கேள்வி :
காலம் கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்கள் என்ன?
காலம் மாறி விட்டது. மக்களின் மனநிலை மாறிவிட்டது. 25 வருடங்களுக்கு முன்பெல்லாம்
ஒரு பெண்ணிற்கு சம்மதமா என்பது ஒப்புக்கு கேட்கும் ஒரு வழக்கமாகவே இருந்தது. இன்றைக்கு அப்படியா அதுவும் இந்த கால பெண் குழந்தை களுக்கு எப்படிபட்ட மாப்பிள்ளை வேணும்னு ஒரு பெண் குழந்தையின்
அம்மாவா ன என்னாலேயே கண்டுபிடிக்க முடியல. ஊரு ல இருக்க அத்தனை வாலிப பெண்களுடனும்
நெருங்கி பழகுகிற எனக்கே புரியவில்லை.ஏன்னா ஒரே மாதிரி இல்லை.
இந்த கலைடாஸ்கோப்
ல உடைந்த வளையல் துண்டுகளை போட்டால் மாறி கொண்டே இருக்குமே டிசைன் அப்படி இருக்கு. சரி இவங்களை விடுங்க அவங்க அப்பா அம்மா என்ன சொல்றாங்க. இரண்டு அளவுகோல் ஒன்று அரசாங்க வேலை அப்படி இல்லனா 2. வசதியா இருக்கணும். ஜாதி ஜாதகம் லாம் அவசியம் .20 வயசுல பொண்ணுக்கு வர 30 வரன்களையும் தள்ளி விட்டு 27, 28 வயதான பெண்களை நான் அறிவேன்.இப்பவும் லேட் ஆகலை ஆனா இப்பவும் அவங்க பெற்றோர் மனம் மாறலை அதெல்லாம் கஷ்டபடவே கூடாது னு நினைக்குறாங்க.
இவங்க கஷ்டம் தெரிந்தா தானே.இது பெண் தரப்பு . மாப்பிள்ளை தரப்பு ல வெளில முரட்டு சிங்கிள் னு சொல்லிகினு அலையுறவங்க அத்தனை பேரும் உள்ளுக்குள்ள அழுதுகினு தான் இருப்பாங்க.
எல்லா கடமைகளையும்
முடிச்சிட்டு கல்யாணத்துக்கு
ரெடி ஆவற வேலைக்கு வயது வாலிபம் லாம் கடந்து போயிடுது.ஒண்ணும் சொல்றதுக்கில்லை கொஞ்சம் முன்னாடியே உஷாரா இருந்துருக்கணுமோ
😅😂😂😂👍👍👍
Comments
Post a Comment