கூக்கால்- குமணன் கல் - இரண்டு ஆண்டு திட்டமிட்டு ஒரே நாளில் நடைமுறைப்படுத்திய கொடைக்கானல் பயணம்.
கூக்கால்- குமணன் கல் - இரண்டு ஆண்டு திட்டமிட்டு ஒரே நாளில் நடைமுறைப்படுத்திய கொடைக்கானல் பயணம்.
17.09.2023 தந்தை பெரியார் பிறந்த நாளில் காலையில் டெய்லர் மூர்த்தி வீடு திருமணத்திற்காக காலையில் ஆறு மணிக்கு எழுந்து வீட்டுக்காரம்மாவையும் எழுப்பிவிட்டு ஐந்து மணி முதல் கிளப்பி, கிளம்பி 6.45 க்கு குரல்குட்டை பயணமாகும்போது மதி சார் அழைப்பு, சார் வீடு எங்க சார் இருக்குது, சரிதான், ராஜசுந்தரம் புதுமனை புகுவிழா நேற்று இரவு வராமல் இப்பொழுதுதான் காலையில் வந்துள்ளார். நேற்று மாலை கூப்பிடாதது என் தவறுதான். சரி , குரல்குட்டை திருமணத்திற்குப் போய்விட்டு மீண்டும் சி.என்.ஆர் மண்டபம் சென்று சாப்பிடுவதற்கு முன்பு வீட்டிற்கு வந்து மாத்திரை போட்டுக்கொண்டு மாமனாருடன் பாலன் வண்டி ஓட்ட சி.என்.ஆர் மண்டபம் சென்று சாப்பிட்டேன். சாப்பிடுவதற்குக் கூட்டம் இல்லாவிட்டாலும் அந்த பந்தியில் இடம் இல்லாமல் அடுத்த பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டு மண்டபத்திற்குள் வந்து உட்கார்ந்து 10,15 நிமிடம் கழித்து மாத்திரை சாப்பிட்ட பிறகு இன்று என்ன பணி என யோசனை செய்து கொண்டிருந்த போது சரிதான், ஏற்கனவே சிவா கொடுத்த கல்வெட்டு செய்தியை நந்தகுமார் சரி பார்த்து அனுப்பியது நினைவிருந்தது. சரி மதியத்திற்கு மேல் அங்கு சென்று வரலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கும்போது மணி 8.45 இனியும் என்ன செய்ய, அருகே இரு உறவினர்களிடம் பேசிவிட்டுத் திரும்ப மணி 9 மணி வீட்டம்மா தொலைபேசி, சரி வீட்டுக்கு போகலாம், வேண்டாம் 10 மணிக்கு மேல் ரிசப்சன். சுரி . . என்ன செய்ய மண்டபத்திற்குள்ளிருந்து வெளியில் வரும் போது இந்த மண்டபத்திற்குள் ஏற்கனN பட்டிமன்றப் பேச்சாளர் கு. ஞானசம்பந்தம் அவர்களுக்கு உடுமலை வரலாறு நூல் கொடுத்தது நினைவில் வந்து சென்றது.
காலைத் திருமண நிகழ்வு
மண்டபத்தின் கிழக்குப் பகுதியில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக அலைய உட்கார முடியவில்லை. சரி என்று காரில் வீட்டுக்கு பாலன் கொண்டு விடச்சொல்லி பிறகு கடைக்கு வந்துவிட்டேன். ஏற்கனவே பாத்துக்கொண்டிருந்த கரைவளி நாடு புத்தகம் திருத்தம் பார்க்க, முனிசின் அழைப்பு, எத்தiனை மணிக்கு வர்ரீங்க, மதியத்திற்குமேல் சிவா வந்தவுடன் என்று சொல்லி பேசிவிட்டு கணினிக்குள் நுழைய, மணி 11, 12, 1, 1.15 க்கு சிவாவின் வருகை, என்ன செய்யலாம் தோழர், போலாமா, சரி முனிசிடம் 2.15 க்கு பெரியபாப்பனூத்து பிரிவு வரச்சொல்லிவிட்டு ஆரியபவன் சென்று ஒரு சாதம் சாப்பிட்டுவிட்டு கிளம்பலாம் என்று ஆரியபவன் செல்ல, அங்கு திருமணக் கூட்டம் நிரம்ப இருந்தது. சரி போய்ப் பார்க்கலாம் என்று உள்நுழைந்து இருக்கையில் அமர்ந்து தயிர்சாதம், தயிர்வடை சரிதான் சாப்பிடும் போது வீட்டுக்காரம்மா தொலைபேசி சிவா சார் மண்டபத்திற்கு வர்ரேன் சொன்னாரம்மா , நீங்களும் வந்து சாப்பிட்டுப்போயிட்றீங்க, இங்க நாங்க ஆரியபவன் சாப்பிட்டாச்சு, அவ்வளவுதான், அடுத்து, பில் 83 கொடுத்துவிட்டு வெளியில் வந்து வாகனத்தை எடுத்துக்கொண்டு பொள்ளாச்சி சாலையில் செல்லும்போது முனிஸ் அழைப்பு ரயில்வே கேட் என்று சிவா சொல்ல, கிளம்பும் போது சொல்லச் சொன்னேன்னு என்று முனிஸ் பதில் சரி கடந்தோம். மணி 2.20 பெரிய பாப்பனூத்து பிரிவில் முனிசிடன் கல்வெட்டு இருக்கும் இடத்திற்குச் சென்றோம். அப்போதுதான் தெரிந்தது அது இருக்கும் சிஞ்சுவாடி. ஆம் ஏற்கனவே பல முறை சென்றிருக்கிறோம். பெரிய வீரகம்பம் , மாலைகோயிவ் அதனைச் சுற்றி கல்கட்டுகள் நினைவுக்கு வந்து சென்றது. சரி எந்த வழி என்று பேசும்முன் முனிசின் வாகனம் முன்னே செல்ல, நாங்களும் பின்னே சென்றோம், பெரிய பாப்பனூத்து செல்லும் முன் ஏற்கனவே பதிவு செய்த கற்திட்டை, அக்ரி பாரதியும் நினைவுக்கு வந்து சென்றனர். நான் நினைத்த மாதிரியே சிவாவும் அந்த ஆள் ஒரு ஸ்பைதான் தோழர் என்று சொல்லும் போது மீண்டும் மீண்டும் நம்மை சரிப்படுத்திக்கொள்ள தோன்றியது.
பெரியபாப்பனூத்து சிஞ்சுவாடி களப்பயணம்
அதற்குப்பிறகு அந்த நிகழ்வுக்கு பிறகு அவ்வளவுதான் ஓடியேவிட்டார் என்ன காரணம் என்று தெரியவில்லை. அதற்குப்பிறகு அவர் பேசவும் இல்லை இதிலிருந்து அவரின் பொய்யான முகம் வெளிக்கு வந்துவிட்டதாகக் கொள்வோம். இதைப்பேசிக்கொண்டிருக்கும் போது பெ.பாப்பனூத்து தாண்டிவிட்டோம். அடுத்து விளாமரத்துப்பட்டி சென்று கொண்டிருக்கும் போதே முனிசின் வாகனத்தை முந்திச்செல்ல, சிவா, இப்ப நாமென்ன ரேசுக்கா போறோம், மெதுவாப் போங்க என்று சொல்ல, இரு புறமும் அடர்;ந்த தென்னை மரங்கள், இது ஒரு காலத்தில் நீர்வழியாக இருந்ததும், பிற்பாடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதைப் பேசிக்கொண்டே சென்றோம். ஏன், தோழர் இவ்வளவு பெரிய நீர் வழிப்பாதை இருந்திருக்குது எல்லாரும் ஆக்கிரமிச்சிட்டாங்க, இப்பவ இப்படின்னா முதல்ல எப்படி இருந்திருக்கும், இங்க பாருங்க எவ்வளவு பெரிய பள்ளம், பக்கத்திலதான் பெரிய வாய்க்கால், போன வருசம் மழை ஏமாத்திருச்சு, கேரளா மழை இல்ல, அதனால மரமெல்லாம் காஞ்சு போச்சு, என்று தன் ஆதங்கத்தைச் சொல்லிக்கொண்டிருக்கு வண்டி விளாமரத்துப்பட்டி தாண்டி மேடேறிவிட்டது. இங்கு பாருங்க தோழர் இங்கேயு சைட் போட்டானுங்க, இதெல்லாம் விற்குமா? தோட்டத்தை அழிச்சு சைட் போட்டிருக்காங்க என்று பல்வேறு தரவுகளுடன் பேசும் போது வாகனம் அடுத்த சாலையை நோக்கி நின்றது. அங்க போய் நிழல்ல நிறுத்துங்க, வெயில்ல நா நின்னு கருத்துப்போயிருவேன்னு என்று கிண்டலும் நையாண்டியுமாக சொல்ல வாகனம் பேருந்து நிறுத்தத்தில் நிற்க, இன்னா முனிஸ் காணோம், தெற்கயா, வடக்கயா, என்று பேசிக்கொண்டிருக்கும் போதே முனிஸ் வாகனம் வந்து கொண்டிருந்தது.
