கேள்வி : ப .கார்த்தி -விவசாயம் .தொழில்முனைவோர் .உடுமலைப்பேட்டை எஸ் .அம்மாபட்டி 📚✍️
தெட்டிநாயக்கர் சமுதாயம், தொழில், குடும்பம், இவற்றை புரிந்தவர்கள் எத்தனை பேர் 🤔
இன்று கரூர் K .N .நாகராஜ் சொந்தம் அவர்களின் அருமையான பதிவு .0708.2022.
தொட்டிய நாயக்கர் சமுதாயம் என்பதைவிட ராஜகம்பபளத்தாருக்கு உரிய தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றிய புரிதல்கள் என என் பார்வையில் பதிய விரும்புகிறேன்...
வடக்கிருந்து வந்ததாக சொல்லப்படும் நம் முன்னோர்கள், விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டிருந்தனர் என்பதற்கு, இன்றைக்கும் அவரவர்கள் வைத்திருக்கிற நில புலன்களை கணக்கில் கொள்ள வேண்டுகிறேன்...
விவசாயத்தோடு,ஆடு மாடுகளை மேய்த்தலினால் மட்டுமே, கறவையின் மூலமாக, வருமானத்தை பெருக்கிக் கொண்டு ஓரளவு அந்த தொழிலுக்குள்ளேயே தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டனர்...
காடு தோட்டம் இல்லாதவர்கள் கூலிவேலை செய்துகொண்டும், அதற்கும் சரியான வருமானமில்லாத பட்சத்தில் ஊர்விட்டு ஊர் போய், பஞ்சம் பிழைத்தவர்கள் என. பிற இனத்தவர்களிடம் காடு தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து, ஆங்காங்கே கொஞ்சம் முன்னேறி வந்தாலும் அவர்களின் குழந்தைகளை தொழிலுக்கு உபயோகப்படுத்திக் கொண்டார்களே தவிர, கல்விச் சாலைகளுக்கு அனுப்ப பெருமளவு விருப்பப்படவில்லை என்றே சொல்லலாம்...
இன்றைக்கும் எத்தனையோபேர், காடு தோட்டம் வைத்திருந்தாலும், பாட்டன் பூட்டன் காலத்து சொத்துகள் அளவிற்கு இல்லை என்றே சொல்லலாம்... கொஞ்சம் கொஞ்சமாக நில புலன்களை( வேறு தொழில்களை ஈடுபடாததால் ) இழந்துவருகிறார்கள் என்றும் சொல்லலாம்... ஆனாலும் விவசாயத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மையே
பிற சமுதாயத்தினர் நில புலன்களை விற்று, அல்லது தொழில்களில் முதலீடு செய்வதற்காக, நிலங்களை பாங்குகளில் அடமானம் வைத்து, தொழில்களை செய்து ஒரு சிலர் வளர்ந்தும்...தொழில்களில் பெரும்பாலனவர்கள் தோல்விகளை கண்டு, அதற்காக இருக்கிற காடு தோட்டங்களை விற்று கடனை அடைத்துவிட்டு,விற்று மிச்சம் சொச்சமிருக்கிற காசில் குவாட்டர் அடித்துவிட்டு, குப்புற படுத்திருப்பது போல.....
நமது சமுதாயத்தினர் பிற தொழில்களில் ஈடுபடவுமில்லை, ரிஸ்க் எடுக்க தயாராகவுமில்லை... அதே சமயம் வேலைக்கு போகவும் தயங்கவில்லை என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது...
ராஜகம்பளத்து மக்கள், காடு தோட்டங்களை தனது பேரப்பிள்ளைகளுக்கு வேண்டுமென்கிற நினைப்பில், 100நாள் வேலைக்குகூட போகிறவர்கள் இருக்கிறார்களேதவிர, நில புலங்களை விற்கிற மனநிலையில் இல்லையே என்றே கருதுகிறேன்...காரணம் விவசாய நிலங்கள் என்பவை தாத்தன் பூட்டன் காலத்து, கடவுள் கொடுத்த காணி பூமி...நாம விற்கிறதுக்கு ரைட்ஸ் இல்லை..பேரன் பேத்திக வேணும்னா வித்துட்டு போராக...நாம விற்ககூடாதுடா மகனே என சொல்கிற கம்பள தகப்பன்மார்களை நிறைய பார்த்து வருகிறோம்...
