கவின் தம்பியின் சரியான நேரத்தில் சரியான ஆழமான பதிவு ... வாழ்த்துக்கள் தம்பி ...
கவின் தம்பியின் சரியான நேரத்தில் சரியான ஆழமான பதிவு ...
வாழ்த்துக்கள் தம்பி ...
என் கேள்வி : நம் சமுதாயம் அரசியலில் கற்றுக்கொள்ளவேண்டியது என்ன ?
கவின் தம்பியின் பதில் :
அன்பு பெரியவர்களுக்கு வணக்கம்
என்னைப் போன்ற இளையோர்கள் பெரியோர்களை பார்த்து அரசியல் கற்றுக் கொள்வோம் என்ற ஆசையில் பார்க்கும் குழுக்களில் இணைந்து பயணிக்கிறோம் அல்லது பயணிக்கலாம் எனக்குத் தெரிந்த ஐந்து ஆறு குழுக்களில் திரும்பத் திரும்ப சில விஷயங்கள் பேசு பொருளாக இருந்து கொண்டிருக்கிறது .
இவைகளையெல்லாம் பார்த்து பயணிக்கும் போது ஒரு வேலை அரசியல் என்றால் இதுதானோ என்று ஐயப்பட வைக்கிறது.
இங்கு பயணிப்பவர்கள் அனைவரும் வேறு வேறு கட்சி சார்பாக இருந்தாலும் ராஜகம்பள தொட்டிய நாயக்கர் சமூகம் என்ற ஒரே ஒரு கூரை என கீழ் தான் பயணிக்கிறோம் ஆனால் வயதில் மூத்தோர் அறிவில் சான்றோர் பக்குவப்பட்ட பலர் சட்டென விலகிச் செல்வது என்னை போன்ற வயதில் 30 அல்லது 35 அல்லது அதற்கு கீழாக பயணிப்போர் இருக்கலாம்.
மேலே சொன்னது போல நீங்கள் தான் எங்கள் அனைவருக்கும் ஒரு முன்னோடியாக இருந்து எங்களுக்கு அரசியலையும் சமூகப்பற்றையும் சமுதாயப்பற்றையும் விதைக்க வேண்டும் ஆனால் இங்கு நடக்கும் அல்லது நடந்த சிறு கசப்பான சம்பவங்களுக்காக தங்கள் ( இங்கு யாரையும் குறிப்பிட்டு நான் சொல்லவில்லை ஏனென்றால் யாரையும் எனக்கு தெரியாது யாரையும் இங்கு பார்த்தது கிடையாது ஏனென்றால் நான் எப்போது தான் இந்த குழுவில் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறேன்) குழுவில் இருந்து விலகுவதும் அல்லது ஒருவரை ஒருவர் ஏசி கொண்டு இருப்பதும் சில சங்கட்டங்களை வரவிருக்கிறது யாரோ ஒருவர் மேலே மேற்கோள் காட்டியது போல இக்குழுவானது "கம்பளமே அரசியல் பழகு" என்ற பெயரை தாங்கி இருக்கிறது அதுபோல விவாதங்கள் இருந்தால் எதிர் கருத்துக்களை தங்கள் பகிருங்கள் உண்மை தன்மை என்ன என்று வெளிக்கொண்டு வாருங்கள் அப்பொழுதுதான் எங்களாலும் என்னாலும் என்னை போன்றவர்களும் அரசியல் கற்றுக் கொள்வார்கள் இல்லையெனில் எல்லோரும் சொல்வது போல அரசியல் ஒரு சாக்கடை என்ற மூக்கை பிடித்து அந்தப் பக்கம் சென்று சட்டமன்ற தேர்தலோ பாராளுமன்ற தேர்தலோ உள்ளாட்சித் தேர்தலும் எதுவாயினும் கொள்கை கோட்பாடு இவை எதுவும் இன்றி நினைத்த சின்னத்திற்கும் நினைத்த ஆட்களைக்கோ தனது வாக்கை செலுத்தி விட்டு வந்து சாதாரண சாமானியனாக கடந்து சென்று விடுவார்கள்.
ஆகவே பெரியோர்களான ஆன்றோர்களான சான்றோர்களான நீங்கள் தான் எங்களை வழியில் நடத்த வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
இங்கு யாவருக்கும் கருத்துரிமை உண்டு எல்லோரும் எல்லாமும் பேசலாம்
மேற்சொன்ன விஷயங்களில் தவறு ஏதும் இருந்தால் குறிப்பிடவும் திருத்திக் கொள்கிறேன் தங்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன்...
பணம் இன்று வரும் நாளை போகும் ஆனால் நாம் கற்றுக் கொள்ளும் கல்வி செல்வமும் உங்களைப் போன்ற பெரியோர்களின் வழிகாட்டும் அறிவு செல்வமும் இந்த மண்ணில் வாழும் வரை எங்கள் நெஞ்சத்தில் நிறைந்து இருக்கும் என்றும் அழியாது நிலைத்து நிற்கும் ஆகவே தாங்கள் கூறும் அல்லது விதைக்கும் அறிவுச் செல்வங்கள் எங்கள் வாழ்வில் செழிப்படைய மற்றும் மேன்மை அடைய உறுதுணையாக இருக்க வேண்டும் அதுபோல நீங்கள் அனைவரும் வழி காட்ட வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
இங்கு பயணிப்பவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு தொழிலோ ஏதாவது ஒரு வேலையிலோ இருப்பார்கள் இங்கு பதியும் கருத்துக்களானது யாரும் நேரத்தை போக்குவதற்காகவோ அல்லது வெறுமனே பதிவதற்காகவோ இங்கு வந்து பதிவது இல்லை ஏனென்றால் யாருக்கும் இது மட்டுமே அவர்களின் போனில் இருக்கும் பத்தோடு பதினொன்னாவது குழுவாக இருக்காது கம்பளம் என்ற அந்த ஒரு பெயருக்காக தான் இந்த குழுவில் பயணிக்கின்றனர்
ஒன்றாய் பயணிப்போம் அரசியல் பழகுவோம்
எங்கோ யாரோ ஒருவர் பதிய என் மனதில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்திய பதிவு அதன் மூலம் தான் நாங்கள் எடுத்த சிறிய உறுதிமொழி இவை யாவும் எங்களுக்கு வெறுமனே கிட்டவில்லை இவை அனைத்தும் வயதில் மூத்தோர்கள் சான்றோர்கள் அவர்களிடம் இருந்து கேட்ட பதிந்த பதிவுகளில் இருந்து ஒரு முத்து மாலையை போல் இளைஞர்கள் நாங்களே தயாரித்த ஒரு உறுதிமொழி.
இதில் முதல் வரியே நான் என்னாலான உதவிகளை என் சமுதாயத்திற்கு செய்த சாதி மதம் கட்சி பாகுபாடு இருக்கா அப்பாற்பட்டு உண்மையாக உழைப்பேன் என்பது.
இதை இளைஞர்களாகிய எங்கள் உள்ளத்தில் விதைத்தது உங்களைப் போன்ற பெரியோர்கள் தான் அதனால் அரசியல் என்பதை கற்றுக்கொள்ள அல்லது தெரிந்து கொள்ள நீங்கள் தான் முன்வர வேண்டும்
-கவின் சின்னுசாமி
நன்றி ,வெற்றிவேல்! வீரவேல்!
Comments
Post a Comment