கேள்வி : மேஸ்திரி vs இன்ஜினீயர்,
இருவரில் யாரை வைத்து வீடுகட்டுவது சிறந்தது ?
நீண்ட
நாட்களாக .. அடிக்கடி என்னிடம் நிறையபேர் கேக்கும் கேள்வி
இது
இன்னைக்கு இதுக்கு விளக்கமா ஒரு
பதிலை
சொல்றேன்.
இப்போ
..மேஸ்திரி அப்றம்
இன்ஜினீயர் ,இவங்க
ரெண்டுபேரோட வேலை
மற்றும் அனுபவத்தை பொறுத்து தான்
இதுல
யாரு
சிறப்பா வேலைசெய்வாங்கனு முடிவு
செய்யமுடியும்..
மேஸ்திரி பொறுத்தவரைக்கும் நீண்ட
நாள்
அனுபவம் மட்டுமே தான்
அவங்களுக்கு தொழில்
சார்ந்த அறிவை
வழங்கியிருக்கும் .அவங்க
பெரும்பாலும் பழைய
கட்டுமான முறைகளையோ அல்லது
டிசைன்
வேலைப்பாடுகளையோதான் நல்லா
தெரிஞ்சுவச்சுருப்பாங்க .புதுசா
ஒரு
டிசைன்
கொடுத்து இதயே
அப்படியே செய்யுங்கன்னு சொன்னா
,கண்டிப்பா ஒரு
என்ஜினீயர் உதவி
இல்லாம
அவங்களால செய்யமுடியாது .
மேலும்
அவங்க
எல்லாஇடத்துக்கும் ஒரேமாதிரியான கணக்கீடு முறைகளை பின்பற்றுவாங்க ..அது
பெரும்பாலான இடங்களில் சரியாய் அமைஞ்சாலும் ..கொஞ்சம் சிக்கலான இடங்களுக்கு வரும்போது கண்டிப்பா அது
பிரச்னையா முடிஞ்சுருது.
உதாரணத்திற்கு.. 10 அடிக்கு ஒரு
பில்லர் போடணும் என்பது
ஒரு
மனக்கணக்கு.. அதுவே
ஒரு
16 x 16 ரூம்
எடுத்துகிட்டோம்னா ..அதுல
நடுவுல
பில்லர் வராம
டிசைன்
பண்ணி
போடணும்னு வரப்போ..
அவங்களோட கணக்கு
தப்பாகிறது.. இதைவிட
முக்கியமானது கம்பிபோட்ற விசயத்துல இவங்க
செய்யுற தவறுகள் ரெம்பவே அதிகம்
..
நான்
நேரடியாவே நிறைய
வீடுகளில் பார்த்தது.. ஜன்னல்
Sunshadeகளில்
கம்பியை அடிப்பக்கம் போட்ருப்பாங்க ..இப்படி
போடக்கூடாது இது
தவறுன்னு சொன்னால்.. இல்லை
நாங்க
இதுவரை
இப்படித்தான் கட்டிருக்கேன் ..ஒன்னும் ஆனதுஇல்லைனு தர்க்கம் பண்ணுவாங்க.. உண்மையில் அது
உடைந்துவிழாம நிற்பதற்கு காரணம்
அந்த
பொருட்களின் Factor of Safety மட்டும்தான் ..ஆனால்
அதுவும் நீண்ட
காலம்
தாக்குபிடிக்காது ..அதுனாலதான் கிராமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளின் Sunshade மட்டும் அடிஅக்டி பெயர்ந்து விழுந்துகிட்டே இருக்கும் ..
இப்படி
மேஸ்திரிகள் செய்யும் தவறுகள் அதிகம்
..அதுக்காக இன்ஜினீயர் செய்யுற எல்லாமே சரினு
சொல்லலை ..ரெண்டுபேருக்குமே அனுபவமும் கட்டுமானத்துறை பற்றிய
போதிய
படிப்பறிவும் ரெம்பவே முக்கியம்.
சின்னதா 15 லட்சத்துக்குள்ள ஒரு
வீடுகட்டப்போறேன் அதுல
பெரிசா
எந்தவேலைப்பாடுகளும் இல்லையின்னா ..தாராளமா நீங்க
மேஸ்திரிய வச்சே
வீடுகட்டிக்கோங்க அதில்
எந்த
பிரச்னையும் இல்லை
..அதுவே
20 லட்சத்துக்கு மேல
செலவுபண்ணி வீடுக்கற்றதா இருந்தால் ..கண்டிப்பா ஒரு
என்ஜினீயர் வச்சு
ஆலோசனை
பண்ணி
வீடுகட்டுவது சிறந்தது .
நன்றி ..கனவு இல்லம் நிறைவேற ...
சிவக்குமார் .VK
Comments
Post a Comment