சிஞ்சுவாடி களப்பயணம்
வலது பக்கம் சிக்னல் போடவே, சரி இப்படிப் போயிருவோம் என்று குண்டலப்பட்டி, தாண்டி,பெட்ரோல் பங்க் தாண்டி சிஞ்சுவாடி நோக்கி வாகனம் சென்றது. சரி இந்த லெப்ட் போலாமல்ல, எனக்கேட்க, அவரு ஒரு புதுவழியில போறாரு நீங்களும் போங்க, என்னங்க சார் நாமதான் இந்தவழியிலே போயிருக்கோமல்ல, என்று பேசிக்கொண்டே முனிசின் வாகனத்தின் பின்னால் தென்னந்தோப்பு மறைந்து, அடுத்த சாலையில் வாகனம் சென்று கொண்டிருந்தது. ஆம், சாலைக்குள் சாலையில் செல்கிறோம் என்பதைக் காட்டிலும் காடுகளுக்குள், தென்னந்தோப்புகளுக்குள்ளும் தென்னை மரங்களுக்கிடையிலும் செல்கிறோம் என்று சொன்னால் சரியாக இருக்கும். அவ்வளவு அடர்ந்த தென்னை மரங்கள். சரி, சிஞ்சுவாடி நோக்கி வாகனம் முன்னோக்கி சென்றது. முனிசின் வாகனம் தற்போது எங்களுக்குப்பின்னால், சரிதா . .இந்தப்பாதை வந்திருக்கோம் இங்க பாருங்க கேரளா ஸ்டைல் ஒரு வீடு என்று சொல்லச்சசொல்ல வாகனம் வலது பக்கம் ஏறிச் சென்றது. உடனே முனிஸ் சிவா வண்டியில பாத்து உட்காருங்க, நிலைமை சரியில்ல என்று சொல்ல, திருப்பத்தில் திரும்பி சிஞ்சுவாடி ஊருக்கு வாகனம் சென்றது. ஊரின் கடைசி வலது பக்கத்தில் பழுதடைந்த சாலையில் சென்று சிஞ்சுவாடி கோயில் முன்பு வாகனம் நிற்க.
சிஞ்சுவாடி கோயில்
மரங்களும், சுற்றி கற்களும் இயற்கையாக அமைந்த தோற்றம் தற்போது மாற்றம் பெற்று கட்டிடத்திற்குள் வீரகம்பம் சென்று விட்டது. வெளியிலிருந்த நடுகற்களைக் காணவில்லை. அதன் வலப்புறம் சிதிலமடைந்து கற்கள், அதில் இரண்டு கற்கள் மட்டும் தெரிந்தது. ஏற்கனவே நான்கு கற்கள் அனுப்பயிருந்தார்கள். சரி .இரண்டை பேசி ஆவணப்படுத்திவிட்டு கிளம்பலாம் என்றிருக்க. ஆமா சார் நாளைக்கு என்ன செய்ய, சிவாவிடம் கேட்க, எனக்கு ரெண்டு டாக்குமென்ட் வாங்கணும் அதற்குப்பிறகுதான் எல்லாமே என்று வழக்கமான டையலாக். சரிங்க முனிஸ் சொல்லுங்க என்று கேட்க, நீங்க சொல்லுங்க போகலாம். நான் ரெடி என்று சொன்னதும், கடந்த மூன்றாண்டு களாகவே மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்த குமணன், கூக்கால், பூம்பாறை கோயில் 'சரி நாளைக்கு கொடைக்கானால் போலாமா, என்று கேட்க சிவாவும் சரி, ஆனால் வாகனம் ஓட்டமாட்டேன் என்று செர்ன்னவுடன் சரி பாலனை அழைக்க அவனும் பேசி எடுக்கவில்லை. இதற்கு முன்னமே கல்வெட்டுகள் சார்ந்த காணொளிப்பதிவு, கோயில் சார்ந்த காணொளிப்பதிவுகள் முடிந்துவிட்டது.
மீண்டும் பாலனே அழைக்க என்ன மாமா எனக்கேட்க நானும் நாளை கொடைக்கானல் போகலாமா எனக்கேட்க அவனும் சரியென்றான். அப்பொழுது முதல் குமணன் சார்ந்தும் கூக்கால் சார்ந்தும் பூம்பாறை சார்ந்த எண்ணங்கள் ஓட ஆரம்பித்தது. அதற்குமேல் அங்கிருந்து கிளம்பி, லட்சுமாபுரம் வந்து ஒரு வரக்காபி, குடித்துவிட்டு மீண்டும் பெரியபாப்பனூத்து வந்து கற்திட்டையுடன் காணொளி, முனிசுடன் ரெண்டு, தனியாக ஒண்ணு எடுத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பினோம். பாப்பனூத்து பிரிவில் சரிங்கய்யா நாளைக்கு போலாம் தயாராக இருங்க என்று சொல்லி கடைக்கு வந்து பதிவுகள் போடும் முன்பே இன்னைக்கு திரைப்படத்திற்கு போகலாம். கடைசியாக ஜெயிலர் பார்த்தது மூன்று வாரங்களுக்கு முன்பு சரி எதற்கு போலாம் குஷி போலாம் என சிவா சொல்ல, ஜவான் போலாம் என்று சொல்ல சிவாவும் சரியென நேரே லதாங்கி அங்கு கூட்டம், டிக்கட் கவுண்டர் விளக்கு எரியவில்லை. சரி இன்னமும் டிக்கட் கொடுக்கவில்லை எனக்கேட்க, இல்லீங்க டிக்கட் முடிஞ்சது, அடப்பாவி. 14 நாளா இந்தப்படம் ஓடுதா? சுரிதான் அனுசம் போலாம் என்று அங்கு செல்ல, அங்கும் ஜவான், தோழர் நீங்க நெனச்ச மாதிரியே ஜவானுக்கு வந்துட்டோம்.
சரி, சிவா போய் வர செலவு 4, 5 ஆகும் எனச்சொல்ல நான் ஆயிரம் தருகிறேன் என்று அப்பவே சொல்லிவிட்டார். சரி இரவு வரைக்கும் அந்த அம்மா கூப்பிடுதான்னு பாப்போம் இல்லையென்றால் வேறு வகை செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே சிஞ்சுவாடிக்கான பதிவைத் தட்டச்சு செய்துவிட்டு படத்திற்கு சென்றுவிட்டோம்.
திரையரங்கினுள் அமர்ந்தவுடன் திடிரென பழைய படி ஆரோ, அந்த பழைய கிறு கிறுப்பின் தொடக்கம் வாய் வறண்டது, தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. கட்டுப்படுத்த இயலவில்லை. என்னவென்று யோசிக்க காலையில் சரியான சாப்பாடு மதியம் ஒரு தயிர் சாதம் இடையில் எதுவும் தண்ணீர் கூட குடிக்கவில்லை. சரி, சிவாவிடம் சொல்ல உடனடியாக தண்ணீர் பாட்டல் வாங்கிக்கொடுத்தார். முன்பே சிப்ஸ் வாங்கி வைத்திருந்தோம். சிவா அதைச் சாப்பிடச்சொன்னார். சிப்சிடன் தண்ணீர் குடிக்க சரியானது. வயிறு பெருமளவு காலியாக இருந்தால் இந்தக் கிறுகிறுப்பு (ஆரோ) வருகிறது. இது தொடர்ந்து நான்காவது முறை,
ஜவான் ஜெயிலர்
படம் ஜெயிலர் போன்றே இருக்கிறது. ஷாருக்கான் இந்திப்படவுலகில் நட்சத்திர நாயகன். ஏராளமான படங்கள். முகத்தில் முதிர்ச்சி, இளமை தெரியவில்லை. அட்லி இயக்கம். பழையகள், புதிய மொந்தை. சுரி மூன்று மணி நேரம் டைம் பாஸ். வெளியே வந்தோம். கடைக்கு வந்து நாளைக்கு காலையில் 4.30 என ஏற்கனவே மாலையில் பேசியிருந்தோம். முனிசும் வீட்டுக்கு வந்துவிடுவதாகச் சொன்னார். சரி காலையில் 4.30 பாலனிடமும் சொல்லியாகிவிட்டது. வீட்டில் உணவு கேட்க செய்து தர இயலாதெனக் கூறிவிட்டார் வீட்டம்மா, மாலையில் கொமரலிங்கம் கிருஷ்ணமூர்த்தி அவர்களைக் கேட்க அவரும் இயலாதெனக்கூறிவிட்டார். சரி. இரவு வீட்டுக்குச் சென்று தமிழ் மாறனை அழைக்க அவர் வங்கி விடுமுறை தாம் வருவதாகச் சொன்னார். சரி வாகனம் நிரம்பிவிட்டது. இருபதாண்டு தோழர், நல்ல நெருக்கமான நண்பர். காலை 6 மணிக்கு சிற்றுண்டி தயாராக வாங்கி வச்சிருக்கேன். இல்லென்னா இங்கேயு சாப்பிட்டுப் போயிட்ரலாமா சரி என்று சொல்லிவிட்டு இரவு 9.30 க்கு உறுதி செய்துவிட்டு வீட்டில் மீண்டும் கேட்க தன்னால் வரஇயலாது நீ இவ்வளவு வயசானதப்புறமும் இந்த மாதிரி ஊர் சுத்தறது சரியான்னு திட்டிக்கொண்டே, சரி எப்படியோ காலம் போயிடுச்சும், கல்யாணமாயி 23 வருசமாகியும் இன்னும் முழுமையாகப் புரிதலில் இல்லை.
