வி.தங்கராஜ் எம்.ஏ., எம்.எல்,

கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே உடுமலையில் தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் என்கிற வரலாற்று ஆய்வுநூல் வெளியிடப்பட்போது அந்நூலுக்கு நான் எழுதிய அணிந்துரையை தற்போது தளி எத்திலப்ப நாயக்கர் மணிமண்டபம் மற்றும் சிலை திறப்புவிழா சமயம் பொருத்தம் கருதி வாட்ஸ்அப் தளங்ளில் பதிவுசெய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். A post by V. ThangarajMA,ML.


வி.தங்கராஜ் எம்.ஏ., எம்.எல், மாநிலப்பொதுச்செயலாளர்,தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன்  பண்பாட்டுக்கழகம், மதுரை (பதிவு எண் :08/1983)

ஆசிரியர்ஃ வெளியீட்டாளர், வீரபாண்டிக் கட்டபொம்மன் திங்களிதழ்,

முனைவர் பட்ட ஆய்வாளர், காந்தி கிராமப் பல்கலைக்கழகம்,


அணிந்துரை


சிங்கமநாயக்கனின்  மகன் கம்பிளி நாயக்கன்  ஆட்சிக்காலத்தில் சின்னஞ்சிறிய  நாட்டையும், கம்பிளிக்கோட்டையையம் முகமதியப்படைகள் தாக்கி  அழித்தன.  அந்த கம்பளி நாட்டின் இடிபாடுகளின் மீதுதான்  மாபெரும் விஜயநகர சாம்ராஜ்யம்  தோன்றியது. விஜயநகர சாம்ராஜ்யம் தெற்கு நோக்கி  தமிழகத்தில் வந்து நிலைகொண்டனர்.  அவர்களின்ல மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் தொட்டிய நாயக்கர் அவர். இவர்கள்  கம்பளத்தார்கள்  என்றும் அழைக்கப்படுகின்றனர்.  தெலுங்கு மொழி, பேசும் இவர்களை இனவரையில்  வல்லுநர் எட்கர் தர்ஸ்டன்  தொட்டியர் அல்லத கம்பளத்தார் என்றே குறிப்பிடுகின்றார். விஜயநகரப் படைகளில்  படைத்தலைவர்களாகவும், படைவீரர்களாகவும் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தவர்கள் இவர்கள் என அவர் குறிப்பிடுகின்றார்.

விஜயநகர சாம்ராஜ்யம் தமிழகத்தில் முதலில்  மதுரையில் தான் நாயக்கமன்னர் ஆட்சியைத் தோற்றுவித்தது. மதுரைநாட்டின்  முதல் நாயக்கமன்னராக நாகம நாயக்கரின்  மகன் விசுவநாத நாயக்கர் கி.பி. 1529 ல் பதவியேற்றுக்கொண்டார். பின்னிட்டு 1535 ஆம் ஆண்டில் அவர் மதுரை நாட்டை நிர்வாக வசதிக்காக72 பாளையப்பட்டுக்களாகப் பிரித்த போது கிட்டத்தட்ட 60 பாளையப்பட்டுக்ளளை இந்த தொட்டியர், கம்பளத்தார் வசமே ஒப்படைத்தார்.  விஜயநகரப்பேரரசர்களின்  அறிவுரையோ,  அனுமதியோ இன்றி அவர்  அவ்வாறு செய்திருக்க இயலாது.  ஆக விஜயநகரப்பேரரசர்களும், மதுரை நாயக்க மன்னர்களும்  சேர்ந்து கிட்டத்தட்ட  மதுரை நாடு முழுவதையும்,  ஏன் இந்த தொட்டியர் கம்பளத்தாரின் நிர்வாகத்தில் ஒப்படைத்தார்கள் என்பது இன்றளவும் ஆய்வுக்குரிய அம்சமாகவே இருந்து வருகிறது.

இந்த தொட்டியர்ஃகம்பளத்தார் ஆண்ட பாளையப்பட்டுக்கள் 'கம்பள பாளையப்பட்டுக்கள்' என அழைக்கப்பட்டன. அவற்றில்  ஒன்றுதான்  தளி பாளையப்பட்டும்  ஆகும். பின்னிட்டு பாளையப்பட்டு ஆட்சிமுறை மாற்றப்பட்ட போது பாளையக்காரர்கள் எல்லாம் படை பலத்தை இழந்து வெறும் ஜமீன்தார்களாக ஆக்கப்பட்டனர். அதன் பின்  ஜமீன்  ஒழிப்புச்சட்டம்  அமுலுக்கு வந்த பிறகு ஜமீன்தார்கள் எல்லாமே  குடிமக்களாகவும், விவசாயிகளாகவும் மாறினர். இத்தகைய ஜமீன்தார்களின்  வாரிசுகள், உறவினர்கள் உள்ளிட்ட தொட்டிய கம்பளத்தார் சமூக மக்கள்  தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் , கரூர்,திருப்பூர், கோயம்புத்தூர்,ஈரோடு, சேலம்,நாமக்கல், திருச்சி ,விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அதிகளவில்  வசித்து வருகின்றனர்.

