நண்பரின் கேள்வி :
உங்களிடம் உள்ளப் பணம் = 50,000 ரூபாய்.
உங்களுக்கு மாதம் தேவைப்படும் பணம் = 2,000 ரூபாய்.
உங்களுக்கு வருடம் தேவைப்படும்
பணம் = 24,000 ரூபாய்.
உங்களுக்கு முதலீட்டில் வருடம் தேவைப்படும் லாபம் =
24,000 / 50,000 * 100
= 48% லாபம்.
இத்தகைய லாபத்தை
எளிதில் அபாயமின்றி தரும் ஒரு முதலீடு இருந்தால், இன்று
பல்ர் அதனைப்
பயன்படுத்தி இருப்பர்.
எந்த ஒரு முதலீட்டிற்கும் மூன்று
கூறுகள் உண்டு.
1. பணத்தின் வளர்ச்சி விகிதம்
2. நீர்ப்புத்தன்மை
3. பணத்தை இழக்கும் அபாயம்
எந்த ஒரு முதலீட்டாலும், இந்த மூன்றையும் தர முடியாது.
·
பணத்தின் வளர்ச்சி
விகிதம் குறைவாக
இருந்தால், பணத்தை
இழக்கும் அபாயம்
குறைவாக இருக்கும்.
= வங்கி வைப்பு நிதி, அஞ்சலக சேமிப்புகள்
= 6 % முதல் 7% வருடாந்திர பணத்தின் வளர்ச்சி
·
பணத்தின் வளர்ச்சி
விகிதம் அதிகமாக
இருந்தால், பணத்தை
இழக்கும் அபாயம்
அதிகமாக இருக்கும். = பங்குகள், சரக்குகள், எதிர் நோக்கிய பேரங்கள்(Futures and Options ), பிட்காயின், துறை சார்ந்த பரஸ்பர நிதிகள்(sector funds) போன்றவை.
·
பணத்தின் வளர்ச்சி
சுமாராகவும், நீர்ப்புத்தன்மை குறைவாக இருக்கும். = நிலம், தொன்மையான ஓவியங்கள், தொன்மையான அறைகலன்கள் போன்றவை.
·
உங்களுடைய பணத்தினை
வளர்ச்சி எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளபடியால், நீங்கள் அதிக
மெனக்கெடல் செய்து,
பணத்தை இழக்கும்
வாய்ப்புள்ள அபாயகரமான
முதலீட்டில் இறங்கினால் மட்டுமே, இத்தகைய
லாபத்தினைப் பெற முடியும். நினைவில் கொள்ளுங்கள். உங்களது
மொத்தப் பணத்தையும் இழக்க வாய்ப்புண்டு. எனவே, எந்த
ஒரு முதலீடும்
உங்களுக்கு கைவருமா
என்று பார்த்து,
புரிந்துக் கொண்டு,
இறங்குங்கள்.
வாரன் பபெட் சொன்னது போல், உங்களுக்கு புரியாத
முதலீட்டில் இறங்காதீர்கள்.
வாரன் பபெட் சொன்னது போல், முதல் விதி;
ஒருபோதும் பணத்தை
இழக்காதீர்கள். இரண்டாம்
விதி; முதல்
விதியை ஒருபோதும்
மறக்காதீர்கள்.
எனவே, நீங்கள் நினைப்பதைப் போல், அதிக
லாபத்தினை அடைய
பின்வரும் முதலீடுகளில் நீங்கள் இறங்கலாம்.
1. துறை சார்ந்த பரஸ்பர நிதிகள் (Sector Funds)
2. எதிர் நோக்கிய பேரங்கள் (Futures &
options)
3. சரக்குகள் (Commodities)
4. நேரடி பங்குசந்தை பங்குகள் வாணிபம் (day trading)
5. அயலக செலாவணி வாணிபம் (Forex trading)
6. பிட்காயின்(Bitcoin)
7. பங்குசந்தை அறிமுக நிறுவனங்கள்
(Initial Public offering)
8. வெளிநாட்டு பங்குகள் சார்ந்த முதலீடுகள்(உதாரணமாக, அமெரிக்காவின்
பெரிய நிறுவனங்கள்)
9. தொழிலில் முதலீடு செய்வது (Venture capitalist)
10. இன்னும் பல
இவ்வாறெல்லாம், நீங்கள்
அபாயகரமான முதலீடு
செய்யவேண்டாமென நினைத்தால், உங்களது 50,000 ரூபாயினைக் கொண்டு, உங்களது
பகுதி நேரத்தில்
ஒரு தொழில்
தொடங்கலாம். உங்களது
உழைப்பின் மூலம்,
மாதம் 2,000 லாபம்
சம்பாதிக்கலாம்.
உங்களுக்கு ஏற்ற
முதலீட்டினைத் தேர்ந்தெடுத்து, வெற்றியடைய வாழ்த்துக்கள்.
சிவக்குமார் VK
Comments
Post a Comment