ஒரு தம்பியின் ஆதங்கமான பதிவு....
ஒரு தம்பியின் ஆதங்கமான பதிவு....
அதாவது நான் பொதுவெளியில ஒரு காரியம் செய்யறதுக்கு இறங்குறாங்க அப்படின்னா ஒரு சம அளவு இடம் கொடுக்கணும் அப்பத்தான் நம்ம அடுத்தது என்ன பண்ணனும் இதனுடைய நிறைகுறைகள் என்ன அப்படின்னு தெரிஞ்சிட்டு முன்னேற்றம் செய்ய முடியும் நான் சொல்றது தப்பா கூட இருக்கலாம் .பல சமுதாய அமைப்புகளில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை அதாவது ஒரு சிலர் வந்து என்ன சொல்றதுன்னா அதாவது அவங்க எடுக்கிற முடிவுகள் அவங்க என்ன செய்யணும் நினைக்கிறார்களோ அது மட்டும் தான் செயல்படுத்துறாங்கன்னு எனக்கு தோணுது அது பல அமைப்புகள் வந்துருச்சுன்னா அரசியல் சார் பெற்ற சமுதாயத்திற்கு நம்ம சமுதாயத்திற்கு என்ன செய்யணும் அடுத்த லெவல் எப்படி கொண்டு போறது அதன் மூலமாக பாத்தீங்கன்னா சின்ன சின்ன செயல்பாடுகள் அதாவது இப்ப கவர்மெண்ட் கிட்ட இருந்து நிறைய சலுகைகள் வரும் அதை வந்து நம்ம மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது like DNT / DNC சர்டிபிகேட் பத்தின விழிப்புணர்வு தருவது கேரியர் கவுன்சிலிங் , என்ன படிக்கிறது எங்க படிக்கிறது அப்படிங்கற மாதிரி நிறைய விஷயங்களை பத்தி பேசிக்கிட்டே இருக்கணும் அப்பதான் பார்த்தீங்கன்னா நெக்ஸ்ட் ஜெனரேஷன்க்கு எதனா யூஸ்புல்லா இருக்கும்
அதாவது நான் சிம்பிளா சொல்லப்போனா நான் என்னோடது என்னால அப்படிங்கறத தாண்டி நமக்கு நம்மளால நம்ம சந்ததிகளுக்கு அப்படின்னு எப்ப மாறுதோ அப்பதான் மாற்றம் கிடைக்கும்.
எனக்கு தெரிஞ்சு இனிமேல் எல்லாம் பார்த்தீங்கன்னா ஒன்று சேர்ப்பது என்பது சிரமம் தான் ஒவ்வொருத்தரும் இயக்கங்கள் ஆரம்பித்து வெளியே போயிட்டே இருப்பாங்க அதாவது ஆர்கியூமென்ட் என்பது நல்ல விஷயம் தான் ஆனா அதுல வர்ற கசப்பான சம்பவங்களுக்கு அன்றைக்கேவோ அல்லது குறுகிய காலத்தில பேசி முடிவெடுத்து அதை அன்றோடு விட்றணும் அதைவே மீண்டும் மீண்டும் பேசு அன்னைக்கு இப்படி சொன்ன அன்னைக்கு இப்படி பண்ணுனாங்க அப்படின்னு சொல்லி பேசறது வந்து வெளியில் இருந்து எதனால் பண்ணனும் நினைக்கிறவங்க கூட பாத்தீங்கனா எதுக்கு போயிட்டு இதெல்லாம் செஞ்சிட்டு அடிக்கிற மாதிரி தோன்ற வைத்துவிடும்
அதாவது அண்ணா இங்க யாருமே ஆக்கப்பூர்வமான விஷயங்கள் பற்றி பேசறது ரொம்ப குறைவா இருக்கு சமுதாயத்தை எப்படி வளர்த்தறது இப்ப வர்ற தலைமுறைகள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது அவர்களை எப்படி நல்வழிப்படுத்துவது அப்படிங்கற பேச்சை எல்லாம் இல்லை எப்போ எனக்கு அவர் பிடிக்கலைன்னா அவர பத்தி நான் என்ன பேசணும் அதுதான் யோசனையா இருக்கும் எனக்கு புடிக்கலைன்னா எனக்கு பின்னாடி இருக்கிறவங்களுக்கும் பிடிக்க கூடாது இப்படி யோசிச்சா எப்படி ஆக்கபூர்வமான சிந்தனைகள் வரும் அடுத்த கட்ட நகர்வுக்கு எப்படி போகும்.
மாதாந்திர கூட்டம் போடுறாங்க இல்லாட்டி முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நிகழ்வுகளுக்கு மீட்டிங் போடுறாங்க அங்கே என்ன பேசுறாங்க போறவங்களுக்கு மட்டும் தான் தெரியும் அது போல அழைப்பும் பார்த்திங்கனா முக்கியமான வங்களுக்கு மட்டும் தான் கூப்பிட்டு சொல்லிக்கிறாங்க மத்தவங்களுக்கு அப்படி ஒரு நிகழ்வு நடக்கிறது தெரியாது என்ன பேசினார்கள் என்று தெரியாது.
