கேள்வி : உங்கள் வாழ்க்கைத் துணையின் அலைபேசியைப் பார்ப்பது நியாயமானதா?
நியாயம் அநியாயம் புரிதல் நம்பிக்கை என்பதை தாண்டி, அதற்கு ஒரு பக்குவப்பட்ட மனநிலை வேண்டும்.
துணையின் அலைபேசியை பார்க்கும் போது அதிலிருக்கும் இயல்பான விசயத்தை ஊதி பெரிதாக்காமலும் இருக்கவேண்டும், அதேநேரம் அலைபேசியினுள் அணுகுண்டே இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் திறனும் முதிர்ச்சியும் வேண்டும்.
நம் துணையானாலும் அவர்களும் ஒரு எளிய மனிதர்களே. நிறை குறை நிறைந்தவர்களே.
அது போல, துணையின் அலைபேசி என்பதற்காக வலுக்கட்டாயமாக பார்ப்பதும் அநாகரீகம்.
அவ்வாறு பார்க்க விரும்பும் துணையை பார்க்க அனுமதிக்காமல் வலுக்கட்டாயமாக மறைப்பதும் அநாகரீகம்.
சமீபத்தில் ஒரு
குறும்படம் பார்த்தேன்.
அதில்
நடுஇரவில் கணவனுக்கு வரும்
அலைபேசி அழைப்பை எடுத்து மனைவி
பேசுகிறார். அந்தப்பக்கம் ஒரு
பெண்குரல். அதுஒரு
ராங்
கால்.
ஆனாலும் இவர்
கணவனின் மீது
சந்தேகம் கொண்டு
அவரது
ஃபோனை
ஆராய்கிறார். அதில்
கணவர்,
ஒரு
எண்ணுக்கு "happy birthday my dear wife " என மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அந்த
எண்ணை
அழைக்க,
அந்தப்பக்கம் எடுப்பாரில்லை.
இங்கு
சந்தேகம் தீர்ந்தபாடில்லை. தானாக
அழுது,
தற்கொலை செய்ய
முடிவெடுத்து, பின்
கணவனையும் கொல்ல,
முடிவெடுக்கிறார். முடிவு
சஸ்பென்ஸ்.
படம்
பெயர்.
Flat no 8A
https://youtu.be/cP8lWW76TuA
Comments
Post a Comment