சிலர் ஓட்டலில் சாப்பிட உட்காரும்போது மட்டும் இது என்ன அது என்ன என்று தெரியாத மாதிரி நடிக்கும் காரணம் என்ன?
நிஜமாகவே தெரியாது என்று அர்த்தம்.
இன்று கோவையில் நிறைய சைனீஸ்,மலேசியன் உணவு வகைகள் வந்துவிட்டன.
வாயில் நுழையாத பெயர்கள்.
எனக்கும் இந்த இட்லி தோசை பொங்கல் பூரி மீல்ஸ் சப்பாத்தி குருமா இவைதான் தெரியும்.
என் மகனுடன் என் ஓட்டல் அனுபவம்.(கூப்பர் கிச்சன் ஓட்டல்) நானும் மகனும் மட்டும்.
அவனுடன் முதல்முதலாக ஓட்டல் சென்ற அனுபவம்.
இப்ப எல்லாம் முதலில் சூப் தான்
சாப்பிடனுமாம்.
உள்ளே சென்று அமர்ந்ததும் இரண்டு சூப் ஆர்டர் கொடுத்தான்.
ஆரம்பமே 'சூப் வேண்டாம் எனக்கு' என்று சொல்லக்கூடாதல்லவா
அதனால் தலையாட்டி வைத்தேன்.
சற்று பெரிய பௌலில் சூப் வந்தது ஆவி பறக்க.
அவன் சூடாகவே தள்ளுகிறான்.
நானும் முயல்கிறேன்.ம்ஹும்.
நாக்கு வெந்தது தான் மிச்சம்.
மகன்: நீ மெதுவா குடிப்பா .ஒன்னும் அவசரமில்ல.
(முதலே சொல்ல வேண்டியது தானே.நாக்கு எரியுது.இனி எது சாப்பிட்டாலும்
டேஸ்ட் தெரியாது.
என் மைண்ட் வாய்ஸ்.)
முழுவதுமாக சூப் குடித்தாகிவிட்டது.( பணம் வீணாக்க விட மாட்டான்)
(இங்கே ஒரு விஷயம்.குடிக்க முடியல ன்னு சொன்னா பரவால்ல விட்டுடு.என்பார்.
மகனாச்சே.சொல்லவும் முடியாது.
சொல்லவும் கூடாது.😆)
மகன்: இப்ப என்ன ஆர்டர் செய்யலாம்?
நான்: வயிறு ஃபுல்லாயிடுச்சி.
நீ சாப்பிடு.
மகன்:அப்ப எதுக்கு வந்த.ஏதாச்சும் சொல்லு.
நான்: சரி. தோசை சொல்லு.
மகன்: இங்கே அதெல்லாம்
கிடைக்காது.வேணும்ணா நூடுல்ஸ் சொல்லிட்டா.
நான்: சூப்லயே நூடுல்ஸ் கொஞ்சம் இருந்துச்சே.
மகன்: கொஞ்சம் கடுப்பாகி சரி மெனு கார்டை பார்.
நான்: எதிர் டேபிளை பார்த்தேன்.
பெரிய கண்ணாடி பௌலில் ஐஸ்கிரீம். டேபிளின் நடுவே வைத்து ஏதோ ஸ்பிரே கொண்டு தீ மூட்டினான்.
கொஞ்சம் அதிகமாகவே ஸ்பிரே செய்துவிட்டான்போலும்.
நான்கு டேபிள் கொண்ட கேபின் முழுமைக்கும்
புகை மூட்டம்.
ஆர்டர் செய்தவர்கள்
என்ன செய்கிறார்கள்
என்பதிலே என் கவனம்.
மகன்: அங்க என்னப்பா பாக்கற.
கொஞ்சம் பொறுமை இழந்தான்.
நான்:அந்த டேபிள் ஆட்கள் கண்ணுக்கு தெரியலடா.
ஒரே புகையா இருக்கு .சரி அது என்னது.
மகன்: அதுக்கு பேர் ஸ்மோகி ஐஸ்கிரீம்.
உனக்கு என்ன வேணும்?
நான்: நீ என்ன வேணுமோசாப்பிடு.
எனக்கு எதுவும் வேண்டாம்.
மகன்: உன்னைப் போய் கூட்டிவந்தேன்பார்.என்னை சொல்லனும்.
இப்போ அந்த குடும்பம் தெரிந்தது.
ஏதும் ஆபத்தில்லை.அப்பாடா.
இவ்வாறு கழிந்த 2015 ம் ஆண்டு வடவள்ளி கோவை புத்தாண்டு கொண்டாட்டம்.
இதனால் என்ன சொல்கிறேன் என்றால் இளம் தலைமுறையினருக்கு பெயர் தெரியாமல் இருக்கலாம்.
சத்தியமா தெரியாது யுவர் ஆனர்.🤣🤣🤣
மலரும் நினைவுகள் ஹோட்டல் அனுபவங்கள் ,,,,
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்

Comments
Post a Comment