கனவுலகில் கொடைக்கானல்
சரி கோயிலுக்குப் போறீங்க, வீட்டையெல்லாம் தண்ணீர் தொட்டு சுத்தம் செய்து விட்டு தூங்கப்போய்விட்டார். சரி காலை 4 மணிக்கு எந்திரிக்கவேண்டும் என பாப்பாவுடன் பேச அழைக்க அவளும் எடுக்கவில்லை. டெல்லி சென்று ஒரு வாரம் ஆகிறது. ருத்ரப்பனின் இரவின் மடியில் பாடல் கேட்க, சத்தம் குறைத்தேன். இறுதியில் முழுவதுமாகக் குறைத்து சைலண்ட் போனது தெரியவில்லை. அப்படியே தூங்கப்போய்விட்டேன்.
கொடைக்கானல் 1986 ல் பழைய நண்பர்களுடன் ரூ.150 கொடுத்து சுற்றுலாப்போனது. அதற்குப்பிறகு 1998 ல் காளிதாசுடன் டிவிஎஸ் சில் போனது. தற்கொலை முனை, பைன் மரங்கள், குறிஞ்சி ஆண்டவர் கோயில் பார்த்துவிட்டு திரும்பியது. குறிஞ்சி மலர் பூக்கும்போது போகவேண்டும் என நினைப்பது இயலவில்லை. சரி இப்படியே காலம் போய்விட்டது. அய்யாவும் பலமுறை சொல்லிப்பார்த்தார். அய்யாவின் மருமகனும் சொல்லி இருந்தார். வாய்ப்பு கிடைக்கவில்லை.
காலத்தாழ்வுடன் பயணத்தொடக்கம்
சரி, நாளைக்குப் போகலாம் என்ற நினைவுடன் தூங்கிக்கொண்டிருக்க இடையில் எழுந்து பார்க்க மணி 2.30 சரி தூங்கலாமா இப்பொழுது குளித்து மெதுவாக ஒரு மூணு மணிக்கு மேல அனைவரையும் அழைக்கலாமா என்று எண்ணிக்கொண்டே மீண்டும் படுக்க, கண்ணை மூடிவிட்டேன். கொடைக்கானல் லேக் அருகே நின்று படகில் செல்பவர்களை பார்ப்பதும், அடர்த்தியான குளுமையான சோலைகளில் வாகனம் செல்வதும், கொடைக்கானல் வெளிமாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள் நடந்து செல்வதும், ஆங்காங்கே ஸ்வொட்டர், பேரிக்காய் விற்பனை செய்வதும், ஒவ்வொரு இடமாகப் பார்த்துக்கொண்டிருக்க கொடைக்கானல் குளுமை மனதிற்கு வருடிக்கொண்டிருக்க திடீரென்று கால் மேல் தலையணை விழுந்தது. திடுமென்று விழிக்க அடப்பாவி அத்தனையும் கனவா, மணி என்னா என்று பார்க்க 6.05 சரிதான் தொலைபேசி மூவரும் மாத்தி மாத்தி அழைத்திருக்கின்றனர். சரி, என்ன செய்ய, அடுத்த நிமிடம் பாலனை வரச்சொல்லி வண்டி எடுக்கச்சொல்ல, 6.15 க்கு குளித்தும் குளிக்காமலும் வாகனத்தில் ஏறி சிவா எங்கே சார் பாலத்திற்கு கீழே நகராட்சி எதிரில் காத்திகிட்டிருக்கேன் எனச்சொல்ல இந்தோ வந்துட்டோம், எனப் பேசும்போது எலையமுத்தூர் பிரிவு தாண்டிவிட்டது. யூனியன் ஆபிஸ் வரும்போது அந்த அம்மாவிடம் சொல்லாமலா வேண்டாமா என்ற எண்ணம், இருந்தும் மதியாதார் வாசல் என்றும் மிதிக்கவேண்டாம் என நினைக்க, பாலமேறி வாகனம் இறங்கிவிட்டது. சிவா வாகனத்தில் ஏறி வாகனம் கிளம்பிவிட்டது. நேற்று இரவுக்கு முன் முனிசும் சிவாவும் வீட்டுக்கு வருவதாகத் திட்டம், ஆனால் முனீஸ் வீட்டுக்கு வர இயலாதெனவும் பெரிய குளத்தில் பன்றிகள் வரவும் எனச்சொல்ல உடுமலை வந்து செல்ல திட்டம் மாறப்பட்டது. ஒரு வேளை அவர்கள் வீட்டுக்கு வந்திருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது. சரி என்ன செய்ய, என்ற யோசனையுடன் சிவா, முனிசைக் கேளுங்க எங்கிருக்கார்னு எனக்கேட் காந்திராம்ஸ் வாங்க எனச்சொல்ல, வாங்க, வாங்க எனச்சொல்லும் முன் காந்திராம்ஸ் சென்றுவிட்டோம். அவரும் 5 அல்லது 5.30 க்கு வந்திருப்பார். வழக்கமாக நான்தானே முதலில் அனைவரையும் அழைப்பேன். ஆனால் இன்று அனைவரின் பேசும் நிலைக்கு ஆளாகிவிட்டேன். தூக்கம் என்னை இழிசொல்லுக்கு கொண்டு சென்றுவிட்டது. கண்ணை மூடித் தூங்கியதும் விழித்துக்கூட பார்க்காமல் கனவிலேயே இருந்தது மிகவும் மன உறுத்தலைக் கொடுத்தது. தேவையில்லாமல் மற்றவர்களின் சொல்லுக்கு ஆளாகிவிட்டோமே என மனசு படபடத்தது. இன்னமும் நிற்கவில்லை.
நீங்க லேட்டு, நாங்களும் லேட்டு
நா, மெதுவாத்தான் வருவேன் என முனிசு சொல்லிக்கொண்டே வருகிறார். ஆமா , ஒன்றரை மணி நேரமா காத்துகிட்டிருக்கேன் வந்ததும் அவசரமா . . எனக் கிண்டலும் கேலியுமான பேச்சுடன் வண்டியில் ஏற , சரி கிளம்பலாமா பெட்ரோல் போடணும், சரி கிளம்பு போட்டுக்கலாம் என்று சொல்லி பாலன் வண்டி எடுக்க, காந்தி நகர் தாண்டி செல்லும்போது ஜிவிஜி வந்ததும், மகள் பற்றியான நினைவு, அருங்காட்சியகம், வரலாறு பற்றியான நினைவு, டெல்லி சென்றவள் ரெண்டு நாளாகப் பேசவில்லை. சரி இன்றும் இயலாது நாளை பேசலாம் என்று எண்ணிக்கொண்டிருக்க , எஸ்.வி.மில்லுக்கு எதிர்புறம் பெட்ரோல் பங்கில் போட வாகனம் திருப்ப வேண்டாம் போகும் வழியில் இடது பக்கமே வாகனத்தில் போடு, என்று சொல்லிக்கொண்டே அடுத்த சமத்துவபுரத்தில் பெட்ரோல் பங்கில் போட்டுக்கலாம் என்று வாகனம் கிளம்பியது.
