வீட்டுக்கடன் / இடம் வாங்க ஆலோசனை
வீடு வாங்க/கட்ட, ஃப்ளாட் வாங்க: தேவையான ஆவணங்கள்....
மனைப் பத்திரம்:
உங்களோட மனையை, சார் பதிவாளர் அலுவலகத்துல பதிவு செய்து வாங்குன பத்திரம்.
தாய்ப் பத்திரம்:
இப்போ இருக்குறதுக்கும் முந்தைய மனை பத்திரம்.
வில்லங்கச் சான்றிதழ்:
இன்னைய நிலைமையில மனை உங்களு க்குதான் சொந்தம்ங்குற தை உறுதிப்படுத் துற சான்றிதழ் இது. சார் பதிவாளர் அலுவலகத்துல விண்ணப்பிச்சு வாங்கணும். 32 வருஷ த்துக்கும் இந்த வில்லங்கச் சான்றிதழை வாங்கி வைச்சுக்குறது நல்லது.
(லீகல் ஒப்பீனியன்):
இது வக்கீல்கிட்ட வாங்கவேண்டிய சான்றிதழ். இதை வாங்குறது க்கு, மனை பத்திரம், ஒரிஜினல் வில்லங்க ச் சான்றிதழ், தாய்பத்திரத்தோட ஜெரா க்ஸ், அப்ரூவ்டு மனையா இருந்தா அதுக்கான லே- அவுட் வரைபடம்.. எல்லாத் தையும் கொடுக்கணும்.
மனை விலை மதிப்பீடு அறிக்கை:
நீங்க வீடு கட்டப்போற மனையோட சந்தை மதிப்பு என்ன, அரசு வழிகாட்டி மதிப்பு எவ் வளவு, இந்த ரெண்டின் சராசரி என்ன.. இதையெல்லாம் கணக்குப் பண்ணி, அங்கீகாரம் பெற்ற இன்ஜினீ யர் ஒருத்தர் கொடுக்குற ரிப்போர்ட் இது.
அங்கீகரிக்கப்பட்ட பிளான்:
மாநகராட்சி/ நகராட்சி மாதிரியான உள்ளாட்சி அமைப்புகிட்ட வாங்க வேண்டிய கட்டட பிளான். கடன் வாங்கி வீடு கட்டுறதா இருந்தா முதல் லயே பிளான் போட்டு, உள்ளாட்சி அமை ப்புகிட்ட அப்ரூவலுக்கு விண்ணப்பிச் சா… சீக்கிரம் வீட்டு வேலையை ஆரம்பி ச்சிடலாம்.
கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு:
புதுசா வீடு கட்டுறதா இருந்தா அதுக்கான செலவு விவரங்கள்பத்தி விவரமா இன்ஜினீயர் தர்ற அறிக்கை. ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுன்னா, அதை மதிப்பிட்டு இன்ஜினீயர் தரும் ரிப்போர்ட்..
சிவக்குமார் VK
Sivakumar.V.K
Home Loan Consultant
(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell)
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com
Comments
Post a Comment