ஒரு சமுதாய அமைப்பு அப்படின்னு ஒன்னு இருந்துச்சுன்னா அங்க பேச வேண்டிய விஷயங்கள் இப்ப நாம எந்த நிலைமையில் இருக்கிறோம் அடுத்தது என்ன பண்ணனும் இல்லாட்டி இதற்கு முன்னாடி ஒரு விஷயம் பண்ணி இருப்போம் அதில் எப்படி தவறு நடந்திருச்சு அதை வந்து திருத்துறைக்கு இது வந்து ஒரு மாற்றம் செய்யலாம் இல்லாட்டி உங்ககிட்ட தெரிஞ்ச கருத்துக்களை சொல்லுங்க இப்படித்தான் பேசி கொண்டு போயி ஒரு தீர்மானம் இயற்ற வேண்டும் அப்பத்தான் ஓ பரவால்ல ஆமா சரியான திசையில் தான் போயிட்டு இருக்கோம் அப்படிங்கற ஒரு நம்பிக்கை வரும் அதன் மூலம் பாத்தீங்கன்னா யாரோ ஒருத்தருக்கு ஒரு உபயோகமா இருந்திருக்கும்.
ஒன்னும் இல்ல இப்ப சொல்லப்போனா பாத்தீங்கன்னா ரேஷன் கடைக்கு ஆள் எடுக்குறாங்க கட்டுனார் அதுக்கப்புறம் பில்லிங் இருக்கலாம் 10 & 12 கிளாஸ் படிச்சிருந்தா போதும் சொல்றாங்க இப்போ இந்த மாதிரி ஒரு நல்ல ஒரு அமைப்பா இருந்தனா ஒரு மீட்டிங்கு கூப்பிட்டு நீங்க அப்ளை பண்ணுங்க இதுக்கு ஒரு ரிகர்சல் ட்ரைனிங் தருகிறோம் முயற்சி பண்ணுங்க எங்களுக்கு தெரிஞ்ச அபிஷியல்ஸ் இருக்காங்க இல்ல கட்சிக்காரன் இருக்காங்க நீங்க போய் சேருங்க அப்படின்னு சொல்லி ஒரு உதாரணமாக இருக்கணும் அதெல்லாம் இங்க நடக்கிறது இல்லையே
இந்த மாதிரி விஷயத்தை நானும் நீங்களும் சொல்லும்போது யாரும் கேட்க மாட்டாங்க அதுவே ஒரு அமைப்பு வந்து சொல்லும்போது கண்டிப்பாக செவிமடுத்து கேப்பாங்க பரவாயில்ல இவங்க நம்ம நல்லதுக்கு தான் சொல்றாங்க அப்படின்னு சொல்லிட்டு இன்னொன்னு ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறவங்க ஐடியாவை கேட்டு அத வந்து கீழ கொண்டு வந்து சேர்த்தனும் அதை யாரும் பண்றது இல்ல .
அதைத்தான் நான் சொல்றேன் இப்போ ஒருத்தர் ரெண்டு பேர் சொன்னா அவங்க கேக்குறதுக்கு கிடையாது ஒரு சமுதாய அமைப்பு வந்து நான் உங்களுக்கு பின்னாடி இருக்கிற நீங்க பண்ணுங்க அப்படின்னு சொல்லி தூக்கி விடும்போது இன்னும் நம்பிக்கை அதிகமா இருக்கும் அதான் சொல்றேன் நீங்க யாருக்கு காசு பணமோ பைனான்சியல் சப்போட்டா பண்ண வேண்டாம் அறிவு சார்ந்த கருத்துக்களை பகிர்ந்து விடுங்க இன்னொன்னு நீங்க எவ்வளவுதான் காசு கொடுத்தீங்கன்னாலும் அது தீர்ந்து போச்சுன்னா மறுபடியும் கையை நீட்டுவாங்க ஆனா அதுவே அவனுக்கு யோசிக்க கூடிய திறமை உண்டு பண்ணி விட்டுட்டோம்னா அந்த யோசனை வச்சு மறுபடியும் அடுத்த லெவல் போகணும்னு நினைப்பா ஆனா அதை விட்டு கீழே இறங்கி வர மாட்டான்
அதுக்குத்தான் ஒரு அழகான ஒரு பழமொழி சொல்லுவாங்க "ஒருத்தனுக்கு நீ மீன் பிடிச்சு கொடுக்கறதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடு"
அதைத்தான் பண்ணனும் நீ எனக்கு தெரிஞ்சு அதாவது இது மிக சொற்பமாக தான் நடக்குது .