வழக்கமா தலைவர்தான் முதலில் எழுந்து எல்லாத்தையும் எழுப்புவாரு இன்னைக்கென்னடா தூங்கிட்டாரு, என்று வழக்கமாக நகைச்சுவையுடன் பேச, மனசு என்னமோ மாதிரியாக இருந்தது. சுய நினைவில்லாமல் இருப்பது மட்டும் உணர முடிந்தது. பெட்ரோல் பங்க் வந்தது. வாகனமும் நின்றது. ஏடிஎம் கார்டினை மிசினில் செருகி கொடுக்க எண் மாறி மாறி தட்டச்சு அவன் எரிச்சலடைந்துவிட்டான். மனக்குழப்பம் தீர்ந்த பாடில்லை. மனசில் பதட்டம் இருந்தது. உடனே சிவாவிடம் கார்டு வாங்கி பணம் செலுத்த வாகனம் சென்றது.
பயணம் தொடர்ந்தது
பாலப்பம்பட்டி, மைவாடி பிரிவு, நரசிங்காபுரம், மடத்துக்குளம், சாமிநாதபுரம் என கொஞ்சம் வேகமாக செல்ல, மீண்டும் தமிழ் மாறனுக்கு தொலைபேசி பழனி அருகே வந்துட்டேம் எங்கே வருவது எனக்கேட்க, அவரோ ரணகாளியம்மன் கோயிலுக்கு வாங்க என்றார். நாங்களோ, இப்படியோ பை பாசில் சென்று விடலாம் எனக் கேட்க அதில் போனால் சுற்று 8 கி.மீ. இதுல போனா 2 கி.மீ. சரி உள்ளுர்க்காரர் சொல்கிறார். அவர் வசதிக்காகத்தான் அவரை பழனிக்குச் சென்று அழைத்து வரவேண்டும் சரி என்ன செய்ய, அவருக்காக சரி வந்துவிடுகிறோம் என்று பேசப்பேச வாகனம் பை பாசில் தாளையூத்து அடுத்த பதினைந்து நிமிடத்தில் 7 .05 பழனி வந்தோம். சிவா சார் போன தடவை அயோத்தி சார் பையன் கல்யாணத்திற்கு இந்த வந்த வழியாத்தான் வந்தோம். அயோத்தி, வாசுகி பற்றி பழைய நினைவுகள், இருபதாண்டுக்குமேல் பழக்கம். நல்ல இணையர்கள். சுபவீ அவர்கள் இல்லம் வந்து தங்கி சாப்பிட்டதும் அவர்கள் இல்லாமல் சுபவீ. ஊமாபதி நாங்களே அங்கு உணவு போட்டு சாப்பிட்டதும் நினைவுக்கு வந்து சென்றது.
வாசுகி நம்முடைய நூலுக்கு அணிந்துரை கொடுத்ததும் ஆய்வுக்கோ திருமணத்திற்கு வீட்டுக்கு வந்து அழைப்பிதழ் கொடுத்து வரச்சொன்னதும் இன்னமும் அந்தத் தம்பதிகளுக்கு விருந்து வைக்காமல் இருப்பதும் உறுத்தலைக் கொடுத்தது. தீபாவளிக்கு வரும்போது அழைத்து விருந்து கொடுத்துவிடலாம். சரி பழனிக்கு 5 கி.மீ. கோதை மங்கலம் வழியாக தாராபுரம் சாலையில் வாகனம் இறங்கியது. சரிங்க, சார், என்று மனசு லேசாக ஆசுவாசப்படுத்தியது. மாறன் பழனிக்குள் வந்துட்டோம்னு சொல்ல அவர் மீண்டும் அதே இடத்தைச்சொல்ல, இரயில்வே கேட் அடுத்து மெதுவாகச் சென்று மீண்டும் வேகமெடுத்து உடுமலை சாலை அடுத்து சாமி தியேட்டர் திரும்பி கிழக்கில் சென்று திரும்பி நிற்க, மெதுவாக வந்தார் மாறன். வேகமாக ஏறச்சொல்ல அவரும் ரெண்டு மணிநேரமா காத்திருக்கேன். ஓன்னும் அவசரமில்ல மெதுவா போலாம் இன்று கூட்டமிருக்காது வருத்தப்படாதீங்கன்னார். சரி, தேவர் சிலை பக்கம் போங்க என்று வண்டியில் அமர்ந்ததும் சொன்னார். பாலனும் வண்டியோட்டி தேவர் சிலை தாண்டி நிறுத்த இந்த அங்கேதான் வேனுக்குப்பின்னாடி, சரி வாகனமும் நின்றது. எனக்கு இன்னும் ஆரோ சரியாகவில்லை கண்டிப்பாக வாந்தி வரும் என உணர்ந்து உணவுப்பார்சல் வாங்கி வைத்துக்கொண்டேன்.
காலை சிற்றுண்டி
அவர்கள் கடையில் போயீ ரோஸ்ட் இட்லி ஆர்டர் சொல்வதற்கு பதிலாக ஊத்தப்பம் இட்லி பேசிக்கொண்ருடிருந்ததை சர்வர் சொல்லிவிட்டார் என்ன செய்ய அதை சாப்பிடவேண்டியதாகிவிட்டது. அதற்குள் அங்கு கழிவறை இடம் கேட்க இல்லையென்று சொல்ல அருகில் மண்டபத்தில் பத்து ரூபாய் கொடுத்து கழிவறைப் பயன்படுத்திக்கொண்டேன். மீண்டு வந்த போது ஏதோ ஒரு புத்துணர்வு அப்பா இப்பத்தா கிளம்பற மூடு வந்துருக்கு . . நானு சாப்பிடலாம் என நினைத்தேன் உடல்நிலை கண்டிப்பாக வாந்தி வரும் என்பதால் சாப்பிட மறுத்த இரண்டு ஊத்தப்பம் பார்சல் அவர்களுக்கு சொன்னது மீந்தீ போனது, அந்த உணவுக்கான பில்லை மாறனே கொடுத்துவிட்டார். ஆவின்ல டீ குடிப்போம்னு சொன்ன முனிஸ் ஆவின் கேட்க தாண்டி வந்துட்டோம். சரி பரவாயில்லை போங்க என பாலனிடம் சொல்ல, அங்க பைசா கேட்பாங்க என மாறனை முன்புறத்தில் அமர வைக்க சிவா பின்புறம், இதற்கு முன்பு உடுமலையிலிருந்து நான் முன்புறம் சிவா பிறகு இப்போது மாறன், சொன்ன மாதிரி நுழைவுச்சீட்டு கேட்க , மாறனோ உள்ளுர் எனச்சொல்ல அவர்களும் தலையாட்டி வாகனத்தை விட்டுவிட்டனர். பழனி மலையில் வலதுபுறத்தில் கிரிவலப்பாதையில் சென்று கொடைக்கானல் மலைக்கு ச்செல்ல மணி 7.37 க்கு தேக்கந்தோட்டம், புளியமரத்தோப்பு தாண்டும்போது இங்கதான் திருச்செந்தில் தோட்டம். மற்றும் இதுக்கு முன்னாடி உடுமலை திருவள்ளுவர் திருக்கோட்டத்திற்கு சாது சாமிகளையும் மரு.மணிமாறன் அழைத்து வந்து நிகழ்வில் சச்சரவு வந்ததையும் பைசல் செய்தையும் பேசிக்கொண்டிருந்தோம். அதற்கு முன்பு மோடிக்கு இந்த சாது சாமிகள்தான் செங்கோல் கொடுத்து வந்தாங்க, எல்லாரும் சங்கியாயிட்டாங்க என்று சொன்னார். சாது சாமிகள் ஏற்கனவே பலமுறை பாத்திருக்கிறோம். ஆனால் தென்சேரிமலை சாமிகள் போன்று அறிமுகம் இல்லை. அவர் தூய தமிழ்ப்பற்றாளர், இவரோ சங்கியாக மாறிவிட்டார் என்று மட்டும் தெரிகிறது.
