ஹேப்பி பர்த்டே கோவை..
ஹேப்பி பர்த்டே கோவை..
அன்பு,பாசம்,மரியாதைக்கு பெயர் பெற்ற எங்க கோவை..
கோவையின் சிறப்பு..
எங்கூரு சிறுவாணித் தண்ணி கல்கண்டு மாதி இனிக்கும்..எவ்ளோ வெய்யில் பொளந்து கட்டினாலும்,எப்டியாச்சும் காத்து தழுவிட்டுப் போகும்..பத்து வயசு ஆளைனாலும்,ங்கப் போட்டு மரியாதையா கூப்பிடுறது எங்க சனத்தோட சிறப்பு..எங்க ஊரு காவல் தெய்வம் கோணியம்மன் தேர் மாசி மாசம் பெரிய திருவிழாவா நடக்கும்..இவகிட்ட என்ன கேட்டாலும் தருவா,
ப்ரூக்பீல்ட்ஸ்,ஃபன் மால், ஃப்ரோசோன் மால்,பொழுது போக்குத்தளம்
வந்தாரை வாழ வைக்கும் ஊரு எங்க ஊர்..வெள்ளந்தியான மக்கள்..யாருக்கு என்ன எந்த ஊர் நாட்டுல ப்ரச்னைனாலும் மொதல்ல நிக்குறது எங்க ஊரு சனம்..எங்க ஊரின் ஸ்பெஷல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ்,அன்னபூர்ணா,ஆனந்தாஸ்
வயசுக்கேத்த மாதி யாராருந்தாலும்,ஆத்தா,அப்பா,அக்கா,அம்முச்சி,அப்புச்சி,தம்பி,அண்ணானு மொற வெச்சு கூப்பிடறது,ஆரு வூட்டுல நல்லது கெட்டதுனாலும் வரிஞ்சு கட்டிக்கிட்டு வேலை செய்யறவங்க எங்க சனம்..நொம்ப கவலை சோர்வுன்னா,ரேஸ்கோர்ஸ் சாலைல பத்து நிமிசம் நடந்தா ரெக்க கட்டி பறக்கும் மனசு..பேரூர்,மருதமலை,ஈச்சனாரி,ஆனைக்கட்டி,சாரதாம்பாள் கோயில்,மகாலட்சுமி கோயில்,ப்ரூக்ஃபீல்ட்ஸ் மால்,ஃபன் மால்,ப்ரோஸோன் மால்கோவைக் குற்றாலம்,காளம்பாளையம்,சாயிபாபா காலனி பாபா கோவில்,மருதமலை,பேரூர்,வெள்ளியங்கிரி மலை ,பீளமேடு பெருமாள் ஆஞ்சநேயர் கோயில் எங்கூரு சிறப்புத் தலங்கள்..
கோவைக் குற்றாலம் சிறந்த பொழுதுப் போக்குத்தளம் ,இங்கருந்து தான் ஏசியாவின் இரண்டாவது புகழ்பெற்ற குடி நீர் வருகிறது
நான்வெஜ் உணவுக்கு,பெயர் பெற்றது,அங்கண்ணன்,வேணு பிரியாணி,என் ஃப்ரெண்ட் டேவிட்டோட கொக்கரக்கோ,ஹரி பவன்..
பூ மார்க்கெட் அருகில் சென்றால்,ஶ்ரீ கஃபே,பாட்டிக் கடை,ஆத்தா கடை,அப்பத்தா கடை,சாய்பாபா காலனி எஸ் பேண்ட் தாண்டி டொமினோஸ் கார்னர்ல அக்கா கடை இங்க எல்லாம் அஞ்சு வகை சட்னியோ சாயந்திரம் ஏழு மணிலருந்து பத்து மணி வரை டிஃபன் கடை,கூட்டம் அள்ளும்..இன்னுமின்னும் நிறைய சொல்லலாம்..இவ்ளோ பெருமைகளைக் கொண்ட எங்க ஊரு நாள் இன்று..
எல்லாத்தயும் விட சிறப்பு கோவையின் ஐகான் க்ரைம் மன்னன் எங்க அண்ணன் ராஜேஷ் குமார் இருக்கறதும், யோகநாதன் அண்ணா வாழ்றதும் எங்க ஊர் தான்,
எத்தன மழை புயல் வெள்ளம்னாலும் எங்க ஊர காவக்காரி கோணியம்மா தாய் பாத்து பாதுகாப்பா,
ஹேப்பி பர்த்டே .கோவைன்னா கெத்துடாவ்வ்வ்வ்வ்..
Tanx lalli
Comments
Post a Comment