வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றும் முன் கவனிக்க வேண்டியவை...
வங்கிகள் மற்றும் வீட்டுக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் (ஹெச்.எஃப்.சி.) போன்றவற்றிடம் இருந்து வீட்டுக் கடன் வாங்கியவர்கள் அவை விதித்திருக்கும் அதிகமான வட்டி விகிதத்தைப் பார்த்து வெறுத்துவிடுவார்கள். இந்த நிலையில் ஒரு சில வங்கிகள் மற்றும் வீட்டுக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் வீட்டுக் கடனுக்கு குறைந்த வட்டியை கொடுக்க முன் வந்தால் தாங்கள் ஏற்கனவே வாங்கிய வீட்டுக் கடனை குறைந்த வட்டியை விதிக்கும் வேறு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மாற்ற நினைக்கின்றனர். அதன் மூலம் தாங்கள் செலுத்தும் வட்டி குறையும் என்று நம்புகின்றனர்.
வீட்டுக் கடனை மாற்றுவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
1. தற்போது இருக்கும் வீட்டுக் கடனில் நீங்கள் பெற்றுவரும் அனுகூலங்கள்
2. தற்போதைய வங்கியில் வேறு கடனுக்கு மாறுதல்
3. வேறு புதிய நிறுவனத்தில் கடன் வாங்கி இருக்கும் கடனை அடைத்தல்
4. இருக்கும் கடனை மாற்றும் போது கட்டணம் செலுத்த வேண்டுமா என்று பார்த்தல்
புதிய வங்கி அல்லது தனியார் நிறுவனத்தில் மாற்றுவதற்கு முன் சரிபார்க்க வேண்டியவை
1. வீட்டுக் கடனை மாற்றப் போகும் வேறு வங்கியின் கடனுக்காக ஆகும் முன் கட்டண விவரங்களை சரிபார்த்தல்
2. புதிய கடனுக்கு ஆகும் ப்ராசஸிங் செலவை சரிபார்த்தல்
3. வாங்கப் போகும் புதிய கடனில் இருக்கும் வட்டியையும், தற்போது இருக்கும் வீட்டுக் கடனுக்கான வட்டியையும் ஒப்பிட்டுப் பார்த்தல்
வட்டி விகிதத்தை அடிப்படையாக வைத்து மட்டும் கடனை மாற்றலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்ய முடியாது. மாறாக ப்ராசஸிங் கட்டணம் மற்றும் ஃப்ரீ பேமெண்ட் கட்டணம் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து மொத்தமாக பார்த்து முடிவு செய்ய வேண்டும்.
வீட்டுக் கடனுக்கு தற்போது இருக்கும் திருப்பிச் செலுத்தும் முறையையும், அதுபோல் புதிய கடன் வாங்கினால் அதை திருப்பிச் செலுத்தும் முறை, அதன் வட்டி மற்றும் இதர கட்டணங்கள் போன்றவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வட்டி விகிதத்தை மட்டும் பார்க்கக் கூடாது.
பெரும்பாலும் வீட்டுக் கடன்கள் பலருக்கு சுமையாக இருக்கின்றன. ஒரு வேளை வட்டி விகிதம் குறைவாக இருந்தால் மட்டுமே வேறு வங்கிகளை அணுக வேண்டும். மேலும் பல வங்கிகள் கடன் வழங்க நீண்ட காலத்தை எடுத்துக் கொள்வது வாடிக்கையாளர்களை எரிச்சல் அடையச் செய்யும்......
சிவக்குமார் VK
வீட்டுக்கடன் நிதி ஆலோசகர்
அரசுடைமையாக்க வங்கிகள் ,தனியார் நிதிவங்கிகள்
கோவை ,பொள்ளாச்சி ,உடுமலைப்பேட்டை
9944066681..
Comments
Post a Comment