குடும்பச் சூழல்கள்...
ராஜ கம்பளத்து மக்களின் வாழ்வியல் வழிமுறைகள் கொஞ்சம் ரசனை மிகுந்தவை...
வாழ்க்கையை வகைவகையாய் ரசிப்பதில் ரசனை மிக்கவர்கள்...
காசாசை பிடித்தவர்களாக வாழ்ந்தார்கள் என்று சொல்லிக் கொள்ளவே முடியாது எனும்படியாக வாழ்ந்துவிட்டு போயிருக்கிறார்கள் என்பதே உண்மை...
ஜனரஞ்சக புத்தியை மையமாக வைத்து சொந்த பந்தங்களை சந்திப்பதற்கான வாயப்புகளையே அதிகம் நாடியிருக்கிறார்கள் என்பதும்கூட உண்மையே...
குடும்பத்தில் உள்ள அத்தனை பேருமே, மூத்தவன் சொல்லையே வேத வாக்காக கொண்டு ஒற்றுமையாய் வாழ்ந்து போயிருக்கிறார்கள் என்பதை எத்தனையோ ஊர்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்...
தாத்தாக்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த பண்ணகத்தி பிரச்சனைகள், அப்பா காலத்திலும்,நம்முடைய காலத்தோடும் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிடுமென்பதாகவே கருதுகிறேன்...
காரணம் இளைஞர் இளைஞிகள் கல்வியறிவு பெற்றதால்... பண்ணகத்தி முறை முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கிறதுஎன்றே எழுத விரும்புகிறேன் 1990களுக்கு பிறகு பண்ணகத்தி வைத்துக் கொள்வதை கேவலாமாக பார்க்கிறார்கள் என்பதே உண்மை...
ஒருசில இடங்களில் இன்னும் நடைமுறையில் இருந்தாலும், இவை தகர்நது போவதற்கான வாயப்புகளை சட்டங்கள் கடுமையாக எடுத்தாள்கின்றன... பால்ய விவாகம்/சிறு வயது திருமணத் தடை சட்டம் நடைமுறையில் உள்ளதால்... இதுபோன்ற பிரச்சினைகள் இனி எழுவதற்கான வாயப்பு 100சதவிகிதம் இருக்காது என கணிக்க வேண்டுகிறேன்...
1980-90களுக்கு பிறகு படித்த ஆண் பெண்கள் இந்த மாதிரியான விசயங்களை அறவே விரும்புவதில்லை... இதை வரவேற்கதக்க ஒன்றாக பார்க்க வேண்டுகிறேன்...
இன்று கம்பளத்து இளைஞர்கள் நாலாபுறமும் நாடு நகரமும் சுற்றி வருவதால்... மூடப் பழக்க வழக்கங்களை முற்றிலும் எதிர்ப்பதால்... பண்பட்ட சமுதாயமாக மாறிக் கொண்டிருப்பதை கவனிக்க முடிகிறது...
ராஜகம்பளத்து மக்களின் கல்வியறிவு என்பது, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாய் வளர்ந்து வருவதால், திருமண முடிவுகள் என்பது பெற்றோர்களின் கையில் இல்லை பிள்ளைகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை...
இனி வருங்காலங்களில் நாம் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் என்னவென்றால் படிச்ச பையனுக்கு படிச்ச பொண்ணுதா வேணும்...வசதி குறைவா இருந்தாலும் பரவாயில்லேனு பார்க்கிற அம்மாக்களும்... பொண்ணை படிக்க வெச்சுட்டேன் அவளை அட்ஜஸ்ட் பன்றமாதிரி படிச்சு வேலையிலே இருக்கற பையனா இருந்தா சொல்லுங்க என்கிற அப்பாக்களும் இருக்கிற உலகமாக ராஜகம்பளத்தார் நவீன உலகில் நடை போடுகிறார்கள் என்றே கருதுகிறேன்...
என்றென்றும் அன்புடன்...
K.N.நாகராஜன்.
