கேள்வி :
அடுக்கு மாடி வீடுகட்கான யு.டி.எஸ்-க்கு தனி தனி பட்டா வாங்க முடியுமா?
அடுக்குமாடிக் கட்டிடமென்றால், அதில்
எந்த
ஒரு
தளத்திலும் (Floor) இருக்கும் ஒவ்வொரு குடியிருப்பு அலகுக்கும் (dwelling unit) அந்த அலகுக்கான சூப்பர் பில்டப் பகுதி
அளவினையும், மனையின் மொத்த
அளவினையும், கட்டிடத்தின் மொத்த
அளவினையும் சூத்திரமாக (Formula) வைத்து, மனைப்பரப்பில் பிரிவு
படாத
உரிமை
அளவு
(Undivided Share in the Plot of Land) கணக்கிடப்படுகிறது.
ஒவ்வோர் அலகுக்கும் தனிப்பட்டா கொடுப்பதில்லை. மேலும்,
அதற்குத் தனிப்பட்டாவும் தேவையில்லை. குடியிருப்பு அலகுக்கான சொத்து
வரி
நிர்ணயிக்கப்பட்டு விட்டால் அதுவே
போதும்.
அனைத்துக் குடியிருப்பு அலகுச்
சொந்தக்காரர்களும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுப் பட்டா
வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
நன்றி ..
Sivakumar.V.K
Home Loan Consultant
Comments
Post a Comment