தென்னிந்தியாவில்  பாளையக்காரர்களின்  ஆட்சி நடந்து கொண்டிருந்த போதுதான்  ஆங்கிலேய  கிழக்கிந்தியக் கம்பெனியை  ஆங்கிலேய அரசே எடுத்துக்கொண்டு நிர்வாகம், வரி வசூல் என இறங்கியது.  ஆங்கிலேய  ஏகாதிபத்திய  அரசுக்கு எதிரான போராட்டங்களைத்தான் விடுதலைப்போர் என வர்ணிக்கின்றோம். அந்நிய ஆதிக்கத்துக்கு எதிரான முதல் போராட்டத்தையே  'முதல் விடுதலைப்போர்' என அழைக்கின்றோம். அந்த வகையில்  தென் தமிழ்நாட்டின்  தென் கோடியில் திருநெல்வேலிச் சீமைப் பகுதியில்  பாஞ்சாலங்குறிச்சி பாளையப்பட்டினை ஆண்டு வந்த வீரபாண்டியக்கட்டபொம்மன்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முதல் விடுதலைக்குரலை எழுப்பி முதல் விடுதலைப்போரையும் நடத்தியவன் என வரலாறு கூறுகிறது.

வீரபாண்டியக் கட்டபொம்மன்  கி.பி. 1790 ஆம் ஆண்டு ஆட்சிக்கட்டிலில்  அமர்ந்துள்ளான். அதுவரையிலும் ஹைதராபாத் நிஜாம் மற்றும் ஆற்காடு நவாப்ஆகியோர்தான்  பாளையப்பட்டுகளில்  வரிவசூல் செய்யும் உரிமையைப்பெற்றிருந்தனர்.  அவ்வப்போது  அவர்களுக்காக  அவர்களின் பிரதிநிதிகள் என்ற முறையில்  ஆங்கிலேயர்களும்  வரி வசூல் செய்துள்ளனர்.  எனவே, கி.பி. 1790 ஆம் ஆண்டிற்கு  முன்னதாக நிஜாம்  மற்றும் நவாப்  போன்றவர்களின் முகவர்களாக,  பிரதிநிதிகளாக ஆங்கிலேயர்கள்  வரி வசூல் செய்ய வந்த சமயங்களில் அவர்களை எதிர்த்துப் போராடியவர்களை முதல் விடுதலைக்குரல் எழுப்பியவர்கள் என்றோ, விடுதலைப்போர் பரிந்தவர்கள் என்றோ சொல்ல இயலாது. ஆனால் கி.பி. 1790 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதவாக்கில்  ஆங்கிலேய அரசு தம்மிச்சையான ஒரு பிரகடனத்தின் மூலம்  பாளையப்பட்டுக்களில் வரி வசூல் செய்யும் உரிமையைத் தானே எடுத்துக்கொண்டது. தனித்த உரிமையோடும், முழு நிர்வாக உரிமை கொண்டாடியும் வரி வசூலில்  இறங்கி அதற்காக  திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி பகுதிகளுக்கு தனித்தனி  கலெக்டர்கள் நியமனம் செய்தது.  கி.பி. 1792 ல் தான் ஆங்கிலேய அரசு வரி வசூலுக்காக நிரந்தர அளவைகள் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதன் பேரில்  பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தில் நில அளவு எல்லைகளைத் தணிக்கை செய்வதற்கு  வந்த லெப்டினன்ட்  கர்னல் மேக்ஸ்வெல்  என்பவனைக் காண மறுத்து  அவனோடு வந்த ஆட்களையும்  விரட்டியடித்த 16.02.1792 அன்று ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான  தனது முதல் விடுதலைக்குரலை  எழுப்பிப் பதிவு செய்தான் மாவீரன் வீரபாண்டியக் கட்டபொம்மன்.