வாகனம் மலைமேல சென்று கொண்டிருக்கிறது. முனிசும், மாறனும் சிவாவும் உரையாடல்கள் மிக சூடாகவும், சுவையாகவும் பல்வேறு விசயங்கள் சார்ந்து பழங்கால நினைவுகள், நிகழ்வுகள் குறித்தம் அவர்களுக்கு உரித்தான பாணியில் பேசிக்கொண்டிருந்தனர். இந்த முறை பாலன் வண்டி ஓட்டுவதால் சிவா படமெடுக்கவும், ஏறி இறங்கவும் வசதியாக இருந்தது. போகும்போது வண்டி வேகமாகவும், ஆடிஆடி சென்றது. மலைமேல் வேகமாகவும் மித வேகமாகவும்தான் செல்ல முடியும். ஏறும்போது மெதுவாகவும் இறங்கும்போது அதைவிட மெதுவாகவும் வரவேண்டும். ஆனால் இவன் (பாலன்) வேகமாக ஓட்டுகிறான். இவர்கள் மூவரும் அவனுக்கு ஒத்து ஊதுகின்றனர்.அடர்ந்த மரங்கள், கண்கொள்ளாக் காட்சிகள், மகிழுந்தில் இரண்டு பக்கமும் மரங்களையும் வனச்சோலைகளையும், பார்த்துக்கொண்டு செல்லும் போது உண்மையில் மனிதர்கள் குடும்பத்தை விட்டு வெளியில் பயணப்படுவதும், வெளியில் சென்று நாலு இடங்களைப் பார்த்து வரவேண்டும் என்று சொல்வதும், நாலு மனிதர்களைப் பார்த்து வரவேண்டும் என்று சொல்வதும் நல்ல மனமாற்றத்தைக் கொடுக்கும் என்பது பச்சைப் பசேலென மரங்களையும், நீர் நிலைகளையும் பார்க்கும் போது மனசு மகிழ்வாக இருந்தது.
பசுமையான நினைவுகள்
கொடைக்கானல் மீண்டும் மீண்டும் மனதில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. விரைவாக சென்று அந்த லேக் ஏரியா, தண்ணீர் மழை, குளுமையான பகுதி, குளிரோடு சேர்ந்த மிதமான பகுதி இதையெல்லாம் அனுபவிக்க வேண்டும் இதற்கு எவ்வளவு தொகை என்று பல செய்திகள்பேசிக்கொண்டே செல்ல, பழைய செய்திகள், நெடுமாறனோடு உறவு, உடுமலை வந்து சென்றது, பையனுக்கு பேர் வைத்தது. சுபவீ, உடுமலை வருகை,திண்டுக்கல் பயிற்சி முகாம், உடுமலை பயிற்சி முகாம் என சுப வீ தொடர்பான நிகழ்வுகள் அவருடான உறவுகள் என ஒவ்வொன்றையும் பேசிவிட்டு கடைசியாக சீமான், இவனெல்லா ஒரு மனுசன். கூத்தாடி, பழனியில் முருகன் விழா புத்தகம் வெளியிட்டது, மேடையில் ராஜீவ் பேசியது, சீமான் இறுதியில் என்ன சாதி எனக்கேட்டது என்பதையெல்லாம் பேசிக்கொண்டிருக்கு இடையில் விநாயகர் சதுர்த்தி நாள் என்பதால் வானொலியில் விநாயகர் தொடர்பான பாடல்களே ஒலித்தது. இதைச் சாக்காக வைத்து முனிசும் சிவாவும் அவர்கள் விருப்பத்திற்கு ஒப்பேத்த பயணம் விநாயகர் பாடலுடன் தொடர்ந்து பயணித்தது. நாம் வேண்டா மென்றாலும் இந்த சமூக அமைப்பும், சமூகமும் பக்தியோடு பக்திப் பரவசத்தோடும் பயணிக்கிறது என்பதை அறியமுடிகிறது. கடவுள் மறுப்பு, கடவுள் எதிர்ப்பு என்பது சிறுபான்மையே, இங்கு அனைவரும் ஏதோ ஒன்றை ஏதேனும் ஒரு பொருளை வழிபாடு எனும் பெயரில் வழிபட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். இதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
மனசு லேசானது எளிதில் எல்லாம் நம்பும், ஆனால் சந்தேகிக்காது. ந்த உணர்ச்சி வெளிப்பாடே அனைவரையும் வழிபட வைக்கிறது. மேலும் கடவுள் பெயரில், சாமி பெயரில் ஏமாற்றுப்பேர்வழிகள் இருப்பதால் பெரும்பாலும் யார் எதனையும் எதிர்த்துப் பேசுவதில்லை. நடுநிலைவாதிகளாக இருப்பதே அனைவரும் விரும்புகிறார்கள்.
தொடர்ந்து சிந்தனையில் வாகனமே அசைந்து அசைந்து வேகமாகவும் மித வேகமாகவும் மரங்களுக்கும், மலைகளுக்கும் ஊடுருவியும், ஒட்டியும் உரசாமலும், செடி கொடிகள் அருகில் மரங்களுக்கு அருகில் வாகனத்தை முந்திக்கொண்டும், பிந்திக்கொண்டும், சத்தம் போட்டும் போடாமலும், சென்று கொண்டிருந்தது. வடக்குப்புதுப்பட்டி, கோம்மைக்காடு, பாலமேடு, மேல்பள்ளம், ஜீவா நகர், வடகவுஞ்சி சந்திப்பு, பாண்டியன் நகர், பிஎல் செட், பள்ளு எஸ்டேட், பாலாரு அழகிய தோற்றம், தாண்டி செல்லும்போது 9.09. இரட்டை வளைவு அடுத்து தேனீருக்காக வாகனம் நின்றது. சர்க்கரையில்லாத எலுமிச்சை டீ, சிவா, முனிஸ் மாறன் வரக்காபி, பாலன் டீ சாப்பிட அருகே ஆப்பிள் காயாகவும் பழமாகவும் மூன்று வகையில் சேர்த்து 100 ரூபாய்க்கு வாங்கினோம். டீயுக்கும் பழத்திற்கும் சிவா பணம் கொடுத்தார். 180 ஆகியிருக்கும்.
கானல் கொடை
கொடைக்கானல் கீழ்மலை வடகவுஞ்சி விவசாயிகள் சங்கம் பெயர்ப்பலகை இருந்தது. அங்கிருந்து அஞ்சுவீடு சிறுவயல், யானைக்கிரி சோலை அடுத்து பெருமாள் மலை சந்திப்பு வந்தது.இங்குதான் பெருமளவு போக்குவரத்து கொடைக்கானலுக்குஅடுத்த நிறுத்தம். அதிகளவில் மக்கள் நடமாட்டம் இருந்தது. வாகனப்பெருக்கம் இருந்தது. இதற்கடுத்த செண்பகனூர், வில்பட்டி, உகார்தே நகர், சீனிவாசபுரம் அடுத்தடுத்து வந்தது. இடையில் சில்வர் நீர் வீழ்ச்சி வந்தது அதற்கான சீட்டையும் சிவாவே எடுக்க அங்கு ஒரு புகைப்படம் தனித்தனியாகக் குழுவாகவும் எடுத்துக்கொண்டு வாகனம் கிளம்பியது.
நிறைய திரைப்படங்கள் இங்கு எடுக்கப்பட்டுள்ளது. மதர்லேண்ட பிக்சர்ஸ் அதிக படங்கள் எடுக்கப்பட்டது.கொடைக்கானல் பயணம் மீண்டும் தொடங்கியது. அரசு மேல்நிலைப்பள்ளி, மூஞ்சிக்கல், புதுக்காடு என இடங்களும் தாண்டிவிட்டது. இங்கிருந்து பூண்டி 37 கி.மீ. பூம்பாறை 19 கி.மீ. வாகனம் சென்று கொண்டிருந்தது. கொடைக்கானலும் வந்துவிட்டது. லேக்கின் இடது பக்கத்தில் பூம்பாறை பெயர்ப்பலகை அதிலே செல்ல, 25 கி.மீ. மிகவும் நீண்ட நெடிய தூரம் பயணம். மலையின் கீழ்ப்பகுதிக்கு. பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலும் வந்துவிட்டது. கோயிலுக்குள் செல்லும் முன் வெளியில் பார்த்தால் வெள்ளைப்பூண்டு, இயல்பாக மண்ணில் விளைந்த காளான் வாங்கலாம் போய்ட்டு வந்து என நினைத்து அலுவலகம் சென்று அங்கிருக்கும் ஊழியரிடம் அய்யாவின் பெயரைச் சொன்னதும், இன்னும் முக்கால் மணி நேரம் அபிசேக பூசை பார்க்கலாம் என்று பேசிவிட்டு வெளியில் வந்தோம். கோயிலுக்கு வெளியே பூண்டு விற்கும் ஒரு பெண்மணி ஒரு பல் பூண்டை அனைவருக்கும் உடைச்சுக்கொடுத்தார். இதற்கு முன்பு வெள்ளி அருவியிலேயிருந்தே முனிசுக்கு விக்கல் வந்து கொண்டே இருந்தது. கோயிலுக்குள் போய் வரும் வரைக்கும் இருந்தது. இந்த பூண்டு உட்கொண்டதும் அவருக்கு விக்கல் நின்றுவிட்டது. ஆம் குழந்தை வேலப்பர் அருளால் நின்றதாகக் கூறுகிறார். (நம்பிக்கொள்வோம்) எனக்கும், அதுவரையிலும் சாப்பிடாமல் இருந்தேன். அந்த பூண்டு சாப்பிட்டதும் பசியாக ஆரம்பித்தது. அதற்குள் கூக்கால் போயிட்டு வந்துருங்கொ என்று சொன்னார். உடனே நாங்களும் கூக்கால் செல்லலாம் என்று கிளம்பி கூக்கால் திரும்பாமல் நேரே மன்னவனூர் வழியில் சென்றுவிட்டோம். அங்கு போகும் வழியில் வாகனம் நிறுத்தவே நான் இறங்கி உணவு சாப்பிட உட்கார்ந்துவிட்டேன்.முனிசும் மாறனும் அருகில் தெரிந்த மலையைப் பார்த்து இதுதான் குதிரான் மலை எனப் பேசிக்கொண்டிருந்தனர். சிவாவும் அதற்குள் வந்துவிட சிவா இதுதான்குதிரையான் மலையாம் ஒரு வீடியோ பதிவு பண்ணுங்க என்று சொல்லி பதிவு செய்துவிட்டோம். அதற்குப்பிறகு மன்னவனூர் பாதையில் ஒரு 5 கி.மீ. பயணம். அங்கு பேருந்து நிறுத்தத்தில் காளிமுத்து எனும் பெரியவரிடம் இது குறித்து விசாரித்தேன்.
