கேள்வி :
1.
நீங்கள் அமெரிக்கா செல்ல
காரணம்
என்ன?
"கலிபோர்னியாவில் படிக்கும், சமீரா
ரெட்டியை சுத்தி
பாக்க
போறேன்"
என்ற
உண்மையான காரணத்தை சுருக்கமாக சொல்லவும்.
"பாஸ்டனில் இருக்கும் மச்சானை பாக்க
போறேன்!"
"மச்சான்(உங்களை
இல்ல)
பெயர்,
அட்ரஸ்
சொல்லு!"
இதுக்கு பதில்
சொன்னா
தான்
அடுத்த
கேள்வி.
2. இதுக்கு முன்னாடி அமெரிக்கா பயணம்
செய்திருக்கிறீர்களா?
இதுக்கும் உண்மையை சொல்லி
விடுங்கள்.
நீங்கள் பொய்
சொன்னாலும், "மறந்து போச்சு!"
என்றாலும் கண்ணாடிக்கு அந்த
பக்கத்துல இருக்கற ஸ்டீவ்
அல்லது
ராபினுக்கு தெரியும். சும்மா
உங்களிடம் போட்டு
வாங்குகிறார்.
3. உங்களுக்கு நண்பர்கள் அல்லது
உறவினர் யாரேனும் அமெரிக்காவில் இப்பொழுது உள்ளனரா? அவரது
முகவரி
தெரியுமா?
ஆமாம்,
அட்லாண்டாவில் எனது
நண்பர்
ரங்கா
இருக்கிறார். அவரது
முகவரி
"...." (முகவரிக்கு முன்னாடியே எனக்கு
மடலிடுங்கள்)
4. அமெரிக்காவில் எங்கு
தங்குவதாக உத்தேசம்?
ஹோட்டல் முகவரியை சொல்லுங்கள். முன்னரே முன்பதிவு செய்திருக்க வேண்டும். அட்லாண்டா என்றால் என்
வீட்டு
முகவரியை...
5. இந்த நேரத்தில் அமெரிக்கா செல்வதற்கு அப்படியென்ன அவசியம்?
"எனக்கு இப்போ
தான்
லீவு
கிடைச்சது."
"கைல இப்போ
தான்
காசு
சேர்ந்தது."
"நான் போனா
தான்,
அங்கிட்டு நாசாவிலிருந்து ராக்கெட் கிளம்பும்."
நாசா
லெட்டரை காட்டவும்.
மறுபடியும் உண்மையை ...
6. எவ்வளவு நாள்
தங்கி
இருப்பீர்கள்?
1 வாரம், 1 மாதம்,
3 மாதம்...
(இந்த
தகவலும் நீங்க
ஏற்கனவே DS160 பூர்த்தி செய்திருப்பீர்கள்)
7. உன்னுடன் யாரெல்லாம் பயணம்
செய்கிறார்கள்?
பெயர்,
உறவு
முறையுடன் சொல்லுங்கள்.
8. டிக்கெட் புக்
செய்து
விட்டீர்களா? அங்கு
தங்க,
உண்ண,
உறங்க
எவ்வளவு செலவாகும்? என்று
உங்களுக்கு தெரியுமா?
முன்பதிவு பேப்பர்களை காட்டுங்கள். உங்கள்
பயணத்துக்கு எவ்வளவு செலவாகும்? என்ற
ஐடியா
உங்களுக்கு இருக்கான்னு அவர்
உறுதி
செய்து
கொள்கிறார்.
9. நீங்கள் வாழ்வதற்கு என்ன
செய்கிறீர்கள்?(என்னய்யா வேலை?
என்பதை
தான்
இப்படி
சுத்தி
வளைச்சு கேட்பாங்க)
வேலை,
வருட
சம்பளம், வரி
பிடித்தம் போக
கையில்
எவ்ளோ
வரும்?
என
தெளிவா
சுருக்கமா சொல்லுங்கள். GST எல்லாம் சேர்க்கப்படாது.
எல்லா
வங்கி
பேப்பர்களும்(Bank Statements) கைவசம் வைத்திருங்கள்.
10. திருமணமாகி விட்டதா? குழந்தை, செல்ல
பிராணிகள் உண்டா?
நீ
பாட்டுக்கு ஊருக்கு போயிட்டா, நாய்க்கு யாரு
சோறு
வைப்பாங்க? (நிஜமாவே ஒருத்தருக்கு இப்படி
கேட்டாங்க).
பக்கத்து தெருவுல தான்
மாமியார் வீடு
(B2 காவல்
நிலையமல்ல, நிஜமான
மாமியார் வீடு).
அவங்க
வந்து
பாத்துப்பாங்க. நாயெல்லாம் தனியா
வளர்க்க வில்லை.
எனவே
கவலையில்லை.
11. இது தான்
கடைசி
தாக்குதல்.
அமெரிக்காவிலேயே உனக்கு
வேலை
கிடைத்து, அங்கயே
தங்கி
விட
வாய்ப்பு கிடைத்தால் என்ன
செய்வாய்?
இதுக்கு மட்டும் உண்மையை சொல்லிவிட வேண்டாம். ஏனெனில் நீங்கள் செல்வது பயணிகள் விசாவில்.
"இங்கு வீடு
இருக்கு, வாசல்
இருக்கு, குழந்தை-குட்டி
இருக்கு. மாமியார் இருக்காங்க. திராவிட மாடல்
அரசாங்கம் இருக்கு".
இவங்களை எல்லாம் அப்புறம் யார்
பாத்துக்கறது? 2 வாரத்தில் திரும்பி வந்து
விடுவேன். "பாருங்க, ரிட்டன் டிக்கெட் கூட
எடுத்துட்டேன்."
வெள்ளந்தியான ராபின்
நம்பி
விடுவார்.
By the way, பயணியர் விசா(Tourist visa) வைத்து எல்லாம் இங்கு
வேலை
தேட
முடியாது.
இந்த
கேள்விகளில் ஒன்னு
இரண்டு
கூடலாம், குறையலாம். பயணியர் விசாவுக்கு இவ்வளவு தான்.
எல்லா
பதிலையும் ரத்ன
சுருக்கமா, முழுமையான பதிலாக
அளிக்கவும். நிறைய
பேசினால் அதிலிருந்தே அடுத்த
கேள்விகள் பிறக்கும். கேள்விகள் பிறந்தால், நாம்
ஏதாவது
உளறி
கொட்டுவோம். அது
போதும்
ராபினுக்கு.
நன்றி ..உங்களின் வெளிநாட்டு பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
Sivakumar.V.K
Home Loan Consultant
(Home Loans,Home Loans To NRIs)
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com📚✍️🤝👍🏡
Comments
Post a Comment