கேள்வி : அஸ்திவாரம் போட்டு வீடு கட்டுவது, தூண்கள் எழுப்பி வீடு கட்டுவது ஆகிய முறைகளில் உள்ள நிறைகுறைகள் என்ன? எந்த முறை சிறந்தது?
அஸ்திவாரம் போட்டு வீடு கட்டுவது,இதை சரியாக சொல்லனும்னா Load bearing structure என்று ஆங்கிலத்திலும், தமிழில் தாய்சுவர் முறை என்று சொல்லலாம்.
இந்த (Load bearing structure)தாய்சுவர் முறையில் மொத்த எடையானது(DL+LL+WL) சுவரின் வழியாக தரையை(Ground) சென்றடையும்.
இதன் நிறைகள்:
·
இதில் கற்களை(செங்கல்(அ)மற்ற வகையான கற்கள்) மட்டும் பயன்படுத்தி சுவர் எழுப்பி வீடு கட்டபடுவதால், column(தூண்) தேவை இல்லாததால்,அதற்கு பயன்படுத்தபடும் கான்கிரீட்,கம்பிகள்( reinforcement
details) தேவை இல்லாததால் வீட்டின் செலவு குறையும்.
·
இந்த முறையில் வீடு கட்டும்போது framed structure ஐ விட குறைவான நேரத்தில் வீடு கட்டிமுடிக்க
முடியும்.
·
இது மிகவும் பழமையான மற்றும் எளிமையான வீடு கட்டும்முறை.குறைந்த அளவிலான உபகரணங்கள்(construction tools) போதுமானது.
குறைகள்:
·
இதில் சுவர் மூலம் மொத்த எடை தரைக்கு செல்வதால், கீழ்தளத்தில்
எந்த இடத்தில் சுவர் இருக்கிறதோ மேல்தளத்திலும்
அதே இடத்தில் சுவர் எழுப்பப்பட வேண்டும்.சுவரை(அறையை) மாற்றி அமைக்க இயலாது.
·
இந்த முறையில் அதிகபட்சம் (G+2) இரண்டு மேல்தளங்கள்
வரை மட்டுமே அமைக்க முடியும்.
·
Shallow foundation: கடினமான மண்(hard strata) நான்கு அடிக்குள் இருக்கும் இடத்தில் மட்டுமே இந்த முறையில் வீடு கட்டுவது சாத்தியமாகும்.
·
வீட்டின் அனைத்து சுவர்களுமே 9"(இன்ச்) தடிமன் உள்ளதாக அமைக்க வேண்டும்.framed structure-ல் உள்ளது போல் வீட்டின் உட்பகுதியில் உள்ள சுவர்களை 4.5"(இன்ச்) க்கு அமைக்க முடியாது.எனவே வீட்டின் அறையின் அளவு(floor area (or)room
area) சிறிது குறையும்.
Framed
structure(column மற்றும் beam வைத்து கட்டுவது).இதில் மொத்த எடையானது(DL+LL+WL) slab - beam — column வழியாக தரையை சென்றடையும்.
நிறைகள்:
·
இந்த நவீன முறையில் தான் அனைத்து வானுயர் கட்டடங்களும் கட்டப்படுகிறது.
எத்தனை மேல்தளங்கள்
வேண்டுமானாலும் இம்முறையில்
கட்டிக்கொள்ள முடியும்.
·
கீழ்தளத்தில் உள்ள வீட்டின் அமைப்பை அப்படியே மேல்தளத்திற்கு மாற்ற தேவையில்லை.ஒவ்வொரு தளத்தின் அமைப்பையும்
நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
·
எந்த வகையான மண் உள்ள இடத்திலும் இம்முறையில் வீடு கட்டிக் கொள்ளலாம்.
Load bearing structure
உடன் ஒப்பிடும்போது
இதில் எந்த குறையும் இல்லை என்பதே என்னுடைய கருத்து.
இந்த இரண்டில் எந்த முறை சிறந்தது ?… எதை தேர்ந்தெடுப்பது?…
நீங்கள் வீடு கட்ட போகும் இடத்தில் கடினமான மண்(hard strata) நான்கு அடிக்குள் கிடைக்கிறது மற்றும் நான் ஒரு 1500 சதுரஅடிக்குள்
வீடு கட்டப்போகிறேன்
மற்றும் இரண்டு மேல்தளத்திற்கு(G+2)மேல் தேவையில்லை என்றால் நீங்கள் தாராளமாக Load bearing
structure (தாய் சுவர் முறை) ஐ தேர்ந்தெடுக்கலாம்.இதற்கு framed structure ஐ விட குறைவான செலவே ஆகும்.
இந்த Load bearing structure முறையில் வீடு கட்டும்போது
Electrical fittings சுவரின் வெளிப்பகுதியில்
தான் வரும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி.
சிவக்குமார் VK
Home Loan Consultant
Mobile --09944066681
Call or Whatsapp
siva19732001@gmail.com
Comments
Post a Comment