கரூர்...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
2. பதில்: ஜெயராமன் -வங்கி அதிகாரி -உடுமலைப்பேட்டை📚✍️🥰
சமுதாயம் பற்றி எல்லோருக்கும் தெரியும்
நமது தொழில் ஆடு மாடுகளை மேய்ப்பது
பண்பாடு எல்லாருக்கும் முந்தயது
ஆனால் தொட்டியராயக்கர் சமுதாயம் என்பதை தாண்டி
தொழில் பண்பாடுகளை காலத்திற்கேற்றார் போல் மாற்றியமைத்துக்கொண்டு பயணித்துக்கொண்டு இருக்கின்றோம்..
இது என் கருத்து..
உங்கள் கருத்திக்கு இந்த குழுவில் விளக்கம் அளிப்பவர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் பதிலை எதிர்பார்ப்போம்...
மேலும் எதற்க்கு இந்த கேள்வி என்பதை தெரிந்துகொள்லலாமா
2. பதில்: சௌந்தர பாண்டியன்
போடிநாயக்கனூர்- வங்கி அதிகாரி (பணி ஓய்வு )🥰📚✍️🤝
கம்பளத்தார் தொழில்
என்ன என்று கேட்டதற்கு எனது பதில்🥰📚✍️
ஆதி காலந்தொட்டு
விவசாயமும் கால்நடை
வளர்ப்பும் காவல் காண்பதும் தான் நம் தொழில். காலமும் சூழ்நிலையும்
மாற மாற கிராமத்தில் இருந்து நகரம் நோக்கி
நகர்ந்து விவசாயம் மறந்து கூலி வேலைக்கும் மிகச்சிலர்
படித்து வேலையில்
இருக்கின்றனர்
இனி நம் தொழில் என்னவாக இருக்க
வேண்டும்.
1.குழந்தைகளை நன்கு
படிக்க வையுங்கள்.
கூடவே நல் ஒழுக்கத்தையும் இறை
பக்தியையும் சொல்லி
வளர்த்துங்கள்.
2.கல்விக்காக உதவிட
பலர் உள்ளனர்
3.சமுதாயத் தலைவர்கள் நம்மவர்களின் தேவை
அறிந்து போட்டித்
தேர்வுகளுக்கு நல்ல
வழிகாட்டி ஆகவும்
கல்விக்கான பலதரப்பட்ட வாய்ப்புகளை எடுத்துச் சொல்லும் பயிற்சியாளர் ஆகவும்
இருக்க வேண்டும்.
4.இட ஓதுக்கீடு கல்வி
உதவித்தொகை உரிய
வகையில் விரைவில்
பெற்றிட வேலை நடந்து
கொண்டுள்ளது.
வரும் காலங்களில்
டெக்னிக்கல் படிப்புகளுக்கு நல்ல
வாய்ப்புள்ளது.
உதாரணமாக ஒரு
நல்ல பிளம்பரை
தேடினால் கிடைப்பதில்லை.
ஆனால் தெருவுக்கு
ஆறு இன்ஜினியர்கள்
இருப்பார்கள் வேலை
இல்லாமலும்
எனவே நாம் தேர்ந்தெடுத்து படிக்கும்
கல்வியும் முக்கியம்.
இதெல்லாம் நடக்கிற
காரியமா என்று பலர் எண்ணலாம்.
எல்லோரும் சேர்ந்து
இழுத்தால் தான் தேர்
நிலைக்கு வரும்
முடியும் என்று நினைத்தால் எதையும்
சாதிக்கலாம்.
அப்படி நடந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் நம்
தொழில் அரசையே
வழி நடத்துவது தான்.
ஆம்..
ஆட்சியாளர்களாக
திட்டங்கள் தீட்டலாம்
அதை செயல்படுத்தும்
அதிகாரிகள் ஆக
நம்மவர்கள் இருந்து
விட்டால்...
நமது தொழில் அரசையே வழி நடத்துவது தானே.
சரி தானே...
நம்பிக்கையுடன்
சௌந்தர பாண்டியன்
போடிநாயக்கனூர்..
நன்றி ..இதுபோன்ற தகவல்களை பரிமாறிக்கொண்டால் கம்பளசமுதாயம் வளர்ச்சிக்கு உதவும் ..
உடுமலை சிவக்குமார் 🥰📚✍️
Comments
Post a Comment