கேள்வி ;
வீடு வாங்கும்போது என்னென்ன ஒப்புதல்கள் (உதாரணம்- சி.எம்.டி.ஏ) இருக்க வேண்டும்?
1.
வீட்டு
மனை
அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனை திட்டமாக இருக்க
வேண்டும். Vacant plot should be in approved lay-out. அங்கீகார எண் என்ன என்று
குறித்துக் கொள்ளுங்கள். பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்ற
மனையை
வாங்காதீர்கள். DTCP அல்லது
DTCP அங்கீகரித்த திட்ட
குழுமத்தின் அங்கீகாரம் அல்லது
RERA- Real Estate Regulatory Authority அங்கீகாரம் பெற்ற
வீட்டு
மனை
திட்டத்தில் வீட்டில் மனை
வாங்குங்கள். அங்கீகாரம் பெற்றதின் உண்மைத்தன்மையை அங்கீகரித்த அலுவலகத்தின் வலைத்தளத்திலோ அல்லது
நேரிலோ
ஊர்ஜிதம் செய்து
கொள்ளுங்கள்.
2.
அந்த
மனையில் கட்டிடம் கட்ட,
அந்த
வீட்டு
மனை
திட்டத்தை அங்கீகாரம் அளித்த
அலுவலகத்தை அணுகி
வரைபட
அனுமதி
அளிக்கும் அலுவலரை கலந்து
ஆலோசனை
செய்யுங்கள். அவர்களது அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, உங்களுக்கு வசதிப்பட்ட கட்டிட
வரைபட
கலைஞர்
ஒருவரை
அணுகி
கட்டிட
வரைபடம் தயாரித்து அதற்கு
அந்த
அலுவலத்தில் வரைபட
அனுமதி
பெறுங்கள். இதற்கு
பல
ஆயிரங்கள், சில
நேரங்களில் லட்ச
கணக்கில் கூட,
கட்டனம் கட்ட
நேரிடும். ஆனால்
இது
கட்டாயம் நல்லது.
இல்லையெனில் சட்டத்தின் பார்வையில் அது
அனுமதியில்லா கட்டிடம். அனுமதியில்லா கட்டிடம் கட்டியவருக்கு சொந்தமில்லை. நேரம்
சரியில்லையெனில் அது
தரை
மட்டமாக வாய்ப்பு உண்டு.
3.
வரைபட
அனுமதி
பெற்றபின் அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின் படியே
நான்கு
புறமும் இடைவெளி விட்டு
மாறுபாடு இல்லாமல் கட்டுங்கள். அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின் படி
கட்டாமல் மாற்றி
கட்டினால் சட்டத்தின் பார்வையில் அது
அனுமதிக்கு மாறான
கட்டிடம். நேரம்
சரியில்லையெனில் இதுவும் சட்ட
சிக்கலில் சிக்க
வாய்ப்பு உண்டு.
4.
முடிவாக, Lay-out approval, Plot approval, Building plan approval இந்த மூன்றும் ஒரு
கட்டிடத்திற்கு மூன்று
தெய்வங்கள். மூன்றில் எது
ஒன்று
இல்லையெனினும் அது,
இதற்காக இடப்பட்ட பெருமுதலீட்டுக்கு எமனாய்
அமைய
வாய்ப்பு உண்டு.
சிவக்குமார் .VK
Sivakumar.V.K
Home Loan Consultant
(Home Loans,Home Loans To NRIs,)
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com🥰📚🌈
Comments
Post a Comment