தில் தேர்வு செய்துகொள்ளலாம். கடினமான பொருட்கள் விழுந்தால், இவை தாங்கும் சக்தி உள்ளதா - மற்றும் எளிதில் உடையாததா என்று பார்த்துக்கொள்ளவேண்டும். செயற்கையாக தயாரிக்கப்டுவதால், சேர்க்கப்படும்
பொருட்களுக்கு தகுந்தவாறு, எதிர்மறை செயல்கள் இருக்கும். யாராலும் குறிப்பிட்டு சொல்லமுடியாது.
மார்பிள் - வட நாடுகளில், மார்பிள் தான் பயன்படுத்துகிறார்கள். பல வகைகள் இருக்கின்றன. மார்பில் பதிக்கும்போது
கடினமான பொருட்கள் விழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; ஆசிட் போன்றவை கொட்டிவிட்டால், ஓட்டை விழுந்து விடும். மார்பிள் இயற்கையானது. மலைகளில் இருந்து வெட்டி எடுத்து கொண்டு வருபவை. நடப்பதற்கு சுகமாக இருக்கும். maintenance மிகவும் எளிது. கால்களில் குளிர்ச்சியாக இருக்கிறது என்று கருதினால், சாக்ஸ் அணிந்து கொள்ளலாம். தரை தளத்திற்கு மார்பில் சிறந்தது.
கிரானைட் - இதுவும் மார்பிள் மாதிரி இயற்கையாக மலைகளில் இருந்து எடுக்கப்படுவது
தான். ஆனால், கால்களில் சுகம் கிடைக்காது. சூடாக இருப்பது போன்று இருக்கும். ஹோட்டல்களில் அதிகம் இதை தான் பயன்படுத்துவார்கள். பெரும்பாலும், கருஞ்சிவப்பு
நிறத்தில் தான் இருக்கும். வீடுகளில், அடுப்பு மேடைக்கு பயன்படுத்தினால், சுத்தம் செய்வது எளிது. கருஞ்சிவப்பு
மற்றும் அடர்ந்த நிறத்தில் இருப்பதால், எதிர்மறை உணர்வுகளை கிரானைட் பிரதிபலிக்கும்
என்று சொல்லுகிறார்கள்.
அதாவது அணைத்து நேரங்களிலும் நாம் இப்படி அடர்ந்த நிறத்தையே பார்த்துக்கொண்டு
இருப்பதால், மனதில் இறுக்கமான உணர்வுகள் தோன்றுவதாக உளவியலாளர்கள் சொல்லுகிறார்கள்.
உடலில் ஏற்படும் வலியை தரை தளத்தில் இணைத்து பேசுவதற்கு எந்த மருத்துவ காரணங்களும் இல்லை. முழங்கால் வலி , வயோதிகம் மற்றும் உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
நன்றி ...
Comments
Post a Comment