அதன் பிறகு  அவன் எந்தக் காலகட்டத்திலும்  ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு அடிபணியவுமில்லை. வரியும் செலுத்தவில்லை. ஆங்கிலேய அதிகாரிகள் பல ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து பார்த்தும்  அவன் அசையவில்லை. இப்படி பல ஆண்டுகளாக வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரி வசூலிக்க  இயலாமல் போன விரக்தியில் 05.09.1799 அன்று ஆங்கிலேயப் படைகள்  பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டு  போர் தொடுத்தன.  அதைத் தீரமுடன்  எதிர் கொண்ட கட்டபொம்மன் முதல் நாள் போரில் அதாவது 05.09.1799 அன்று நடந்த போரில்  வெற்றியையும் ஈட்டினான். அதன் பின் அவன் வஞ்சகத்தால் கைதியாக்கப்பட்டு,  16.10.1799 அன்று கயத்தாற்றில்  ஆங்கிலேயரால்  தூக்கிலிடப்படும் வரை ஆங்கிலேய அரசு மீதான எதிர்ப்பினை  கைவிடவே இல்லை. இப்படி ஆங்கிலேய அரசு தனித்தன  நிர்வாக உரிமை கொண்டாடி  அதிகார பலத்தோடு  கட்டாய வரி வசூலில்  இறங்கிய போது அதை எதிர்த்து முதல் விடுதலைக்குரல்  எழுப்பியது வீரபாண்டிய கட்டபொம்மனே என்றும் அந்த வகையில் அவன் 05.09.1799 அன்று ஆங்கிலேயருக்கு எதிராக வெற்றிகரமாக நடத்திய போரே முதல் விடுதலைப்போராகும். ஏன்றும் நந்திவர்மன் ஜீவன் என்கிற வரலாற்று ஆய்வாளர் தனது 'முதல் விடுதலைப்போர்' என்கிற வரலாற்று ஆய்வு நூலில்  தெளிவாகத் தீர்வு கண்டுள்ளார்.

'உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்' என்ற ஆய்வுஅமைப்பு செயல்பட்டு  வரும் உடுமலைப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதி தென்கொங்கு நாடு  என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலிச் சீமையிலே வீரபாண்டிய கட்டபொம்மன் முதல் விடுதலைக்குரலை  எழுப்பி முதல்  விடுதலைப்போரையும் நடத்தி இருப்பதைப் போல தமிழகத்தின்  இதர பகுதிகளில் யார் யார் அப்படி தேச விடுதலைக்காக முதல் விடுதலைக்குரல்  எழுப்பியுள்ளார்கள்? யார் அப்படி முதல் விடுதலைப்போரை நடத்தியுள்ளார்கள்? எனக் கண்டறியும் ஆர்வம் பொதுவாக அந்தந்த பகுதி மக்களுக்கு நிச்சயம் இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த வகையில், ' உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்' தென் கொங்கு பகுதியில் யார் அப்படி ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து  முதல் விடுதலைக்குரல் எழுப்பியது? யார் முதல் விடுதலைப்போரை நடத்தியது? எனக் கண்டறியும் முயற்சியில் இறங்கி,'தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர்' எனும் இந்த அருமையான நூலைவெளிக்கொணர்ந்துள்ளது. ஆய்வு நடுவத்தின் இந்த அரிய முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது ஆகும்.

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம் எந்த ஒரு சமுதாய சார்புக்கும் உட்பட்டதல்ல. அது ஒரு பொது அமைப்பு ஆகும். சாதி, மத சமுதாய அமைப்புகளைக் கடந்த பல்வேறு ஆய்வாளர்கள், சான்றோர்கள், ஊடகநிபுணர்கள் அதில் அங்கம் வகிக்கின்றனர். உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதாவது தென்கொங்கு நாட்டில் நடந்த வரலாற்று  நிகழ்வுகளைத் தொகுத்து ஆவணமாக்கி வெளியிடும் முயற்சியில்  இந்த ஆய்வு நடுவம்  இறங்கியுள்ளது என்று தெரிகிறது. இந்த ஆய்வு நடுவத்தின் பாரபட்சமற்ற தேடலுக்குப் பின்  முறையான ஆய்வுக்குப்பின்  அவர்கள் கண்டறிந்த உண்மை என்னவெனில் தென்கொங்கு நாட்டில் முதல் விடுதலைப்போரை நடத்தியது தளி பாளையப்பட்டினை ஆண்டு வந்த தளி எத்தலப்பர் மன்னர் என்பதே ஆகும்.  இந்த தளி பாளையப்பட்டு என்பது ஆதியில் ஏற்பட்ட தெலுங்கு மொழி பேசும் கம்பள பாளையப்பட்டுக்களில்  ஒன்று என்பதை நாம் ஏற்கனவெ பார்த்தோம். வீரபாண்டிய கட்டபொம்மனைப்போல இந்த எத்தலப்ப மன்னரும்  தொட்டியர்ஃ கம்பளத்தார் சமுதாயத்தைச்  சார்ந்தவர்கள்தான் அவருடைய முழுமையான  பெயர் எத்திலப்ப நாயக்கர் என்பதே ஆகும். ஒரு பொது அமைப்பான உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம் எத்திலப்ப நாயக்கரை சமுதாய ரீதியில் பார்க்காமல் எல்லா சமுதாய மக்களையும் உள்ளடக்கி ஒரு பாளையப்பட்டினை ஆண்ட அரசர் என்ற ரீதியில்  பார்த்து அவரை 'எத்திலப்ப மன்னர்' என்றே குறிப்பிட்டு இருப்பது ஏற்புடையதாகும்.