மன்னவன் ஊர்
வந்தது வந்தீட்டீங்க இங்க லேக், ரோப் பாத்துட்டுப் போங்க என்று சொன்னார். இங்கு எம்.ஜி.ஆர். காமராஜர் வந்திருப்பதாகவும் கூறினார். எனக்கு பேரன்பு படம் எடுத்ததும் அதில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ததும் நினைவில் வந்து சென்றது. சரி பார்த்துவிடுவோம் என்று செல்ல, வாகனத்தை நிறுத்தியவுடன் நேரே உள்ளெ சென்று வன அலுவலரிடம் பேசி, கணேஷ்ராம் பெயரைச் சொல்லி விவரங்கள் கேட்க, பாப்பிலியப்பன் கோயில்சித்தரை 1 ல் மட்டுமே அனுமதி என்றும், இங்கிருக்கும் நீர் அமராவதிக்கும் குதிரை ஆறுக்கும் செல்கிறது என்று கூறினார். மேலும் இந்த வனச்சரகம் கொழுமம் வனப்பகுதிக்குக் கட்டுப்பட்டது என்று சொன்னதும் மனதில் மீண்டும் ஏதோ ஒரு சலனம். மன்னவனூர் பெயர்க்காரணம் கேட்டால் ஒரு மன்னன் இருந்ததாகவும் அவன் பெயரில் இந்த ஊர் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
யாரந்த மன்னன் என்ற மனக்கேள்வியோடு அவர்களிடம் விடைபெற்று ஏரியைப்பார்த்தோம். ஏரி குறித்து முனிசிடம் சிவா ஒலி ஒளிப்பதிவு செய்தார். முன்பே மாறன் ஒரு மாங்காய் 40 ரூபா கொடுத்து வாங்கி வந்தார். அதைத் தின்றுவிட்டு ஏரியைப்பார்த்து வரும்போது பொரி கடலை அம்மா மிகவும் இயல்பாகப் பேசினார் கண்ணு ஒரு கல்லை வாங்கிட்டுப்போங்க' என்று கேட்டது பரிதாபமாக இருந்தது. சரி என்று விலை கேட்காமல் கடலை வாங்க வாங்கிவிட்டு விலை கேட்டதும் 70 ரூபா என்றதும் சங்கடமாகப் போனது. ஏம்மா எங்க ஊரு பொரி கடலை இவ்வளவு விலையான்னு கேட்க, ஆமா கண்ண உங்கு ஊருக் கடலை இங்கெ கொண்டு வந்து விக்கிறோமல்லெ' என்று சொன்னார். எங்கெ ஊர் ஏரிப்பாளையம் பொரி உலகம் முழுக்கு போகுது என்று சொன்ன போது அந்த அம்மா 'அதனால்தான் இவ்வளவு காசு என்று திருப்பிச்சொன்னார். சரி என்று வாங்கிக்கொண்டு நடந்து வந்தோம் வரும்போது, புல்வெளியில் படங்கள் எடுத்துக்கொண்டோம். வனச்சரக அலுவலர்களிடம் பேசிக்கொண்டிருந்ததால் யாருமே நுழைவுச்சீட்டு வாங்கவில்லை. (தவறுதான்)
வெளியில் வருவதற்கு முன் அந்தப் பொரிக்கடைக்கார அம்மாவிடம் பூண்டு குறித்து எங்கு வாங்குவது குறித்து வினவிய போது வரும் வழியில் நீல வண்ணம் தார்ப்பாய் போட்டு வழிமேல் வச்சி விக்கிறாரு அவர்கிட்ட வாங்கிக்கோங்க என்று அந்த அம்மா சொன்னதற்காக பார்த்துக்கொண்டே வந்தோம். ஆம் வழிமேல் கடை இருந்தது. அவரிடம் கேட்க கிலோ 250, 300, 400, 450 ரகம் வாரியாக, சரி 300 ருபா. இருப்பதை 280 க்கு 5 கிலோ வாங்கிக்கொண்டு ஒரு தேன் பாட்டல் வாங்கிக் கொண்டு வண்டி நகர்ந்தது. சரி கூக்கால் போகும் வழியில் வாகனத்தைத் திருப்ப மாறனோ பசிக்கிறது. சீக்கிரம் உணவு வேண்டும் என்கிறார். என்ன செய்ய, போகும் வழியில் உணவகம் என்று கேட்டுக்கொண்டே செல்ல, கூக்கால் ஏரி வந்தது. அடுத்து அங்கு ஒருவரிடம் கேட்க, நேராப் போங்க நிறைய கடை இருக்கு என்று சொன்னார். இன்னும் கொஞ்ச தூரம் போனதும் வண்டியை நிறுத்த உணவகம் என்றான் பாலு டேய் பார்றா வெறும் போர்டுதாண்டா கடையில்லையா என்று சொல்ல, மீண்டும் வாகனத்தைத் திருப்பி கூக்கால் சென்றது. வழியில் ஒரு ஏரிப்பக்கம் நின்று படம் எடுக்க இந்த இடத்தில் விஜயோட புரோட்டா பாட்டு என்றான். அங்கு எடுப்பதற்கு முன்னமோ அதற்கு முன்பாக ஏரிப்பகுதிக்கு அருகாமையில் சென்று சிவா செல்பி எடுத்துக்கொண்டு வந்து வாகனத்தில் ஏறினார். இப்போது இறங்கி ஏறும் போது அய்யா அட்டைப்பூச்சி என்று படபடத்து மிகவும் பயத்துடன் எடுத்து வெளியில் வீசினார். மேலும் நாம் மேலே வரும் போது பழனி மலைத் தோற்றம் என்று படம் எடுத்தோம் அவ்விடத்தில் சில பெண்கள் மரக்குச்சிகளோடு தலையில் சுமந்து நடந்து வந்தார்கள். அவர்களிடம் பேச்சு கொடுத்து பேசிய போது இந்ததலைச்சுமை 300 இதை இந்த சோலைகளுக்குள் சென்று வெட்டி வருவோம் பாரஸ்ட் பர்மிசனோடுதான் என்று சொல்லும் போது காசுக்காகவா அல்லது பணத்திற்காகவா எனத்தெரியவில்லை. ஆனால் கொஞ்ச கொஞ்சமாக வனம் அழிக்கப்பட்டு வருவதற்கு அனைவரும் துணை போவது மட்டும் தெரிகிறது. இப்போது அட்டைப்பூச்சி எடுத்து வெளியே போட்டு விட்டு வாகனம் கிளம்பியது. கூக்கால் ஏரியில் நின்று படம் எடுத்தோம். அந்த விளம்பரப் பலகையில் வனச்சரகம் உட்கோட்டம் கொழுமம் என்றிருந்தது. மனதிற்கும் மீண்டும் ஒரு ஒளிக்கீற்று. மீண்டும் மாறன் பசிக்குது எனச்சொல்ல வாகனம் கிளம்பியது உணவுக்காக.. வரும்போது ஒரு சிறுவன் குதிரையோடு நடந்து கொண்டிருந்தான். வண்டியிலிருந்து இறங்கிப் போய் அவனிடம் குதிரை சவாரி செய்யவேண்டும் என்று கேட்டதற்கு 100 ரூபாய் என்றான். குதிரையில் ஏறி படம் பிடிக்க 50 ரூபாய் எனப்பேசி வண்டியிலிருந்து இறங்கி நானும் மாறனும் குதிரை மீதமர்ந்து படம் எடுத்துக்கொண்டதையும் நல்ல நினைவுகளாகப் பதிவு செய்வோம்.
