அ.சண்முகவேல்,முனைவர் பட்ட ஆய்வாளர் .🥰🙏📗✒️📡🎙️🌈
வணக்கம். முதன் முதலில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுமையத்தின் குழுவினற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். ஒரு ஆய்வு மாணவனாக தங்களை நான் முதன் முதலில் அருட் செல்வன் அவர்களையும் மற்றும் சிவா சார் அவர்களையும் சந்தித்தேன். தளி எத்தலப்பர் குறித்த வரலாற்றினை நான் கேட்ட போது. எனக்கு எல்லா வகையிலும் நீங்கள் மேற்கொண்ட தொடக்க பணியிலிருந்து இறுதி வடிவம் பெற்ற அனைத்து தகவல்களையும் எனக்கு தெரிவித்ததுடன் இன்னும் இதனை எவ்வாறு எல்லாம் மேம்படுத்தலாம் என்று எனக்கு முதன் முதலில் ஆராய்ச்சி பார்வையில் எனக்கு தெரிவித்த அருட் செல்வன் சார், சிவா சார் அவர்களுக்கும் உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் குழுப் பணிக்கு கிடைத்த மாண்பிற்கான மதிப்புமிக்க அங்கீகாரம்.... உண்மையில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.... உங்களின் அளப்பரிய பணியையும், நான் நேரில் சென்று பார்த்த தளி பகுதியில் அமைந்துள்ள தூக்குமரத்தோட்டம், திருமூர்த்தி மலை, ஜல்லிபட்டி, தொண்டாமுத்தூர் போன்ற பகுதிக்கு களப்பணிக்கு சென்ற அனுபவங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. நீங்கள் மேற்கொண்ட பணியை தென் கொங்கின் முதல் விடுதலைப்போர் புத்தகமே சான்றாக விளங்குகிறது..... உடுமலைப்பேட்டைக்கு மேலும் ஒரு மணிமகுடமாக தளி எத்தலப்பர் சிலையும் மணி மண்டபமும் அமைந்துள்ளதுங்க... அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். நன்றி
இப்படிக்கு
அ.சண்முகவேல்,முனைவர் பட்ட ஆய்வாளர் .🥰🙏📗✒️📡🎙️🌈
Comments
Post a Comment