சமுதாயப் பற்று இருக்க வேண்டும் சமுதாயத்தை காக்க வேண்டும் என்று வெறும் பதிவுகள் போடுபவர்களுக்குச் சமர்ப்பனம் ..
சமுதாயப் பற்று இருக்க வேண்டும் சமுதாயத்தை காக்க வேண்டும் என்று வெறும் பதிவுகள் போடுபவர்களுக்குச் சமர்ப்பனம் .....
இதுவரையிலும் நமது சமுதாயத்தைச் சார்ந்த 11 பேர் வெவ்வேறு வங்கிகளில் அரசு பணிக்கு இணையான சம்பளம் பெற்று அதன் மூலம் தனது முன்னேற்றம் தனது குடும்ப முன்னேற்றத்தின் மூலம் நல்லதொரு நிலையில் பயணிக்கிறார்கள்
அதில் 4 பேர் வங்கி மேலாளர்களாகவும் 2பேர்துனை மேளாலர்களாகவும் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர்
அது போக இன்னும் நிறைய நமது இளைஞர்களை அவர்கள் முன்னேற்றதிற்காக வழிநடத்திகொண்டிருக்கிறார், பிற சமுதாயத்தினருடன் பழகுவது அதன் மூலம் நமது சமுதாய இளைஞர்களுக்கு உதவுவது என்று எல்லா வகையிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் உடுமலை சிவக்குமார் அவர்கள்..
இதுதான் உன்மையான சமுதாய பற்று சமுதாய அக்கரை ஆகும்
சமுதாய முன்னேற்றம் முன்னேற்றம் என்று மைக்கை பிடித்துக்கொண்டு கத்தினால் முன்னேற்றம் வந்துவிடாது அதற்கான அடித்தளம் என்ன என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படுதல் வேண்டும்
இன்றும் நமது சமுதாயத்தில் எத்தனையோ பேர் அரசு பணி தனியார் துறைகளில் பணியாற்றிகொண்டிருக்கிறார்கள்
ஓய்வு பெற்றிருக்கிறார்கள் ஆனால் நமது சமுதாய இளைஞர்களும் நம்மைப்போல பயன்பெற வேண்டும் என்று யாராவது வழிகாட்டியிருக்கிரார்களா???
அரசு தனியார் வேலை வாய்புகள் பற்றிய விழிப்புணர்வு மேல்படிப்புகள் படிப்பதற்க்கான விழிப்புணர்வு என்பதை பற்றி போதிக்க நமது அமைப்புகளிடம் இதுவரை ஏதாவது ஒரு திட்டம் இருக்கிறதா,ஒன்றும் கிடையாது அப்படியே இருந்தாலும் அதில் யாரும் பயன் பெற்றிருக்க மாட்டார்கள், தனிமனிதனாக 11பேரை வழிநடத்தி நல்வழிகாட்டியிக்கிறார் உடுமலை சிவக்குமார் ஆனால் நாம் சமுதாய அமைப்பாக இருந்து எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கல்வியில் வழிகாட்டியிருக்கிறோம்
உங்களால் நான் நல்ல நிலமையில் இருக்கிறேன் நீங்கள் இல்லையென்றால் நான் நிச்சயமாக இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டேன் என்று ஒருவர் அவரை பாரத்து சொல்கிறார் என்றால் அதுதான் சமுதாயப்பற்றே தவிற மற்ற எதுவும் கிடையாது..
நான் மீண்டும் பதிவிடுவது ஒன்றே ஒன்றுதான் நீங்கள் தனிமனிதனாக முன்னேறுங்கள் அதன் மூலம் வாழ்வில் உயருங்கள் சமுதாயம் தானாக முன்னேறும்
கல்வி முன்றேற்றமே சமுதாய முன்னேற்றம்...🎙️📚📚📚✍️✍️✍️🌈Jayaraman Thangavel🏡🚗🌱🌷💦⛈️

Comments
Post a Comment