மதிய உணவு
அங்கு எளிமையான கடை, விலைதான் அதிகம் வடிச்ச சோறு, சாப்பிட்டுக்கொண்டு ஊரைப்பற்றியும் அவர்களைப்பற்றியும் விசாரித்தோம். சாப்பாடு குழம்பு ரசம், பொறியல் சேர்த்து 500 ரூபா கொடுத்து விட்:டு வெளியில் வந்து அருகிருந்து பெரியவர்களிடம் விசாரித்த போது, இதோ இந்த வழியாப் போகணும் பாப்பிலியப்பன் கோயிலுக்கு வருசத்து ஒருமுறைதான் அதுவும் சித்திரை 1லதான். கொய்லான் மலைக்கு அதுக்கப்புறம் 2 மலை போகணும் இப்பெல்லா கண்டிப்பா முடியாது. என்று சொல்ல இங்கிருந்து ஒத்தக்கால் தண்ணாசியப்பன் கோயில் வழி கேட்க இங்கிருந்து நடந்து போகலாம் அங்கிருந்து வர இயலாது என அவர்களிடம் உண்மை நிலையினையும் நாம் வந்ததன் பொருள் ஓரளவுக்குக் கிடைத்தது.
அருகிருக்கும் ஆலமரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு நபர் வந்தார். இது எத்தனை வருசம் எனக்கேட்க இது கெடக்கு 500, 1000 வருசம் என்று சொல்லும்போது மரத்தின் அடிக்கட்டுமானம் வேர்ப்பகுதி மண் விட்டு பெருத்திருந்தது. அப்போது லேசால மழை தொடங்கியது. அதற்கு முன்புதான் சாப்பிட்ட கடைக்கார பெண்மணி சொன்னார் இங்க மழை வந்தா பத்துப் பதினைந்து நாளாயிருச்சு என்றார்.
கூக்கால் - குமணன் கல்
சரி அந்த ஆலமரம் அல்லது அரசமரத்தை கேட்கும்போதே அவர் இந்த ஊர் பத்தின டீடெய்ல் அந்த சௌந்தரராஜ் டீ கடைக்குப் போனா கெடைக்கு எனச்சொன்னார். எவ்வளவு தூரம் இங்கிருந்து 300 மீட்டர், சரி, நடந்தே போக பின்னால் படையே வந்துவிட்டது. நல்லா ஏத்த இறக்கமுள்ள பகுதி, உருவாக்கப்பட்ட ஊர். கூக்கால் என்பது குமணன் கல், என்பதாகப் பொருள் கொள்ளும்படி சான்றுகள் இருப்பதாகத் தெரிகிறது. இதையே முனிசும் வாகனத்தில் இருக்கும் போது என்னங்கய்யா கூ.முதலெழுத்தா கு முதலெழுத்தா எனக்கேட்டார். அங்கிருக்கும் மண் சார்ந்த பதிவுகள் நம்மைக் கேள்விக்குள்ளாக்கியது.
கூக்கால் ஊராட்சித் தலைவர் கிளார்க், தண்டல் வி,ஏ.ஒ நெம்பர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அங்கிருந்து நடந்து கொண்டே ஊருக்குள் செல்ல. ஊராட்சி மன்ற அலுவலகம் தெரிந்தது. அங்கு நிற்கலாம் என நினைத்தால் எதிரில் தேநீர்க் கடை அவரிடம் கேட்க அடுத்த 50 அடி இருப்பதை சொன்னார் நனைந்து கொண்டே செல்ல, அடுத்த கடைக்கு சென்றோம். அங்கு சென்று பேசிக்கொண்டிருக்கும் போதே அனைவரும் வந்து விட்டனர். அவரும் இன்னும் கொஞ்சம் உள்ள போங்க, அந்தக்கடையில இருப்பாங்க இந்த மண்ணுடையார் சமூகம் என்று ஒரு வித கேள்வியோடு ஒரு புதிய பதிவினைத்தந்தார். ஆம் மண்ணுடையார் சமூகம் யார் எந்த மண்ணுக்குரியவர்கள் எனக்கேள்வியோடு மழையில் நனைந்து கொண்டே செல்ல, ஊருக்குள் ரேடியோ சத்தத்துடன் மகிழ்;ச்சியாக வரவேற்றதாக நினைத்துக்கொண்டேன். அடுத்த 100 அடியில் அந்தக்கடையும் வந்தது. அதற்கு முன்பாக சாப்பிடும் போது ஊரைப்பற்றியும் ஊராட்சித் தலைவர் செயலர் பற்றியும் தகவல் சொன்னர் அங்கிருந்தார். என்ன தோழா சாப்பீட்டீங்களா எனக்கேட்க, வாங்க எங்க போகணும் எனக்கேட்டார் கடையின் பெயர் சொன்னதும் இந்த பால் பெயர்ப்பலகை இருக்குதுல்ல அதுதான் எனப் பெயர்ப்பலகையைக் காட்டிவிட்டு நகர்ந்து விட்டார். உண்மையில் நன்றி உள்ள நபர்தான்.
நல்லா மழை ஊத்தும் போது அந்தக்கடைக்குள் பெயரைச் சொல்லி நுழைந்ததும் கடைக்காரர் அப்படியே நின்றுவிட்டார் என்னது ஏம்பேரு சொல்றீங்க இல்லீங்க தப்பா நினைக்காதீங்க நாங்க இந்த மாதிரி வந்திருக்கோம் என்று சொன்னவுடன் அருகிலிருந்து நபர் (வேல்மயிலைக்காட்டி) இதோ இவருதான் மண்ணுடையார் சமூகம் இவுங்க அப்பாதான் ஓரளவுக்கு விவரம் தெரிஞ்சவரு என்று சொல்லும் போது அவர்கள் பெஞ்சிலிருந்து எழுந்து நம்மை உட்காரச்சொன்னார்கள். அவர்களிடம் ஒரு ஐந்தாறு நிமிடம் பேசியதிலிருந்தே இவர்கள் மண் சார்ந்த சமூகத்தைச்சார்ந்தவர்கள். மண் சார்ந்த தொழில் செய்பவர்கள் பூர்வகுடிகள், அதுவும், கொழுமம், கொமரலிங்கம் பகுதியலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் என உறுதியாகத் தெரிந்தது.
நிறையக் கனவுகளோடும் கற்பனைகளோடும் சென்ற நமக்கு ஒரு உயிர்ப்பு, ஒரு தொடக்கப்புள்ளி கிடைத்த மன நிறைவு ஏற்பட்டது. அவர்கள் மனதில் ஏதோ பதட்டம். யார் நீங்க எதுக்கு இதெல்லாம் கேட்கறீங்கொ என வழக்கமாக மற்றவர்கள் கேட்கும் கேள்வியை அவர்களும் கேட்டனர். தம்முடைய கடந்த கால நிகழ்வுகளைச் சொல்லியபோது கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.
கூக்கால் திருவிழா
இருப்பினும் அவர்களது ஐந்து நாள் திருவிழா, மாடுகள் மலையிலிருந்து விரட்டிவிட்டு எந்த மாடு முதலில் தலைவாசலுக்கு வருகிறதோ அந்த வீட்டுக்காரர்தான் விழா நிகழ்வினை நடத்தவேண்டும் என்று சொல்லும்போது கால்நடைகள் சார்ந்த திருவிழா, கால்நடைளோடு இருந்த தொடர்பு தெரிய வருகிறது. மலையரிசி எனும் ஒரு வகை இங்கு விளைந்ததாகவும் அது இந்த இடத்தைத் தவிர வேறெங்கும் விளையாது எனவும் தெரிவித்தனர். மேலும் கடந்த காலங்களில் மூனு போகம் நெல் விளைந்தது தற்போது அது அருகி விட்டதையும் குறிப்பிட்டனர்.