இதே விஷயத்தை வந்து நான் எங்க ஊரு பசங்க கிட்ட நிறைய பேரு கிட்ட சொல்றேன் இவன் பெரியவங்க கிட்ட கூட சொல்றேன் யாரு அதை கேக்குற மாதிரி இல்ல ஏன்னா இவன் எல்லாம் சொல்றதான் நாம கேட்கிறதா அந்த மாதிரி ஒரு தாட்ஸ் இருக்கும்
என இதெல்லாம் நான் அனுபவப்பட்டு இருக்கேன் எனக்கு நடந்தது என்ன பின்னாடி சந்ததிக்கும் என் சமூகத்துக்கும் நடக்க கூடாது நான் நினைக்கிறேன்
எங்க மாமா மத்திய அரசாங்கத்தில் நல்ல போஸ்டிங் ல இருந்தாரு சென்ட்ரல் கவர்மெண்ட் ஜாப் ஆனா அவர்கூட எங்களுக்கு ஒரு கேரியர் கைட்னஸ் தரல இல்ல நீ டென்த்துல பிளஸ் 2வில் இப்படி எல்லாம் படிக்கலாம் அப்படிங்கற ஒரு ஐடியா கூட சொல்லித் தரல .
ஆனா அவர் பேசும்போது அவர் படிக்கும் போது எவ்வளவு கஷ்டப்பட்டேன் இந்த நிலைமைக்கு நான் வர ஹாஸ்டல் எல்லாம் போய் ஸ்டே பண்ணி படிச்சேன் அப்படின்னார். ஆனால் அவர் நினைத்திருந்தார்னா அவர் பட்ட கஷ்டத்தை வந்து அவங்க அக்கா பசங்கள ஒரு தங்கச்சி பசங்களும் தம்பி பசங்களும் பட்டிருக்கக் கூடாதுன்னு நினைச்சு இருக்கணும் அது தோணல இது மாதிரி தானா இருக்க நம்மளோட சமூகம். இதையெல்லாம் மாத்தணும் மாத்தணும்னா ஒவ்வொருத்தவங்களுக்கும் புரிய வைக்கணும் ஆனா இப்ப இருக்கற ஜெனரேஷன் ரொம்ப அழிச்சிட்டு வருது அப்பா உன் ஆத்தா கஷ்டப்பட்டு சம்பாதிச்சு பையன் கேட்த எல்லாம் செஞ்சு கொடுத்தாராங்க ஆனா அந்த பசங்களுக்கு வந்து கஷ்டமே தெரியவில்லை ஆனா இன்னும் நாம் ஆண்ட பரம்பரை ஆண்டு கொண்டு இருந்த பரம்பரை கோட்டை கட்டுன பரம்பரை எல்லாம் பேசிட்டு இருக்குறோம் ஆக்கபூர்வமான சகல ஒரு ரிசல்ட்டையும் காணோம்
என்னை பொறுத்த வரைக்கும் நான் ஒரே ஒரு ஆதங்கம் எனக்கு ஒரு விஷயம் தெரியல அது வந்து நான் மத்தவங்கள சொல்லல அப்படிங்கறது வேற எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சிருக்கு அந்த விஷயத்தால நாலு பேருக்கு பிரயோஜனமாகும் அப்படின்னு தெரிஞ்சு அதை நாம் சொல்லாமல் விட்டோம் என்றால் அதோட மகா மட்டமான செயல் ஒன்றுமே கிடையாது அதைத்தான் அண்ணா நிறைய பேர் பண்றாங்க
எனக்கு கிடைக்காத ஒரு விஷயம் வந்து வேற யாருக்கும் கிடைக்கக்கூடாது அதான் இங்க நிறையா நடந்துட்டு இருக்கு ஆனா அது மாறனும் இந்த விஷயம் எனக்கு கிடைக்கல அப்ப எனக்கு தெரியல இன்னைக்கு எனக்கு தெரிஞ்சிருக்கு அந்த கிடைக்காத ஒன்று என் சமூகத்துக்கு கிடைக்கணும் இந்த எண்ணம் தான் எல்லாத்துக்கும் வரணும் அப்படிங்கிறது தான் என் ஆசை
இந்த உலகம் என்பது எனக்கும் என் குடும்பத்துக்கும் தன்னைச் சார்ந்த ஜாதியைச் சார்ந்த சமூகத்துக்கு மட்டுமே கிடையாது எல்லாத்துக்கும் பொதுவான ஒன்று ஆனால் யாருக்கும் எவருக்கும் எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் அதில் இருக்கும் பெரும் பங்கை எடுத்துக் கொள்ளவும் உபயோகித்துக் கொள்ளவும் மட்டுமே எனக்கு உரிமை உண்டு.
தம்பியின் ஆதங்கமான பதிவு ......மாற்றுவோம் ..மாறுவோம் ...அடுத்த கட்ட பயணத்தை நோக்கி ....
Comments
Post a Comment