கேள்வி :
இந்தியாவில் தற்போது புதியதாக தொடங்கி இருக்கும் கலாச்சாரங்கள் என்னென்ன?
என் பதில் :
கன்டென்ட்(Content ) கலாச்சாரம் :
உலகத்த
நாம
தேடித்தேடி பாத்தது போய்,உலகமே நம்பள திரும்பி பாக்குற அளவுக்கு இன்று
விஞ்ஞானமும் தொழிற்நுட்பமும் வளந்துடுச்சு.
இதுல
திறன்பேசி,சமூகவலைத்தளங்களோட பங்கு
மிக
மிக
அதிகம்.
கூட்டத்துல ஒருத்தராக இருந்தது போய்,நம்மளையும் நாலு பேரு கவனிக்கணும் என்ற
எண்ணம்
நம்ம
எல்லார்க்குள்ளேயும் வந்துடுச்சு.என்ன,இதற்கான அளவுகோல் தான் மாறுபடும்.
வாட்ஸ்சப்ல ஸ்டேட்டஸ் வைக்கிறதுல ஆரம்பிச்சு டிக்
டோக்
போன்ற
செயலிகளில் ஆடுறவரைக்கும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நிலைல
இருக்கோம்.
பலர்,
நமக்கான கூட்டத்தை கூட்டுற அளவுக்கு நாம
மாறனும்.அதற்கான வெளிச்சம் தேவைனு
தங்களோட சுயமரியாதையை கூட
இழக்க
தயாராகி கண்டதையும் வீடியோவா எடுத்து போடுறாங்க.
அவங்களுக்கு முக்கியமா மூணு
தான்
தேவை.
1) மறக்காம
லைக் பண்ணுங்க
2) ஷேர் பண்ணுங்க
3)கீழ இருக்குற
பெல் ஐகானை கிளிக் பண்ணி subscribe பண்ணுங்க.
இந்த
மூணு
கிடைக்க அவங்க
எந்த
எல்லைக்கும் போக
தயார்.
Bed ரூம் டூர்,பாத்ரூம் டூர்,கிட்சன் டூர்னு
இந்த
மாதிரி
வீட்டுக்குள்ளயே டூர்
போற
குரூப்
ஒரு
பக்கம்.
தங்கள
தாங்களே தரம்
தாழ்த்தி மூஞ்சு
முழுக்க பவுடர்
அப்பிட்டு,காய்கறியை சுத்திகிட்டு,ஆண்கள்
பெண்கள் உடைகளை
அணிந்து என
கோமாளி
மாதிரி
ஆடுற
கூட்டம் ஒரு
பக்கம்.
மாலையும் கழுத்துமாக வேறொரு
பெண்ணை
வீட்டிற்கு அழைத்து வந்து
இரண்டாம் திருமணம் செய்ததாக கணவர்
செய்யும் பிராங்க்,கர்ப்பமாக இருப்பதாக அம்மாவை பிராங்க் செய்யும் பெண்கள்,குடித்துவிட்டு அம்மாவிடம் அலப்பறை செய்யும் மகன்கள் பிராங்க்,காதலியுடன் பிராங்க்,Kiss பிராங்க்,Hug பிராங்க் இப்படி
எதற்கெடுத்தாலும் பிராங்க் என
இது
ஒரு
பக்கம்.
இன்னும் சிலர்
உயிரை
பணையம்
வைத்து
செய்யும் ரிஸ்க்கான வீடியோக்கள்.
இப்படி,பாக்குற எல்லாத்தையும்
கன்டென்ட்டா எப்படி
மாத்தலாம் என
யோசிச்சு யோசிச்சு இன்னைக்கு நாலு
சுவற்றுக்குள்ள நடக்கவேண்டிய பல
விஷயங்களை வீடியோவா எடுத்து போட்டு
தாங்களே தங்களை
தரம்
தாழ்த்திகிறோம்னு புரிதல் இல்லாமல்,கேவலம்
கிடைக்கிற லைக்ஸ்
வ்யூஸ்க்காக தரைமட்ட லெவெலுக்கு இறங்கி
செய்யுறாங்க.
இந்த
புகழ்
போதைக்கு மக்களும் அடிமைகளாகி மனநிலை
ரீதியாக மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
இந்த
கலாச்சாரம் இருக்க
இருக்க
இன்னும் படுகேவலமாக செல்வது தான்
வேதனைக்குரியது.
நன்றி ....
Comments
Post a Comment