அங்கிருக்கும் பெரும்பாலான குடும்பத்தினர் கொழுமம் கொமரலிங்கம் பகுதியிலிருந்து இங்கு வந்தவர்கள் என்றும் இதற்கு முன்பு இதற்கு அருகமையில் இருந்த கீழ்ப்பள்ளம், மேல்பள்ளம். மந்திரிநிலம்,மஞ்சிபாளையம், சங்கிலியான் கரடு, சக்கிலியன் கரடு, எனப்பல்வேறு பெயர்கள் சொன்னார்கள் இவைஅனைத்தும் மண் சார்ந்த பெயர்கள். நாம் இங்கிருந்துதான் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மேலோங்கி இருந்தது. சரி ரொம்ப நேரம் வேண்டாம் உங்கள் தொலைபேசி எண் கொடுங்க நாங்க பேசிட்டு வர்றோம் என்று சொல்லி எண் வாங்கி வந்துவிட்டோம். அதற்குள் யாருக்கும் டவர் கிடைக்காததால் அவரது செல்பேசியிலிருந்து பாலனுக்கு தொலைபேசி செய்ய அவனும் பழைய டீக்கடைக்கு அங்கு வந்துவிட்டான். அனைவரும் வந்து வாகனத்தில் ஏறி வாகனம் மிகவும் மிகவும் சிரமப்பட்டு மேலே ஏறிவந்து கொண்டிருந்தது. மேலும் குதிரைகளில் நெல் பொதிகள்சுமந்ததைப் படித்திருந்தோம். ஆனால் நாங்கள் வரும்போது நான்கைந்து குதிரைகள் எதிரே எங்களுக்காகவே வந்து சென்றதை என்னவென்று சொல்ல.
மனதிற்குள் லேசான அச்ச உணர்வு, ஏதோ சரியான தேடுதலில் சரியான இடத்திற்கு வந்தது போன்ற உணர்வு. சுரியா எனத் தெரியவில்லை இருப்பினும் உண்மையான செயலைச் செய்யும் நமக்கு இயற்கை வழிகாட்டும் என்று எண்ணிக் கொண்ட வந்த போது திடுமென அங்கிருந்து கீழே பார்க்கச் சொன்னார்கள். கீழே பார்க்கும் போது கொழுமம், ஆண்டிபட்டி, ஆத்தூர், ஐவர்மலை, வாடிப்பட்டி, ரெட்டையம்பாடி வரைக்கும் ஏதோ ஒரு அற்புதமான வெளிச்சம், மேலே கும்மிருட்டு கீழே வெளிச்சம். உடனே சிவாபுகைப்படம் எடுக்கச் சொல்ல அடுத்த ஐந்தாறு நிமிடத்தில் இடத்தைக் கடந்து விட்டோம். அப்பொழுது பிடித்த மழை குழந்தை வேலப்பர் கோயில் வரும் வரைக்கும் விடவேயில்லை.
குமணன் மலை
இதுநாள் வரைக்கும் இது போன்ற காட்சியைப் பார்த்தது இல்லை என்று மட்டும் தெரிந்தது. நான் நினைப்பது சரியாக இருந்தால் குமணனின் ஆட்சிப்பகுதியும் அரசாட்சி செய்த இடமும் நமக்குத் தெளிவாக இன்று காட்டப்பட்டதாக அறிகிறோம். பெருஞ்சித்திரனாரின் பாடலில் கூறும் பகுதி கொமரலிங்கம் நெய்காரபட்டி வரைக்கும், ஐவர் மலைக்கும் ஆண்டிபட்டி மலைக்கும், மேல ஒத்தக்கால் தன்னாசியப்பன் கோயில் அதற்கு பாப்பிலியப்பன் கோயில், கொய்லான் மலை இவையனைத்தும் தொடர்புடை யதாகவே தோன்றுகிறது.
1940 ல் எழுதிய சி.கு. நாராயணசாமி முதலியாரின் வீரசோழீஸ்வர திருத்தல வரலாறும், மு.ரா. கந்தசாமிக் கவிராயரின் குமண சரித்திரமும் நமக்கு துணை நிற்கிறது. மழையோடு மழையாக பூம்பாறை கோயிலுக்கு வந்ததும் மழை ஓரளவுக்கு நின்று வழி விட்டது. கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்ய யாரும் கோயிலில் இல்லை நாங்க மட்டும்தான். சரி விபூதி வாங்கிக்கொண்டு கல்வெட்டு எங்கே எனக்கேட்க பூசாரிக்குத் தெரியவில்லை. வெளியில் வந்து மழையோடு மழையாக செல்பி எடுத்துக்கொண்டு கிளம்பி மழை நின்றுவிட்டது. மீண்டும் கொடைக்கானல் 25 கி.மீ. அடர்ந்த வனப்பகுதி அழகான மரங்கள்.இயற்கை சார்ந்த மனம் குளுமையான இடம், வரும்போது வேண்டுமென்ற ஓரிடத்தில் நிறுத்தி லேசான மழையில் நனைந்து ஒரு வீடியோ ஒரு படம். அவ்வளவுதான்.
மீண்டும் பயணம் தொடங்கியது கொடைக்கானல் லேக் வந்ததும் அதனைக் கிரிவலம் போன்று ஐந்து கிலோ மீட்டர் வண்டியிலேயே இறங்காமல் சுற்றிவந்தோம். கொடைக்கானல் நல்ல மழை, விட்டபாடு இல்லை. போக்குவரத்து நெரிசல் இல்லாததால் மிகவும் சிரமம் இல்லாமல் சென்று வர முடிந்தது. கொடைக்கானல் ஏரியை ஏதோ கிரிவலம் போல் சுற்றிக்கொண்டு வர வழி மாறியது போனது போல் தோன்றியது. இருப்பினும் ஒரு நபரைக் கேட்டு சரியான பாதை என உறுதி செய்து மீண்டும் பயணம் தொடர்ந்தும் இருப்பினும் கீழே இறங்கும் போது குழப்பமாக மாறன் நேரா போங்க வெள்ளி நீர் வீழ்ச்சி, எனச்சொல்ல பாலனோ திண்டுக்கல், வத்தலக்குண்டு என இருப்பதைக் கேட்க மீண்டும் அதையே வலியுறுத்தினார். வாகனம் கீழ் நோக்கி ஊர் நோக்கி வந்தது.
தொடரும் பயணங்கள்
கொடைக்கானல் மற்றவர்களுக்கெல்லாம் கானல் நீராக இருக்கும் போது நமக்கு மட்டும் கிடைக்கும் கொடையாக இருப்பதை எண்ணி மகிழ்வுடன் அருங்காட்சியம் போகவேண்டும் மணி 5.15 என்று சொல்ல கொஞ்சம் வேகமாக அருங்காட்சியகம் வர மணி 5.45 சீட் கொடுக்கும் பாதரிடம் 30 ரூபாய் கொடுக்க மேல நல்ல படிங்க என்று சொன்னதும் ஒரு நபருக்கு 30 என்று சொன்னதும் 100 ரூபாய் கொடுத்து 3 சீட் பெற்றுக்கொண்டோம். சீட்டை வாங்கி உள்ளே சென்றதும் அவ்வளவு அருமையாக இருந்தது. நிறைய நிறைய படங்கள், அருமையான காட்சியகம் என்பதையே அருங்காட்சியகம் என்று வைத்துள்ளனர். சிறப்பு. அப்படியே எழுதிவிட்டு அந்த நூலகரிடம் இந்த நூல் உங்களுக்குக் கொடுக்கவேண்டும் எனச்சொல்ல, அவரோ, உள்ளே கல்லூரிக்குள் ஆண்ட்ரோ இருக்கிறார் அவரிடம் கொடுங்கள் அவரிடம் மகிழ்வார் என்று சொல்லி உள்ளே அனுப்பி வைத்தார்.
நாங்கள் அறையின் முன்பு காத்திருக்க அவரே அழைத்தார் உள்ளே சென்றோம். மிகவும் இயல்பாகத் தொடங்கிய பேச்சு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப்போனது நேரம் போனதே தெரியவில்லை. ஆண்ட்ரோ கேதீஸ் தொடர்பான செய்திகள் அவரையும் ஈர்த்துள்ளது. அவருடைய வரலாற்றை பேச ஆரம்பித்தார். ஆம் அவரும் வரலாற்றுப் பேராசிரியர். ஒரு சமயம் பேச்சு திசை மாறவே மீண்டும் ஆண்ட்ரோ கேதீசுக்கு கொண்டு வந்த போது ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக இருப்பதை அறிந்து அதற்கேற்ப மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் எளிமையாகவும் பதிலுரைத்தார். நேரம் சென்றதே தெரியாமல் பேசிக்கொண்டிருக்க மணி பார்க்க 7.10 அடப்பாவமே 5.50 க்கு வந்தது. சரி கிளம்புறோம் என்று சொன்னதும் வெளியில் வந்து வழி அனுப்பி வைத்தார். இன்று நல்லதொரு உறவினையும் தேடலுக்கான பலனையும் கிடைத்தது என்றால் மிகையில்லை.
பயணங்கள் நல்லஅனுபவத்தைக் கொடுக்கும். பயணங்கள் நல்ல மனிதர்களைக் கொடுக்கும். பயணங்கள் தொடரும்.. . காலை 6.06 க்குத் தொடங்கிய பயணம் இரவு 9.09 க்கு முடிந்தது. மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம்.
Comments
Post a Comment