உடுமலையின் அடையாளங்கள்.
உடுமலையின் அடையாளங்கள்.
175 ஆண்டு கால வட்டாட்சியர் அலுவலகக்கட்டிடம்
122 ஆண்டு கால நீதிமன்றக் கட்டிடம்
79 ஆண்டு கால நகராட்சிக்கட்டிடம்
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைத் தந்த எஸ்.வி.மில்
உடுமலையின் முதல் கருங்கல் கட்டிட திருமூர்த்தி மில்
உடுமலை முதன் முதலில் சென்ட்ரல் வங்கியோடு துவங்கிய பழனி ஆண்டவர்
உடுமலையின் அனைத்து சமய மத மக்களையும் அரவணைத்துச்செல்லும் பழைய மாரியம்மன் திருக்கோயில்
கிறித்தவர்களின் நம்பிக்கையான பழைய ஆர்.சி. சர்ச் இஸ்லாமியர்களின் நம்பிக்கையான பழைய வரலாற்றுச் சிறப்பு மிக்க பூர்விகப்பள்ளிவாசல்
லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கிய உடுமலை அரசு கலைக்கல்லூரி
ஆயிரக்கணக்கில் ஆளுமைகளை உருவாக்கிய உடுமலை அரசு ஆண்கள் பள்ளி
பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாரதியார்நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
இவையனைத்திற்கும் அடித்தளமாக இருக்கும்
மேற்குத்தொடர்ச்சி மலையின் பஞ்சலிங்க அருவி
இதற்கெல்லாம் உச்சமாக உடுமலை சுற்றுவட்டாரங்களில் அனைத்து சமய மக்களும் இன்றளவில் பாரம்பரியமாகக் கொண்டாடி வரும் தேர்த்திருவிழா
இவையெல்லாம் ஒட்டு மொத்த உடுமலையின் அடையாளம்
ஓட்டு மொத்த சமூகத்தின் அடையாளம்.📚🖋️
Comments
Post a Comment