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம் வெளிக்கொண்டுவந்துள்ள தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர்' என்ற வரலாற்று ஆய்வு நூலின் கருதுகோள் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற விடுதலைப்போராட்ட வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்துவது என்று தெரிகிறது.  அந்த வகையில்  இந்த நூலை மொத்தம் ஐந்து இயல்களாகப் பிரித்து தொகுத்துக் கொடுத்துள்ளனர். பகுதி ஒன்றில்  தென்கொங்கு நாட்டின்பூகோள அமைப்புகளை அவர்கள் விவரித்துள்ளனர். பகுதி இரண்டில் தளி பாளையப்பட்டு பகுதியில் மக்களின் வாழ்வியல் முறைகளை விவரித்துள்ளனர். பகுதி மூன்றில்  தளி பாளையப்பட்டின் தனித்துவமான ஆட்சிமுறை விவரித்துக் கூறப்பட்டுள்ளது. பகுதி நான்கில் பாளையப்பட்டுக்களில் நடைபெற்று வந்த இரட்டை ஆட்சி முசை விவரிக்கப்பட்டுள்ளது. பகுதி ஐந்தில்  ஆங்கிலேயருக்கு எதிரான எத்திலப்ப மன்னரின் விடுதலைப்போர் நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டு அது எவ்வாறு  முதல் விடுதலைப் போரில் தளி பாளையப்பட்டின் பங்கு குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. எல்லா  பகுதிகளுக்கும்  ஆதாரமாகக் கொடுக்கப்பட்டுள்ள அடிக்குறிப்புகள் ஏராளம்.

நூலின்  பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள செய்திகளில் ஆங்கிலேய ஒற்றன் ஆண்ட்ரு கேதீசு பற்றிய செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 16.10.1799 ல் ஆங்கிலேயர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனை வரிகட்ட மறுத்த காரணத்தைச் சொல்லித் தூக்கிலிட்டுக் கொன்றதை மனதில் வைத்து குமுறிக்கொண்டிருந்த  எத்திலப்ப மன்னர் 23.04.1801 ல் தளி பாளையப்பட்டிற்கு வரி வசூலுக்குவழிவகை செய்து கொடுக்க ஒற்றனாக  வந்த ஆங்கிலேய அதிகாரி ஆண்ட்ரு கேத்தீசு  என்பவனைப் புளியமரத்திலே தூக்கிலிட்டுக் கொன்று ஆங்கிலேய அரசினைப் பழி தீர்த்தார். வரி செலுத்த மறுத்த பாளையக்காரர்கள் எல்லாம் ஆங்கிலேயர்கள் தூக்கில் போட்டுக்கொன்றார்கள் என்கிற செய்திகளையே படித்துப் படித்து நொடிந்து போன நமக்கு வரி வசூலிக்க  வந்த ஆங்கிலேயனையே தூக்கில் போட்டுக் கொன்று பழிதீர்த்தார் எத்தலப்ப மன்னர் என்கிற செய்தி ஓர் புதிய செய்தியாக மட்டுமல்லாது புத்துணர்வு ஊட்டுகிற செய்தியாகவும் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இத்தகைய அரிதான வீரத்தைக் காட்டிய எத்திலப்ப மன்னரை எவ்வளவு  பாராட்டினாலும் தகும். எனவே அவரது  அரிதான தீரச்செயல்  என்றென்றும் நினைவு கூறப்படும் வகையில் அவருக்காக தமிழக அரசு ஒரு மணி மண்டபத்தை எழுப்பித் தருமாயின் தேசப்பற்றுள்ள அனைவருக்குமே அது ஒரு வரப்பிரசாதமாக  அமையும் என்பதில் ஐயமில்லை. எனவே இதையே தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையாக வைத்து இந்த அணிந்துரையை நிறைவு செய்கிறேன்.நன்றி, வணக்கம்,


நல்வாழ்த்துக்களோடு

வி.தங்கராஜ் எம்.ஏ., எம்.எல்.,🙏🥰📗✒️📡🎙️

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