RERA பதிவு அவசியமும், சரிபார்த்தலும்... மனை, வீடு வாங்குவோர் கவனத்துக்கு!
நம் மொத்த வாழ்க்கையிலும் சொத்து வாங்குதல் மிக முக்கியமான விஷயம் என்பதால் அது நிலமோ, ஃபிளாட்டோ, செகண்ட் ஹேண்ட் ஃபிளாட்டோ எது வாங்கினாலும், ஏமாறாமல் இருக்க எதிலெல்லாம் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
500
சதுர
மீட்டருக்கு மேலே
இருக்கிற இடமோ,
எட்டு
வீடுகளுக்கு மேலே
இருக்கிற குடியிருப்போ... எதுவென்றாலும், அந்தத்
திட்டங்களை ரியல்
எஸ்டேட் ரெகுலேட்டரி அத்தாரிட்டியில் (RERA) கண்டிப்பாக ரிஜிஸ்டர் செய்திருக்க வேண்டும். வீடு
கட்டித் தரும்
பில்டர்களிடம் அப்ரூவ்டு
பிளான்
இருக்கிறதா என்று
கேட்டு,
சரிபார்க்க வேண்டும்.
வீட்டுமனை லே
அவுட்டில் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள் என்பார்கள். எங்கு
அங்கீகரிக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட மாட்டார்கள். பஞ்சாயத்து அப்ரூவலா, டி.டி.சி.பி
அப்ரூவலா அல்லது
சி.எம்.டி.ஏ
அப்ரூவலா என
விவரமாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
வீடு
பஞ்சாயத்து அப்ரூவல் மனை,
ஏற்கெனவே பதிவு
செய்த
மனையை
இப்போது விற்கிறோம் என்றால் வாங்காதீர்கள். வீடு
கட்டப்
போகும்போது நீங்கள் அதிக
செலவு
செய்து,
டி.டிசி.பி அல்லது
சி.எம்.டி.ஏ
அப்ரூவல் வாங்க
வேண்டியிருக்கும்.
மனை
விற்பனை விளம்பரங்களில் ரெரா
ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர்
குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அந்த
ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரில் அவர்கள் குறிப்பிட்டிருக்கிற வீடு
கட்டும் திட்டம்தான் நடந்துகொண்டிருக்க வேண்டும்.
ஒருவேளை, திட்டத்தில் மனைகள்
விற்பதற்கு மட்டும் அப்ரூவல் கொடுத்திருக்க, பில்டர் அந்த
இடத்தில் வீடு
கட்டிக்கொண்டிருந்தால், அந்த
பில்டரை நீங்கள் நம்பக்கூடாது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
மனை
விற்பனைக்கான அல்லது
வீடு
விற்பனைக்கான விளம்பரத்தைப் பார்த்தீர்கள் என்றால், ரெராவின் வெப்சைட்டுக்குள் சென்று,
நீங்கள் வாங்க
விரும்புகிற இடம்
ரெராவில் ரிஜிஸ்டர் ஆகியிருக்கிறதா, அந்தக்
குறிப்பிட்ட புராஜெக்டுக்கான இடம்தான் விளம்பரத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா, ரெரா
வெப்சைட்டில் இருக்கிற இடமும்
விளம்பரத்தில் குறிப்பிட்டிருக்கிற இடமும்
ஒன்றுதானா என
சரிபார்க்க வேண்டும். ரிஜிஸ்ட்ரேஷன் ஒரு
முகவரியிலும், புராஜெக்ட் நடப்பது (அடுக்குமாடி கட்டுவது) வேறு
முகவரியிலும் என்றால், தவறு
நடந்து
கொண்டிருக்கிறது என்று
அர்த்தம்.
குறிப்பிட்ட திட்டத்துக்கு ரெராவில் 10 மாடி
வரை
மட்டுமே கட்டுவதற்கு அப்ரூவல் கொடுத்திருக்க, பில்டர் 15 மாடி
கட்டுவதாக விளம்பரம் கொடுத்தால் உஷாராகிவிடுங்கள். இத்தனை
விவரங்களும் சரியாக
இருந்தால்தான், அந்தச்
சொத்தை
சிக்கல் இல்லாமல் வாங்கும் நிலைக்கு வந்திருக்கிறீர்கள் என்று
அர்த்தம்.
வீடு
மேலும்,
ரெரா
வெப்சைட்டில் உங்களுக்கு வீடு
கட்டித் தரவிருக்கிற பில்டர் மீது
ஏதாவது
புகார்
இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.
-
நம்
மொத்த
வாழ்க்கையிலும் சொத்து
வாங்குதல் மிக
முக்கியமான விஷயம்
என்பதால் அது
நிலமோ,
ஃபிளாட்டோ, செகண்ட் ஹேண்ட்
ஃபிளாட்டோ எது
வாங்கினாலும், ஏமாறாமல் இருக்க
எதிலெல்லாம் நாம்
கவனமாக
இருக்க
வேண்டும் என்பதை
அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி விகடன் ....
Comments
Post a Comment